சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்!
சென்னை 12 ஜூன் 2022 சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்!
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
தற்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன் பல வருடங்களாக இருந்து வந்தார்.
கடந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ஜெ ராதாகிருஷ்ணனை மாற்றி பீலா ராஜேசை அந்த இடத்தில் அமர வைத்தனர்.
சிறிது காலம் மட்டுமே பீலா ராஜேஷ் சுகாதாரத் துறையின் செயலாளராக இருந்தார்.
பின்பு அவர் மாற்றப்பட்டு மீண்டும் ஜெ. ராதாகிருஷ்ணனுக்கு அந்த பதவியை வழங்கப்பட்டது.
2021 சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி
பதவியேற்றதும்.
ஜெ. ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
கொரோனா வைரஸ் நோய் பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணிகளை செய்தார் என்று பொது மக்கள் இடத்திலும் இவருக்கு நல்ல பெயரும், பாராட்டும் கிடைத்தது.
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல ஐ.பி.எஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்னும் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் அலை இன்னும் முழுவதும் ஓயாத பட்சத்தில் சுகாதாரதுறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டது பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.