மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் பகுதி ராமானுஜபுரம் பத்திரகாளியம்மன் கோவில் 59ம் ஆண்டு உற்சவ விழா நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தை மதுரை மேயர் இந்திராணி தொடங்கி வைத்தார்.
இதில் பொறுப்புக்குழு உறுப்பினர் பி.டி.மணிமாறன், கோவில் டிரஸ்டி திராவிட மாரி, லேத் சிவா, ராமர் மற்றும் கோவில் நிர்வாகிகள் சக்திவேல், பால்பாண்டி, அன்புமணி, கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று (13.8.22) அக்னி சட்டி எடுத்தல், முளைப்பாரி மாவிளக்கு எடுத்து நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று (14.8.22) முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சியும் தொடர்ந்து வைகை ஆற்றில் அன்னதானமும், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.
இன்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பத்திரகாளியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்