டிடிவி தினகரன் திடீரென மருத்துவமனையில் அனுமதி!

சென்னை 02 செப்டம்பர் 2022 டிடிவி தினகரன் திடீரென மருத்துவமனையில் அனுமதி!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சையில் முகாமிட்டுள்ள டிடிவி தினகரன், நேற்றிரவு உணவு உட்கொண்டதில் ஒவ்வாமை (Food Poison) ஏற்பட்டதன் காரணமாக தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் நேற்றிரவு உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உணவு உட்கொண்டதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அங்கு அவருக்கு திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர் இன்றே டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.ங

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்ஸ பொதுச்செயலாளர்
டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *