நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது விளம்பர சண்டை மும்பை காவல்துறை.

சென்னை 10 ஜூன் 2022 நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது விளம்பர சண்டை மும்பை காவல்துறை.

பிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் தந்தை சலீம்கானுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.

அந்த மிரட்டல் கடிதத்தில் நடிகர் சல்மான்கான், சலீம்கானுக்கும், சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் கதி விரைவில் ஏற்படும் என கூறப்பட்டு இருந்தது.

அந்த கடிதத்தில் ஜி.பி., எல்.பி. என குறிப்பிடப்பட்டு இருந்தது. இது பஞ்சாப்பை சேர்ந்த தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிராரை குறிப்பதாக கருதப்பட்டது.

இதையடுத்து நடிகர் சல்மான் கான் வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
.
இந்த கடிதம் தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மிரட்டல் கடிதம் கொடுக்க முன்று பேர் மும்பைக்கு வந்ததாகவும், அவர்கள் மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகளால் ஆறு மணி நேரம் விசாரிக்கப்பட்ட சௌரப் மகாகலை சந்தித்தனர் என்றும் மும்பை போலீசார் தெரிவித்தனர்.

மிரட்டல் கடிதம் கொடுத்த நபரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது விக்ரம் பரத் என்பது தெரிய வந்துள்ளது.

லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளியான பரத், தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.

இவர் மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

பிஷ்னாய் கும்பல் விளம்பர ஸ்டண்ட்டிற்காகவே மிரட்டல் விடுத்துள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published.