648 நபர்களுக்கு ரூ 6 லட்சம் மதிப்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கம்!

சென்னை 06 ஜூலை 2022 648 நபர்களுக்கு ரூ 6 லட்சம் மதிப்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கம்!
தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்பது அவரது ரசிகர்களால் கிட்டத்தட்ட ஒரு மாத அளவிற்கு மிகப்பெரிய திருவிழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் ஆரம்பத்தில் இருந்தே அவரது ரசிகர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வாக தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
தளபதி விஜய்யின் பிறந்தநாள் கடந்து சென்ற நிலையிலும் கூட அந்த கொண்டாட்டமும் நலத்திட்ட உதவிகளும் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டர் அணி தலைமை சார்பில், தாம்பரம் மார்க்கெட் சண்முகா சாலையில் ரூ 6 லட்சம் மதிப்பில் 648 நபர்களுக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி அகில இந்திய விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் 15 பேருக்கு தங்க நாணயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மேலும் 3 பேருக்கு இஸ்திரி பெட்டி, சாலையோர வியாபாரம் செய்யும் வியாபாரிகள் 10 பேருக்கு நிழற்குடை, நான்கு அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி, 200 பெண்களுக்கு புடவை, 200 பெண்களுக்கு நான் ஸ்டிக் தவா, 200 பள்ளி மாணவர்களுக்கு கைக்கடிகாரம் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த்.

Read Also  நூற்றிற்கும் மேற்பட்ட நாய்கள் நடித்துள்ள திரைப்படம் ‘ஓ மை டாக்'!

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் இயக்க பேச்சாளர்கள் பொள்ளாச்சி குட்டப்பன், இளைய தமிழன் ரமேஷ், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் மின்னல் வி.குமார், செயலாளர் அறிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் தாம்பரம் டாக்டர் கில்லி டி.சரத்குமார், செம்பாக்கம் செயலர் வி.அகிலன், பொருளாளர் அனீஸ், துணைத் தலைவர் ஜி.என்.விஜய் கிச்சா, துணை செயலாளர் சி ரமேஷ் கௌரவ தலைவர் என்வி ராஜேந்திரன் அமைப்பாளர் ஏ.கே மகேஷ், டி. ஹரிஷ் மற்றும் நகர தலைவர்கள் தாம்பரம் என்.சரவணன், வி.பாலாஜி, யு.ரஞ்சித், விஸ்காம் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *