நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், “நோ எண்ட்ரி” ஒரு புது அனுபவத்திற்கு தயாராகுங்கள் !

சென்னை 04 ஏப்ரல் 2022 நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், “நோ எண்ட்ரி” ஒரு புது அனுபவத்திற்கு தயாராகுங்கள் !

இயக்குநர் அழகு கார்த்திக் இயக்கத்தில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடிக்க, புதுமையான திரில்லராக, இந்தியாவில் முதன்முதலாக, முழுக்க முழுக்க சிரபுஞ்சியில் படமாக்கப்பட்ட படம் “நோ எண்ட்ரி”.

சுற்றுலாவிற்காக மேகாலயாவின் சிரபுஞ்சி செல்லும் ஒரு ஜோடி அங்கு தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது மனிதர்களை வேட்டையாடும் நாய்க்கூட்டத்திடம் மாட்டிக் கொள்ளும் அந்த ஜோடி அங்கிருந்து எப்படி தப்பிகிறது, என்பதை பரபர திரைக்கதையில் திரில் பயணமாக சொல்லும் படம் தான் “நோ எண்ட்ரி”. மேகலயாவில் உள்ள சிரபுஞ்சி எனும் சுற்றுலா தளம் இந்தியாவின் சிறப்புமிகு இடங்களில் ஒன்று அதன் காடுகளையும், மலைகளையும், மலைகளுக்கு நடுவே புதைந்து கிடக்கும் குகைகளையும் இந்த படமெங்கும் நீங்கள் பார்க்கலாம்.

காட்டுக்கு நடுவே கட்டப்பட்ட மூங்கில் வீட்டில் முரட்டு நாய்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்ட மனிதர்கள் நாய்களிடம் இருந்து தப்பிக்கும் சாகச காட்சிகள் படு அசத்தலாக படமாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரியா உண்மையில் நாய்காதலர் என்பதால் படத்தில் எந்த இடத்திலும் பயம் இல்லாமல், மிக எளிதாக நாய்களுடன் இணைந்து நடித்துள்ளார். நாய்களுக்கு ஸ்பெஷல் டிரெய்னிங் 25 நாள்கள் கொடுத்துள்ளார்கள்.
இதுவரையிலான தமிழ் சினிமாவில் இல்லாத புது அனுபவத்தை இந்தப்படம் தரும்.

கோவிடுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட இப்படம் பல தடைகளை கடந்து அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. படத்தில் பல காட்சிகள் ஹாலிவுட்டுக்கு இணையாக விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிஜி செய்யப்பட்டுள்ளது. இது தமிழில் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும்.

Read Also  சபாஷ் மிது படத்தின் முதல் டீஸர் மூலம் கிரிக்கெட் விளையாட்டின் விதியினுடைய சார்புகளை உடைத்தெறிந்துள்ளது.

நடிகை ஆண்ட்ரியா முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ரன்யா ராவ், ஆரவ் கண்ணதாசன், மானஸ், ஜெயஶ்ரீ ஆகியோருடன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் அழகு கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீதர் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் அஜீஸ் இசையமைக்க, ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *