வாரிசு” திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் தி தளபதி இன்று மாலை வெளியாகியுள்ளது.!!
சென்னை 04 டிசம்பர் 2022 “வாரிசு” திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் தி தளபதி இன்று மாலை வெளியாகியுள்ளது.!!
தளபதி நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் ‘தீ தளபதி’ இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இந்த பாடலை நடிகர் சிலம்பரசன் டிஆர் பாடியுள்ள நிலையில் தளபதி விஜய் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’. திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இநத வாரிசு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார்.
குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.
அண்மையில் ‘வாரிசு’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே… ரஞ்சிதமே… பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்தப் பாடலை நடிகர் விஜய்யுடன் இணைந்து எம்.எம்.மானசி பாட, பாடல் வரிகளை விவேக் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘தீ தளபதி’ பாடல் வெளியாகியுள்ளது.
இதனை நடிகர் சிலம்பரசன் டிஆர் பாடியுள்ளார்; விவேக் பாடலை எழுதியுள்ளார்.
நடிகர் விஜய் நடித்த ‘நாளைய தீர்ப்பு’ 04/12/1992 திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நடிகர் விஜய்யின் 30 ஆண்டு திரைத்துறை பயணத்தை முன்னிட்டு இந்தப் பாடல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு திரைப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தொடர்ந்து ஏதாவதொரு அப்டேட் கொடுத்து வருகின்றனர்.