அரச குடும்பங்களுக்கு நகைகளை வடிவமைத்து வழங்கிய 150 ஆண்டு பாரம்பரியமிக்க சி. கிருஷ்ணய்யா செட்டி ஜுவல்லரி குழுமம் சார்பில் சென்னை மைலாப்பூரில் 3 நாள் நகை கண்காட்சி.!!
அரச குடும்பங்களுக்கு நகைகளை வடிவமைத்து வழங்கிய 150 ஆண்டு பாரம்பரியமிக்க சி. கிருஷ்ணய்யா செட்டி ஜுவல்லரி குழுமம் சார்பில் சென்னை மைலாப்பூரில் 3 நாள் நகை கண்காட்சி.!!
சென்னை 25 மார்ச் 2023 அரச குடும்பங்களுக்கு நகைகளை வடிவமைத்து வழங்கிய 150 ஆண்டு பாரம்பரியமிக்க சி. கிருஷ்ணய்யா செட்டி ஜுவல்லரி குழுமம் சார்பில் சென்னை, மைலாப்பூரில் உள்ள விஜே ஜுவல்லரி விஷன், சம்மர் பேலசில் மார்ச் 25 முதல் 27 வரை 3 நாட்கள் நகைகள் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் பாரம்பரிய மற்றும் தற்போதை காலத்திற்கேற்ற நவீன வடிவமைப்பிலான தனித்துவமான தொகுப்புடன், தூய்மையான தங்கம் மற்றும் ரத்தினங்கள் மற்றும் சிறந்த கைவினைத்திறன் கொண்ட நகைகள் இடம்பெற்று உள்ளன.
இந்த கண்காட்சியை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் டாக்டர் என். அருள் நடராஜன், திரைப்பட தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
சி. கிருஷ்ணய்யா செட்டி ஜூவல்லர்ஸ் குழுமத்தின் நகைகள், ரத்தின கற்கள், மஞ்சள், ஆரஞ்சு நிறத்திலான சிட்ரைன் கற்கள், முத்துக்கள், மாணிக்க கற்கள் மற்றும் சிறந்த வைரங்களுடன் கூடிய அரிய வகை கற்களைக் கொண்ட நகைகள் உன்னதமான பாரம்பரிய பாணியின் உணர்வைக் கொண்டுவருகின்றன.
விதவிதமான நகைகள்
சிறப்புமிக்க இந்த கண்காட்சியில் செழுமை நிறைந்த, உயர் மதிப்புக்க, திருமணத்திற்கு ஏற்ற பெரிய வைரங்களுடன் கூடிய ஏராளமான நகைகள் இடம் பெற்றுள்ளன. இவை முக்கியமான திருவிழாக்கள், திருமணம் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் அணிவதற்கு ஏற்ற வகையில் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
திருமண நகைகள்
ஒவ்வொரு பெண்ணும் மிகவும் அழகான விதவிதமான நகைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த வகையில் பெண்களை கவரும் வகையில் பலவிதமான நகைகளை நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியமிக்க சி. கிருஷ்ணய்யா செட்டி ஜுவல்லரி வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. இங்கு மணப்பெண்களுக்கென்றே ஏராளமான டிசைன்களில் நகைகள் உள்ளன. இவை தங்கம், வைரம் மற்றும் ரத்தினக் கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை 22 காரட் மற்றும் 18 காரட் தங்கத்தில் தயாரிக்கப்படுகின்றன.
பாரம்பரிய நகைகள்
இங்கு இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு ஏற்ற ஏராளமான டிசைன்களில் நகைகள் உள்ளன. இவை மஞ்சள் நிற கற்கள், வைரம், மாணிக்கம், மரகத கற்கள் மற்றும் பல இயற்கை ரத்தினங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் தென்னிந்தியா மற்றும் தக்காண பீடபூமி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய நகைகள் இடம் பெற்றுள்ளன. இந்த பாரம்பரிய நகைகள் தற்போதைய நவீன காலத்திற்கேற்ப சிறு சிறு மாற்றுங்களுடன் சிறப்பாக மரபுகள் மாறாமல், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உருவங்கள் பொறித்து வடிவமைக்கப்படுகின்றன.
வாசனைமிக்க சென்ட்
இந்திய வாசனை திரவிய சந்தையானது பாரம்பரியமிக்க வரலாற்று பின்னணியைக் கொண்டுள்ளது. இந்த ஜுவல்லரியின் ‘ரேர் சென்ட்’ என்னும் பிராண்டானது இந்தியாவின் ஒரே பிரீமியம், ஆடம்பர வாசனை திரவிய பிராண்டாக உள்ளது. உண்மையான 24 காரட் தங்கத்துடன் அரிய வாசனைகள் 5 நேர்த்தியான வகைகளில் அதாவது அடமாஸ், ஆரம், பெரில், கொருண்டம் மற்றும் பிளாட்டினம் ஆகிய பெயர்களில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ரேர் சென்ட் குறித்து சி. கிருஷ்ணய்யா செட்டி நகைக் கடையின் செயல் இயக்குனர் சைதன்யா வி கோதா கூறுகையில், ஆடம்பர வாசனை திரவியங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பிரிவு எங்கள் ஜுவல்லரி சார்பில் துவக்கப்பட்டது. இதை உலகளாவிய பிராண்டுடனும் போட்டியிடும் வகையில், முதல் உயர்தர இந்திய வாசனை திரவியமாக தயாரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே இந்த பிரிவை நாங்கள் துவக்கினோம். எங்களின் ஆடம்பரமிக்க மற்றும் அழகான நகைகளின் வடிவமைப்பிற்கேற்ப வாசனை திரவியமும் மிகவும் சிறப்பாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இந்த பிரத்யேக நகைகள் கண்காட்சி மார்ச் 25 முதல் 27 வரை மைலாப்பூர் விஜே ஜுவல்லரி விஷன், சம்மர் பேலசில் காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறுகிறது. இங்கு பாரம்பரிய மற்றும் தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் தனித்துவமான தொகுப்புகளுடன் கூடிய நகைககள் இடம்பெறுகிறது. அக்ஷய திருதியை சிறப்பு சலுகையாக 1 காரட் வைர நகை வாங்குபவர்களுக்கு 2 கிராம் தங்க காசு, 1 கிராம் தங்கம் வாங்குபவர்களுக்கு 3 கிராம் வெள்ளிக் காசு இலவசமாக வழங்கப்படுகிறது.