சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை 12 ஜூன் 2022 சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது

வணிக வரித்துறை கமிஷனராக இருந்த கே.பணீந்திர ரெட்டி- உள்துறை செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் – வருவாய் நிர்வாகத்துறை கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் முகமது நசீமுதீன், தொழிலாளர் நலன் மற்றும் தனித்திறன் மேம்பாடு துறை செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் மேனேஜிங் இயக்குநர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் தீரஜ் குமார்- வணிகவரித்துறை கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய செந்தில்குமார்- தமிழக சுகாதாரத்துறை செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக விளையாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஆனந்தகுமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும்,

தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் தாரேஷ் அகமது ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் ஜெயகாந்தன், புவியியல் மற்றும் கனிம வளத்துறை செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

Read Also  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன், அமெரிக்கா செல்கிறார்.

புவியியல் மற்றும் கனிம வளத்துறை செயலாளர் நிர்மல் ராஜ், போக்குவரத்து துறை கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை செயலாளர் ஜெசிந்தா லசாரஸ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ், வணிகவரித்துறை இணை கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக சிவில் சப்ளை கார்பரேசன் கூடுதல் மேலாண் இயக்குநர் சங்கீதா, வணிக வரித்துறை நிர்வாக கூடுதல் கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி கலெக்டர் சிவராசு, கோவை, வணிகவரித்துறை கூடுதல் கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்த்துறை செயலாளர் மதிவாணன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

மரியம் பல்லவி பல்தேவ், தொழிற்சாலைகள் துறை கூடுதல் செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

மின்னணு நிர்வாகத்துறை இயக்குநர் விஜயேந்திர பாண்டியன், கருவூலம் மற்றும் அக்கவுண்ட் துறை கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லாவ்லீனா, உணவுபாதுகாப்பு துறை கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் முன்னாள் கலெக்டர் சந்திரகலா, தொழில் முதலீடு கழக இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை இணை செயலர் ஜான் லூயிஸ், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

அருங்காட்சியக துறை இயக்குநர் ராமன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

தட்கோ மேலாண் இயக்குநர் விவேகானந்தன், மாநில தேர்தல் ஆணைய செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை முன்னாள் கலெக்டர் விஜயராணி, சேலம் பட்டுநூல் வளர்ப்பு கழக இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

Read Also  24-வது கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.1.10 கோடி காசோலையை முதலமைச்சர் வழங்கினார்!

பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி கழக கமிஷனர் பிரகாஷ், வரலாறு மற்றும் காப்பகங்கள் கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளர் பிங்கி ஜோயல், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் கருணாகரன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

கருவூலத்துறை கமிஷனர் வெங்கடேஷ், போக்குவரத்து துறை சிறப்பு செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இணை கமிஷனர் சீதா லெட்சுமி, சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துறை இணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த உத்தரவில் தலைமை செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.

இது போன்று பல்வேறு துறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விரைவில் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் மிகப்பெரிய அளவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *