14 வருடங்களுக்குப் பிறகு உலக நாயகனின் கேள்விக்குக் கிடைத்த பதில் மாயோன் படக்குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு!!

சென்னை 02 ஜூன் 2022 14 வருடங்களுக்குப் பிறகு உலக நாயகனின் கேள்விக்குக் கிடைத்த பதில் மாயோன் படக்குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு!!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 2008ஆம் வருடம் வெளிவந்த தசாவதாரம் திரைப்படத்தில் கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்ற வசனத்தை தசாவதாரம் திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் பேசியிருப்பார்.

அவர் பேசிய அந்த வசனம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அனறு உலகநாயகன் கமலஹாசன் பேசிய வசனத்திற்கு 14 வருடங்களுக்கு பிறகு கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என உலக நாயகன் கமல்ஹாசன் பேசிய வசனத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக மாயோன் படக்குழுவினர் தெரிவித்துள்ளது.

இந்த மாயோன் திரைப்படத்தில் சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன்.

மாயோன் இநத மாயோன்
திரைப்படத்தை டபுள் மீனிங் புரடக்சன்ஸ நிறுவனத்தின் சார்பில் அருண்மொழி மாணிக்கம் அவர்கள் தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

திரைப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.

படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்கு பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் திரையரங்குகளில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்துடன் ஜூன் மூன்றாம் தேதி முதல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

500க்குமேலான திரையரங்குகளில் விக்ரம் படத்துடன் மாயோன் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது.

Read Also  'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றி உலகநாயகனை நேரில் அழைத்து கெளரவித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி.!

மேலும் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் தசாவதாரம் படத்தில் கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் வசனம் பேசி இருந்த நிலையில் அவருடைய அந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்கு பிறகு மாயோன் படத்தில் பதில் கிடைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

இதனால் மாயோன் திரைப்படம் சொல்ல வருவது என்ன? படத்தில் அப்படி என்ன பதில் இருக்கிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆவலும் அதிகரித்துள்ளது.

“மாயோன்” திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *