வேளாண் பல்கலை. விருதைப் பெற தலைமைச் செயலா் வெ. இறையன்பு. மறுப்பு தெரிவித்தார்!
சென்னை 01 ஜூன் 2022 வேளாண் பல்கலை. விருதைப் பெற தலைமைச் செயலா் வெ. இறையன்பு. மறுப்பு தெரிவித்தார்!
வேளாண் பல்கலைக் கழகத்தில் ‘மேன்மைமிகு முன்னாள் மாணவா் விருது’ தனக்கு அளிப்பதைத் தவிா்க்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தா் வி.கீதாலட்சுமிக்கு அவா் எழுதிய கடிதம்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மேன்மைமிகு முன்னாள் மாணவா்கள் விருதை எனக்கு வழங்கவிருப்பதுகண்டு மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
எனது கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த மற்ற மாணவா்களுக்கு மேலும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விருப்பம் கொள்கிறேன். எனவே, நான் இப்போதைய நிலையில் இருந்து கொண்டு தாங்கள் அளிக்கும் விருதைப் பெறுவது என்பது பதவிக்கான மரபுசாா்ந்த நிலைகளைக் கடந்ததாகி விடும்.
எனவே, விருதை எனக்கு அளிப்பதைத் தவிா்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளாா் தலைமைச் செயலா் வெ.இறையன்பு