Vi நிறுவனம் தமிழகத்தில் புதிய 50 Vi விற்பனை மையங்கள் மூலம் கிராமப் புறங்களில் சில்லறை வர்த்தகத்தை மேலும் விரிவுப்படுத்துகிறது!
சென்னை 15 நவம்பர் 2022 Vi நிறுவனம் தமிழகத்தில் புதிய 50 Vi விற்பனை மையங்கள் மூலம் கிராமப் புறங்களில் சில்லறை வர்த்தகத்தை மேலும் விரிவுப்படுத்துகிறது!
- மிகப் பெரிய சில்லறை வர்த்தக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக 5 மண்டலங்களில் பரவலாக 300 புதிய Vi விற்பனை மையங்கள் வாயிலாக கிராம மக்களை டிஜிட்டலுடன் இணைக்கிறது
- 3-ம் நிலை நகரங்களில் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரே தளத்தில் அனைத்து சேவைகளையும் வழங்கும் ஒற்றை சாளர சேவை மையங்களாக இந்த புதிய Vi விற்பனை மையங்கள் செயல்படும்.
கடந்த சில ஆண்டுகளாக மிக துரிதமான பிராண்ட்பேண்ட் வளர்ச்சியானது நாட்டில் டிஜிட்டல்மயமாதல் அதிகமாவதற்கு வழிவகுத்து இருக்கிறது. மேலும் இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படாத 500 மில்லியன் மக்களை இணைப்பதன் மூலம் டிஜிட்டல்மயமாதல் வளர்ச்சியை முன்னெடுக்க, இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான வோடஃபோன் ஐடியா லிட் (Vi) நிறுவனம் தனது பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத வகையில் தனது பிரம்மாண்டமான சில்லறை வர்த்தக விரிவாக்கத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
துணை மாவட்ட அளவில் அதன் சில்லறை வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில், Vi நிறுவனம் தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறிய நகரங்களில் தனது புதிய வகையிலான Vi விற்பனை மையங்களை திறந்துள்ளது. உசிலம்பட்டி, இல்லுப்பூர், நாகப்பட்டினம், பழனி, திருவள்ளூர், அரக்கோணம், அரியலூர், போன்ற சிறிய நகரங்களில் Vi நிறுவனத்திடமிருந்து விரைவான, நோடியான சேவையை அதன் விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும் இப்பகுதியில் உள்ள இத்தலைமுறையைச் சேர்ந்த இளம் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான தயாரிப்புகளையும் சலுகைகளையும் பெறலாம்.
5 மண்டலங்களில் அனைத்து அம்சங்களையுன் உள்ளடக்கிய ஒரு முழுமையான சில்லறை வர்த்தக செயல்பாடுகளை தொடங்குவதுடன், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மேற்கு உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு சிறிய நகரங்களில் Vi நிறுவனம் 300 புதிய வகையிலான Vi விற்பனை மையங்களை திறக்க உள்ளது. வரவிருக்கும் சில மாதங்களில் கிராமப்புற சந்தைகளை உள்ளடக்கும் வகையில் Vi நிறுவனம் தனது சில்லறை வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துவதன் வாயிலாக, அதன் உள்ளூர் செயல்பாடுகளை கூடுதலாக வலுப்படுத்தவும், மொபைல் போன் வாடிக்கையாளர்களுடனான தனது மேலான உறவை உறுதியானதாக மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
3 -ம் நிலை நகரங்களில் உள்ள Vi விற்பனை மையங்களை விரிவுப்படுத்தும் திட்டமானது, வாடிக்கையாளர்களுக்கு விரைவான, எளிமையான, எளிதில் பெறக்கூடிய சீரான Vi அனுபவத்தை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே நகர்ப்புறங்களில் உள்ள Vi விற்பனை மையங்களை போன்ற வடிவமைப்பு மற்றும் கட்டமைப்புடன் இந்த புதிய வகையிலான விற்பனை மையங்கள் இருக்கும். தொழில் நுட்பத்தில் பெரும் பரீட்ச்சயம் இல்லாத வாடிக்கையாளர்களுக்கும் Vi விற்பனை மையங்கள் ஒட்டுமொத்தமான Vi ப்ரிபெய்டு தயாரிப்புகளையும் சேவைகளையும் எளிதில் கிடைக்கச் செய்வதுடன். Vi -ன் அனைத்து வகையான சேவைகளையும் கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அனுபவத்தையும், ஈடுபாட்டையும் மேம்படுத்துவதற்கு இது வழி வகுக்கிறது.
இந்த புதிய வகை விற்பனை மையங்கள் மூலம், ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு சேவைகளை வழங்குவதன் வாயிலாக, கிராமப்புற வாடிக்கையாளர்களுடனான தனது பிணைப்பை Vi நிறுவனம் மேலும் வலுப்படுத்தவும், வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்படுத்துதல், அரசு தேர்வு பயிற்சி, ஆங்கில மொழித் திறன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க கூடுதல் பலன்களையும் அளிக்கவும் விரும்புகிறது.
புதிய சில்லறை வர்த்தக தொடக்கம் தொடர்பாக வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் சி.ஓ.ஓ. திரு. அபிஜித் கிஷோர் [ Abhijit Kishore, COO, Vodafone Idea Limited ] பேசுகையில், “மிக வேகமாக மாறி வரும் சூழல் மற்றும் வாடிக்கையாளர்கள் விருப்பங்களை பூர்த்தி செய்யும் புதுமையான கருத்துகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவதில் Vi நிறுனம் எப்போதும் முன்னிலையில் உள்ளது. கிராமப்புற இந்தியாவில் இன்னும் ஏராளமான அளவில் உள்ள வாடிக்கையாளர்கள், சில்லறை வர்த்தக மையங்கள் மூலமாக நேரடியான, இலகுவான, இயல்பான சேவைகளை எதிர்நோக்கியுள்ளனர். மேலும், இந்தியாவில் கிராமப்புறங்களில் மொபைல் இணையதள பயன்பாடுகள் அதிகரிக்கத்து வருகின்றன. இந்த தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, கிராமப்புறங்களில் எங்களது சில்லறை வர்த்தகத்தில் புதிய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளோம், எங்களது Vi விற்பனை மையங்கள் வாயிலாக சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். இம்முயற்சியினால் லட்சக்கணக்கான இந்தியர்கள் டிஜிட்டல்மயமாக்குதல் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இயலும். மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் உள்ள பல்வேறு 3 -ம் நிலை நகரங்களில் Vi வாடிக்கையாளர்கள், தங்களுக்கு அருகில் உள்ள Vi விற்பனை மையங்களுக்கு சென்று, நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள் வாயிலாக மிகச் சிறந்த சூழலில், சேவைகளை எளிதாக பெற இயலும்” என்றார்.
ஒரே மாதிரியான தோற்றத்துடன் கூடிய உலகளாவிய வடிவமைப்பிலான, ஒற்றை சாளர சேவைக்கான சில்லறை விற்பனை மையங்களை முன்பே அறிமுகம் செய்தது Vi. நாளுக்கு நாள் மாறிவரும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப Vi நிறுவனம் புதிய கிராமப்புற ப்ரீபெய்டு வீற்பனை மையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. Vi விற்பனை மையங்களின் தோற்றமும், உற்சாகமான அனுபவமும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதோடு, Vi -ன் ஒட்டுமொத்த அணுகுமுறையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய 5 மண்டலங்களில் Vi நிறுவனம் மிகவும் வலுவான சந்தையை கொண்டுள்ளது. சிறந்த எதிர்காலத்திற்கான 5ஜி சேவையை வழங்க உள்ள, Vi நிறுவனம் இந்த 5 மண்டலங்களிலும் எதிர்காலத்தில் 5ஜி அலைகற்றை சேவையை வழங்குவதற்கான உரிமத்தை பெற்றுள்ளது. வேளாண் துறையின் ஸ்மார்ட் அக்ரி, சுகாதாரம், கல்வி, இம்மெர்சிவ் கிளவுட் கேமிங், பொது பாதுகாப்பு, பணியாளர் பாதுகாப்பு மற்றும் பிற தொழில்துறை 4.0 செயலிகள் [SmartAgri, Healthcare, Education, Immersive Cloud Gaming, Public Safety, Worker Safety and other Industry 4.0 applications] போன்ற பிரிவுகளில் வாடிக்கையாளர்களுக்கும், தொழில்துறைகளுக்கும் பயன் தரக்கூடிய 5ஜி அடிப்படையிலான பயன்பாட்டு சேவைகளை உருவாக்கியுள்ளது.. இது தொடர்பாக அண்மையில் டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் மாநாட்டில் 5ஜி நெட்வொர்க்கில் நேரலையாக நிகழ்த்தியும் காட்டப்பட்டது.
வோடஃபோன் ஐடியா நிறுவனம் பற்றி..
வோடஃபோன் ஐடியா நிறுவனம் என்பது ஆதித்ய பிர்லா குழுமம் மற்றும் வோடஃபோன் குழுமத்தின் கூட்டு நிறுவனமாகும். இது, இந்தியாவின் முன்னணி தொலைதொடர்புச் சேவை வழங்குநராகச் செயல்படுகிறது. இந்தியா முழுவதும் 2ஜி, 3ஜி, 4ஜி தளங்களில் குரல் மற்றும் டேட்டா சேவைகளை இந்நிறுவனம் அளிக்கிறது. டேட்டா மற்றும் குரல் தேவை அதிகரிப்புக்கு உதவும் வகையில் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் போர்ட்போலியோவுடன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவங்களை அளிப்பதில் நிறுவனம் உறுதியாக உள்ளது. 17 சர்க்கிள்களில் mid band 5G spectrum மற்றும் 16 சர்க்கிள்களில் mmWave 5G spectrum என பெரும் ஸ்பெக்ட்ரமை தன்வசம் வைத்திருக்கிறது. உண்மையான ‘டிஜிட்டல் இந்தியா’ உருவாகப் பங்களிப்பைத் தந்து நாட்டிலுள்ள குடிமக்களை ஒன்றாக இணைத்து நாளைய பொழுதைச் சிறப்பாகக் கட்டமைக்க உதவுகிறது. புதிய, சிறப்பான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை வளர்க்கும் இந்நிறுவனம், எதிர்காலத்துக்குத் தயாராகும் வகையில் சில்லறை மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்குப் புதுமையான சலுகைகளை அளிக்கிறது. நாடெங்கும் உள்ள விற்பனை மையங்கள் மட்டுமல்லாமல் டிஜிட்டல் சேனல் சூழல் அமைப்பிலும் இதனை எளிதில் அணுக முடியும். இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச் சந்தையில் (BSE) இந்த நிறுவனம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு “Vi” எனும் டிஎம் பிராண்ட் பெயரின் கீழ் தனது திட்டங்கள், சேவைகளை வழங்குகிறது இந்நிறுவனம்.
மேலும் விவரங்களுக்கு, : www.MyVi.in என்ற இணையதளத்தை அணுகவும்.