குழந்தைகள் தினத்தை கொண்டாடிய அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்.!!

சென்னை 14 நவம்பர் 2022 குழந்தைகள் தினத்தை கொண்டாடிய அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்.!!

“நிஜ ஹீரோக்களை சந்தித்த திரையுலக ஹீரோக்கள்”

  • சூப்பர் ஹீரோக்கள் மற்றும் கார்ட்டூன் கதாபாத்திரங்களோடு இந்நாளை மகிழ்ச்சியோடு அனுபவித்த குழந்தைப்பருவ புற்றுநோய் சேம்பியன்கள் 

சென்னை: நவம்பர் 14, 2022: தெற்காசியா மற்றும் மத்தியக்கிழக்கு பிராந்தியத்தின் முதல் மற்றும் ஒரே புரோட்டான் தெரபி மையம் என புகழ்பெற்றிருக்கும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர், குழந்தைகள் தினத்தை இன்று குதூகலமாகவும், வித்தியாசமாகவும் கொண்டாடியது.  குழந்தைப் பருவத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டு, அதனை எதிர்த்துப் போராடும் சேம்பியன்களும் மற்றும் சூப்பர் ஹீரோக்களாகவும் மற்றும் கார்ட்டூன் கதாபாத்திரங்களாகவும் தத்ரூபமாக ஆடை அணிந்த பட்ரீஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஸ்கூல் ஆஃப் மீடியா ஸ்டடீஸ் – ன் மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  மகிழ்ச்சிகரமான பங்கேற்ற சின்னஞ்சிறு குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை அனைவரது முகங்களிலும் புன்னகைகளை வரவழைத்த உற்சாகமும், உத்வேகமும் நிறைந்த நிகழ்வாக இது இருந்தது. 

புற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்ற இந்த குழந்தைப் போராளிகள், நாடெங்கிலும் பலருக்கு உத்வேகம் அளித்திருக்கின்ற குழந்தை மேதைகள் சிலரையும், அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்ச்சியின்போது சந்தித்தனர்.  தமிழ்நாடு மாநிலத்தின் கராத்தே சேம்பியன் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனத்தில் 2 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்திய சாதனையாளர் என புகழ் பெற்றிருக்கும் மிஸ். L.G. அக்‌ஷயா (13) மற்றும் மாநிலத்தின் செஸ் சேம்பியனும் மற்றும் திரிபுரா என்ற வடகிழக்கு மாநிலத்திலிருந்து செஸ் சேம்பியனாக சாதனை படைத்திருக்கும் முதல் சிறுமியுமான மிஸ். அஷ்ரியா தாஸ் (12) மற்றும் ஏஆர். ரகுமான் ஃபவுண்டேஷனால் நடத்தப்படும் KM மியூசிக் கன்சர்வேட்டரியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இசை கற்று வரும் மிஸ். கீர்த்தனா ஶ்ரீராம் (12) மற்றும் மிஸ். பிராத்தனா ஶ்ரீராம் (9) ஆகிய பிரபல ஆளுமைகள் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.  த விருது வென்றவரும்

Read Also  இன்சுலினின் மறக்கப்பட்ட வரலாறு: பிரபல நீரிழிவு சிகிச்சை மருத்துவர் டாக்டர். வி. மோகன் எழுதிய புத்தகம் வெளியீடு !

அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் குழுமத்தின் புற்றுநோயியல் துறை இயக்குனர் திரு. ஹர்ஷத் ரெட்டி, இக்கொண்டாட்ட நிகழ்வு பற்றி உற்சாகத்தோடு தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டபோது, “எமது மையத்தில் சிகிச்சை பெறும் இளம் புற்றுநோய் போராளிகளது முகத்தில்  அவர்களது ரீல் (திரையுலக) ஹீரோக்களை சந்தித்த பிறகு தோன்றிய மகிழ்ச்சி உணர்வு பிரமிக்கச் செய்தது. நோயாளிகள் மீது எப்போதும் சிறப்பு கவனத்தோடு சேவை செயல்பாட்டை மேற்கொள்வது என்ற அப்போலோவின் மிக முக்கியமான குறிக்கோளை ஒட்டியதாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.  அவர்களுக்குத் தேவைப்படும் சிறந்த சிகிச்சையையும், கவனிப்பையும் வழங்குவதே அப்போலோவின் செயல்பாடாக இருக்கிறது.  இந்த இளம் நெஞ்சங்களுக்கு சிறந்த மருந்தாக மகிழ்ச்சி இருப்பதால் இக்குழந்தைகளுக்கு திரைப்படங்களின் மூலம் உத்வேகமளிக்கும் கதாபாத்திரங்களை உயிரோட்டமுள்ளதாக அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் கொண்டு வந்தது. மிக நவீன, மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையை அணுகிப் பெறுவதற்கு 170-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் திகழ்கிறது.  புற்றுநோய்க்கு எதிராக தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் துணிந்து போராடி வெற்றி காண அப்போலோ அவர்களுக்கு உதவி வருகிறது.” என்று கூறினார். 

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை துறையின் தலைவர் மற்றும் மருத்துவ இயக்குனர் டாக்டர். ராகேஷ் ஜலாலி இதுகுறித்து கூறியதாவது: “இந்நாட்டில் மிகவும் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையை வழங்குவது மட்டுமின்றி, முழுமையான குணமடைதல் என்ற இலக்கை நோக்கிய 360-டிகிரி அணுகுமுறைக்காக அதிகம் தேவைப்படும் கனிவான, அன்பான கவனிப்பையும் வழங்கி வருகிறது.  ஒவ்வொரு குழந்தையின் மருத்துவ நிலையும், தொடர்புடைய அனைத்து சிறப்பு மருத்துவர்களை உள்ளடக்கிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சைக் குழுவில் விவாதிக்கப்படுகிறது.  பாரபட்சமற்ற வழிமுறையில், சாத்தியமுள்ள சிறந்த சிகிச்சை விளைவுகளைப் பெறுவதற்கு சிறப்பான கலவையிலான சிகிச்சை குறித்து ஒரு முடிவு அவ்விவாதக் கூட்டத்தில் எடுக்கப்படுகிறது மற்றும் அக்குழந்தைகளின் பெற்றோர்களோடு அது பகிர்ந்து கொள்ளப்படுகிறது.  சிகிச்சை குறித்து முடிவெடுக்கும் செயல்பாட்டை இந்த அணுகுமுறை மேம்படுத்தியிருப்பதும், அத்துடன் சவாலான சூழல்களில் சிகிச்சை விளைவுகளை மேம்படுத்தியிருப்பதும் அறியப்பட்டுள்ளது.” 

Read Also  கல்லீரல் நோய்வாய்ப்பட்ட தந்தையைக் காப்பாற்ற 33 வயது இளம் தாய் கல்லீரல் தானம்!!

தமிழ்நாடு மாநிலத்தின் கராத்தே சேம்பியன் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனத்தில் 2 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்திய சாதனையாளர் என புகழ் பெற்றிருக்கும் மிஸ். L.G. அக்‌ஷயா இந்நிகழ்வின்போது கூறியதாவது: “தங்களது வாழ்க்கையில் மிக கடினமான தருணங்களை வெற்றிகரமாக சமாளித்துக் கடந்திருக்கின்ற நிஜ உலக ஹீரோக்களோடு இந்நிகழ்வில் கலந்துகொள்வது எனக்கு கிடைத்திருக்கும் மிகச்சிறப்பான வாய்ப்பாகும்.  அவர்களால் நாம் அனைவருமே உத்வேகமும், நம்பிக்கையும் பெற்றிருக்கும் நிலையில், இனிவரும் ஆண்டுகளில் புதிய விருப்பங்களுடன் பேரார்வத்துடன் கூடிய மனைநிறைவு தரும் வாழ்க்கையை அவர்கள் வாழ்வார்கள் என்று நான் நம்புகிறேன்.  எதிர்காலத்தில் சாதனைகளைப் படைக்கும் அவர்களது கனவுகள் நிஜமாகும் என்பது எனது விருப்பமாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது.” 

சிக்கலான அறுவைசிகிச்சைகளுக்கு மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் 360 டிகிரி என்ற முழுமையான சிறப்பு சிகிச்சை பராமரிப்பை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் வழங்குகிறது.  ரோபோட்டிக் அறுவைசிகிச்சை, கதிரியக்க புற்றுநோயியல் சிகிச்சை, புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங் செயல்பாடு, புற்றுநோயியலில் உயிர்காக்கும் சிகிச்சை, நியூக்ளியர் (அணு) மருத்துவம், மறுவாழ்வு சிகிச்சை, உயர்நிலை நோயறிதல் சோதனைகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் ஆய்வு சோதனைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்டிருக்கும் 50-க்கும் அதிகமான புற்றுநோயியல் மருத்துவர்கள் மற்றும் அறுவைசிகிச்சை நிபுணர்கள் இம்மருத்துவமனையில் பணியாற்றுகின்றனர்.  எலும்பு மற்றும் மென்திசு புற்றுநோய், மார்பக புற்றுநோய், இரையக குடலியல் புற்றுநோய், சிறுநீர் பாதை புற்றுநோய், கழுத்து மற்றும் தலை பகுதிகளில் புற்றுநோய், குழந்தைப்பருவ புற்றுநோய், மூளையில் புற்றுநோய், மகளிர் பிறப்புறுப்பில் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் என பல்வேறு வகைப்பட்ட புற்றுநோய்களுக்கு உலகத்தரத்திலான மருத்துவ சிகிச்சையையும், அறுவைசிகிச்சை சேவைகளையும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் வழங்கி வருகிறது.  

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *