பிரபல ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சென்னை 15 ஆகஸ்ட் 2022 பிரபல ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி இருந்தார் பிரபல ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணன்.
அவருடைய பேச்சு மிக பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது அதனால் பிரபல ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணன் தலைமறைவானார்.
தற்போது புதுச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பிரபல ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணனை கைது செய்துள்ளனர்.
பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது.
இந்த சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அப்போது தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று கூறியிருந்தார்.
இதனால் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பிரபல ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணனை கைது செய்ய கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த பிரச்சனையால் தலைமறைவாக இருந்த பிரபல ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணன் தற்போது கைதாகி இருப்பது தமிழ் திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.