கலர்ஸ் தமிழின் பிரபல “போட்டிக்குப் போட்டி” கேம் ஷோவின் இறுதிச் சுற்றில் வெற்றிவாகை சூடிய “வள்ளி திருமணம்” குழு!!

சென்னை 27 ஜூலை 2022 கலர்ஸ் தமிழின் பிரபல “போட்டிக்குப் போட்டி” கேம் ஷோவின் இறுதிச் சுற்றில் வெற்றிவாகை சூடிய “வள்ளி திருமணம்” குழு!!

சென்னை, 27 ஜுலை 2022:  இரு குழுக்களுக்கிடையே சற்றும் சளைக்காத கடும் போட்டி நிலவிய நிலையில் போட்டிக் போட்டி கேம் ஷோ நிகழ்வின் மாபெரும் இறுதிச்சுற்று நிகழ்வு, ஜுலை 24  ஞாயிறன்று நிறைவை எட்டியது.  மக்களுக்கு பயனளிக்கும் அர்த்தமுள்ள பொழுதுபோக்குச் சேனல் என புகழ் பெற்றிருக்கும் கலர்ஸ் தமிழில் பிரபலமான இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக நடன இயக்குனர் கலா மற்றும் நடன இயக்குனர் ஶ்ரீதர் பங்கேற்றனர்.  வியப்பூட்டும் அற்புதமான திறன்களை வெளிப்படுத்திய இனிய இரவாக இது அமைந்தது.  இரு குழுக்களும் கடுமையாக மோதிய நிலையில் இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர்களாக வள்ளித் திருமணம் குழு அறிவிக்கப்பட்டனர்.  கௌரவம்மிக்க வெற்றிக்கோப்பை இக்குழுவிற்கு வழங்கப்பட்டது.

மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட போட்டிக்குப் போட்டி என்ற இந்த சேனலின் ரியாலிட்டி ஷோ, தமிழ் பார்வையாளர்கள் மத்தியில் உடனடியாகவே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக உருவெடுத்தது.  இப்போட்டி நிகழ்வில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய வள்ளித் திருமணம் மற்றும் அபி டெய்லர் குழுக்களின் வெற்றிப் பயணத்தையும் மற்றும் அதில் இடம்பெற்ற சிறப்பான தருணங்களையும் சனி மற்றும் ஞாயிறன்று ஒளிபரப்பான எபிசோடுகள் பார்வையாளர்களுக்கு சிறப்பான விருந்தாக அமைந்ததில் வியப்பேதுமில்லை.

இந்த மாபெரும் இறுதிப் போட்டியானது, கேளிக்கையான விளையாட்டுகள் மற்றும் டான்ஸ் நிகழ்வுகளோடு பல சுற்றுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.  தனது மென்மையான, மனதை வருடுகின்ற குரலால் அற்புதமாகப் பாடி அனைவரையும் மெய்மறக்கச் செய்த இந்த கேம் ஷோவின் தொகுப்பாளினி பாவனா வழங்கிய இசைப்பாடல் இந்த இனிமையான இரவு நேரத்தின் சிறப்பான தருணமாக அமைந்தது. நடன இயக்கத்தில் ஜாம்பவானான பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் நிகழ்த்திய நடன அசைவுகள் பார்வையாளர்கள் அனைவரையுமே பரவசத்தில் மூழ்கடித்தது என்றே கூறலாம்.

Read Also  முத்துநகர் படுகொலை' படத்தை வெளியிடுவதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது - உயர் நீதிமன்றம்.

இந்த நிகழ்வின்போது நடன இயக்குனர் கலா மாஸ்டர் கூறியதாவது: “எண்ணற்ற  நிகழ்ச்சிகளில் நான் நடுவராக இருந்திருக்கிறேன்.  பாடல், நடனம் மற்றும் பிற தனித்துவமான திறன்கள் என அனைத்தையும் ஒருங்கிணைக்கின்ற ஒரு முழுமையான கேம் ஷோவிற்கு நடுவராக செயலாற்றியது இதுவே முதன்முறையாகும்.  பல நேரங்களில் வெளிப்படுத்தப்படாத,

இதுவரை மறைவாக இருந்த நேர்த்தியான திறன்களை இப்போட்டியின் பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்நிகழ்ச்சி இருந்தது.  தொலைக்காட்சி திரைகளில் மக்கள் பார்க்கின்ற சீரியஸான, உணர்ச்சிகரமான நடிப்பு என்பதிலிருந்து விலகி, இந்த நடிகர்களின் கேளிக்கையும், குதூகலமும் நிறைந்த மற்றொரு பக்கத்தை இந்நிகழ்ச்சி உண்மையிலேயே வெளிப்படுத்தியிருக்கிறது.  இப்போட்டி நிகழ்வு தொடங்கிய முதல் நாளிலிருந்தே தொடர்ந்து, நிலையாக சிறப்பான திறனை வெளிப்படுத்தியிருப்பதை கருத்தில் கொள்ளும்போது வள்ளித் திருமணம் குழுவினர் இந்நிகழ்ச்சியில் வெற்றிவாகை சூடியிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

இதைத்தொடர்ந்து பேசிய பிரபல நடன இயக்குனர் ஶ்ரீதர், “இந்நிகழ்ச்சியில் நடுவராக நான் இடம்பெறுவது இதுவே முதன்முறை.  இதில் நான் பெற்ற அனுபவம் உண்மையிலேயே பிரமிக்கச் செய்கிறது.  கேளிக்கையும், பொழுதுபோக்கும், மகிழ்ச்சியும் ஒன்றாக கலந்த மறக்க முடியாத வாரமாக இது இருந்தது.  இந்நிகழ்ச்சியில் படப்பிடிப்பு அரங்குகளில் இருந்த நாங்கள் அனைவருமே இதன் ஒளிப்பதிவு நேரத்தையும் மகிழ்ச்சியோடு அனுபவித்தோம் என்பதை இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்.  இந்த நடிகர்கள் தங்களது நிகழ்ச்சிகளில் முழு ஈடுபாட்டுடன் நடித்ததையும் மற்றும் அதற்குப் பிறகு வேடிக்கையும், கேளிக்கையும் நிறைந்தவர்களாக உடனடியாக மாறியதையும் காண்பது சற்றே நம்ப முடியாததாக இருந்தது.  ஒட்டுமொத்தமாக சில வார்த்தைகளில் இந்த நிகழ்ச்சி பற்றி கூறவேண்டுமென்றால், இதுவொரு “அற்புதமான அனுபவம்” என்றே நான் சொல்வேன்.” என்று குறிப்பிட்டார்.

Read Also  நகைச்சுவை நடிகர் விவேக் நினைவு நாளன்று புத்துயிர் பெற்றிருக்கும் கிரீன் கலாம், 1 கோடி மரங்களை விரைவில் நட திட்டம்.

இறுதிச்சுற்று நிறைவை எட்டியபோது 108 புள்ளிகள் முன்னணியுடன் வள்ளித் திருமணம் குழு, அபி டெய்லர் குழுவை தோற்கடித்து இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் என்ற கௌரவத்தை தனதாக்கிக் கொண்டது.  அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *