ஆம்வே இந்தியா குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறது !!

ஆம்வே இந்தியா குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறது !!

ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தை மேம் படுத்துவதற்காக, ‘சிறந்த, ஆரோக்கியமான நாளைய தினத்துக்கான ஊட்டச்சத்து’ என்ற சிஎஸ்ஆர் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது

தாழ்த்தப்பட்ட சமுதாயக் குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்கள் பற்றிய கற்றல் பட்டறைகளை ஏற்பாடு செய்கிறது.

அக்ஷய பாத்ரா அறக்கட்டளையோடு பங்காளராக இணைந்து 1600 மாணவர்களுக்கு மதிய உணவை வழங்குகிறது ~

Chennai ,15 நவம்பர் 2022: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைப் பருவ ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதிலும், பின்தங்கிய சமுதாயக் குழந்தைகளிடையே ஆரோக்கியமான வாழ்க்கை, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நடைமுறைகளை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்திவரும் நாட்டின் முன்னணி எஃப்எம்சிஜி நேரடி விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஆம்வே இந்தியா, அதன் சிஎஸ்ஆர் பிரச்சாரத்தின் கீழ் ‘சிறந்த, ஆரோக்கியமான நாளைய தினத்துக்கான ஊட்டச்சத்து’ என்ற தலைப்பில் தொடர்ச்சியான முன்முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.

குழந்தைப் பருவ ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிப்பதற்கான முயற்சிகளை நாடு தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்நிலையில், ஆம்வே இந்தியா தனது ஊட்டச்சத்துக்கான சமூகத் திட்டமான பவர் ஆஃப் 5 மூலம் இதில் இணைந்தது. இதன் கீழ், மக்கள் சிறப்பாக, ஆரோக்கியமாக வாழ உதவும் தொலைநோக்குப் பார்வையுடன், பயனாளிகளின் ஆரோக்கியமான வாழ்க்கை, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நடைமுறைகள் ஆகியவற்றில் ஈடுபடும் மற்றும் ஊடாடும் அமர்வுகளின் மூலம் அது பிரச்சாரத்தை முன்னெடுத்தது. நாடு முழுவதும் பல இடங்களில் பள்ளி செல்லும் 1600 குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்குவதன் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவு செய்வதற்காக அக்ஷய பாத்ரா அறக்கட்டளையுடன் நிறுவனம் பங்காளராகச் சேர்ந்துள்ளது.

Read Also  திருட்டு வழக்கில் பாஜக மாவட்ட செயலாளர் மற்றும் அவருடைய சகோதரர் கைது.!

ஆம்வே இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு வட்டாரத்தின் மூத்த துணைத் தலைவர் திரு. சந்திர பூஷன் சக்ரவர்த்தி இந்த முயற்சி குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது, “குழந்தைகளே நமது நாட்டின் எதிர்காலம் ஆவார்கள். அவர்களை அக்கறையுடன் வளர்ப்பது என்பது முக்கியமானதாகும். மக்கள் சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழ உதவ வேண்டும் என்ற எங்கள் நோக்கத்திற்கு ஏற்ப, ஆம்வேயின், எங்கள் பவர் ஆஃப் 5 திட்டத்தின் மூலம், உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்தில் எங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி வருகிறோம். இதன் மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் களைய முயன்று வருகிறோம். இந்தக் குழந்தைகள் தினத்தில், ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த தொடர் அமர்வுகளுடன் குழந்தைகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கு, ஒட்டுமொத்த மேம்பாடு, வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்காகத் தொடர்ச்சியான ஆதரவை வழங்க  ‘சிறந்த, ஆரோக்கியமான நாளைய தினத்துக்கான ஊட்டச்சத்து’ என்ற எங்கள் சிஎஸ்ஆர் பிரச்சாரத்தை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது போன்ற அடிப்படையான முன்முயற்சிகள், அடிமட்ட அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒவ்வொருவரும் மாற்றத்தின் முகவர்களாக மாற வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கடந்த பல ஆண்டுகளாக, கல்வி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அவர்களுடைய பராமரிப்பாளர்களுக்கும் உதவுவதற்காகவும், அவர்களை மேம்படுத்துவதற்காகவும், ஊட்டச்சத்து மற்றும் விழிப்புணர்வு திட்டங்களில் ஆம்வே உத்தி ரீதியாக முதலீடு செய்து வருகிறது. குழந்தைப் பருவ ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான புதுமைகளுடன் அடிமட்ட அளவிலான முயற்சிகளைப் பயன்படுத்தி, இந்தியாவில் அதன் உலகளாவிய புகழ்பெற்ற பவர் ஆஃப் 5 திட்டங்களை நிறுவனம் விரிவுபடுத்துகிறது. இதுவரை, ஆம்வேயின் பவர் ஆஃப் 5 திட்டத்தினால் தில்லி, நுஹ் மற்றும் கொல்கத்தா முழுவதும் 36,000 குழந்தைகள் உட்பட 1,30,000 பேருக்கு மேல் பயனடைந்துள்ளனர் மேலும் அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் 400,000 பயனாளிகளைச் சென்றடைவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆம்வே இந்தியா ஒரு புதுமையான நுண்ணூட்டச் சத்தை அறிமுகப்படுத்தியது – நியூட்ரிலைட் லிட்டில் பிட்ஸ்™, இரத்தச் சோகை போன்ற நுண்ணூட்டச் சத்து குறைபாட்டைக் கட்டுப்படுத்த தினசரி அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை இது வழங்குகிறது.

Read Also  வயதான காலத்தில் பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு எழுதி வைத்த சொத்துக்களை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உண்டு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *