இளைஞர்களின்  வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் ‘பியூச்சர் X’ 2-ம் கட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளை துவக்கியது!

இளைஞர்களின்  வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் ‘பியூச்சர் X’ 2-ம் கட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளை துவக்கியது!

  • திறமையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இந்த திட்டம் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது
  • மைக்கேல் & சூசன் டெல் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்துகிறது

சென்னை 27 செப்டம்பர் 2023 –கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் லாப நோக்கமில்லாமல் செயல்படும் முன்னணி அறக்கட்டளையான மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளை தனது புதுமையான 2-ம் கட்டபியூச்சர் Xஎன்னும் இளைஞர்களுக்கான வாழ்வாதார திட்டத்தை துவக்கியது.  

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் இளைஞர்களுக்கு 21–ம் நூற்றாண்டின் வாழ்வாதாரம் மற்றும் வேலைக்கான திறன்களை அளிப்பதோடு, அதன் மேம்பட்ட கற்றல் பாதைகள் மூலம் இளைஞர்கள் பெரிய அளவில் வெற்றி பெற தொழில்நுட்ப திறனைப் பயன்படுத்துகிறது. இந்த திட்டத்தை கடந்த 2020–ம் ஆண்டு முதல் இந்நிறுவனம் மைக்கேல் & சூசன் டெல் அறக்கட்டளை இணைந்து செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தை பெங்களூருவில் சுங்கடகட்டே, சென்னையில் தாம்பரம் சானடோரியம், அடையாறு, செகந்திராபாத், ஐதராபாத்தில் பஞ்சாகுட்டா, மும்பையில் கோவண்டி,டெல்லியில் பீராகர்ஹி ஆகிய 5 முக்கிய நகரங்களில் 7 மையங்கள் மூலம் இந்த அறக்கட்டளை செயல்படுத்த உள்ளது

இப்பகுதியில் உள்ள வேலை வாய்ப்புகளை மதிப்பீடு செய்து, இளைஞர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் மேஜிக் பஸ் இந்த மையங்களை திறந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலானோர் முறையான வேலை வாய்ப்பை தேடுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் தேவையான வாழ்க்கை முறை வேலைவாய்ப்பு திறன்கள் வேலைக்கு செல்வதற்கான தேவையான உதவி ஆகியவை இவர்களிடம் இல்லை

Read Also  கவனத்துடன் சாப்பிடுவதற்கும் குடும்ப ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் ஒரு கைப்பிடி பாதாம்.!!

பியூச்சர் X திட்டமானது இந்தியாவில் உள்ள திறமையானவர்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து அவர்கள் மூலம் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது நிறுவன செயல்திறன் மற்றும் தரமான செயலாக்கத்தை மேம்படுத்தும் போது சிறப்பான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம், மதிப்புச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்தையும் (ஒன்று திரட்டுதல், கற்றல் பாதைகள், பயிற்சி, வேலை வாய்ப்பு, பிந்தைய வேலை வாய்ப்பு மற்றும் தொடர்ச்சியான கற்றல் மூலம் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்தல்) உற்சாகமானதாக்கும் வகையில் இளைஞர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை வழங்க அதிநவீன தொழில்நுட்ப தளத்தை உருவாக்கும். இந்த திட்டத்தை நடப்பு ஆண்டில் (2023-2024) 4 ஆயிரம் இளைஞர்களுக்கு கொண்டு செல்ல மேஜிக் பஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் இதை வரும் 2027–ம் ஆண்டு இறுதிக்குள் 23 மையங்களை திறந்து ஒட்டுமொத்தமாக 70 ஆயிரம் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி செல்லும் இளைஞர்களில் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் மறைமுகமாக பலன் பெறுவார்கள்

இது குறித்து மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளையின் உலகளாவிய தலைமை செயல் அதிகாரி  ஜெயந்த் ரஸ்தோகி கூறுகையில், எங்களின் பியூச்சர் X திட்டம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். வரும் ஆண்டுகளில் இந்த திட்டத்தை லட்சக்கணக்கான இளைஞர்களிடம் கொண்ட செல்ல இருக்கிறோம். இதில் உள்ள தொழில்நுட்பமானது ஒவ்வொரு தனிப்பட்ட இளைஞர்களின் வாழ்க்கை பயணம் முழுமையாக வெற்றி அடையும் வகையில் விரிவான திட்டங்களைக் கொண்டுள்ளது. கற்றல் பயணத்தில் அவர்களுக்கு உதவிடும் வகையில் செலவு குறைந்த செயற்கை நுண்ணறிவு அடைப்படையிலான தொழில்நுட்பங்களை நாங்கள் ஒருங்கிணைத்துள்ளோம். எங்களின் முக்கிய நோக்கம் இளைஞர்களை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்வதாகும், அதற்காக நாங்கள் மைக்கேல் & சூசன் டெல் அறக்கட்டளையுடன் இணைந்துள்ளோம் என்று தெரிவித்தார்.

Read Also  இந்தியா தான்சானியா வர்த்தக ஆணையம் துவக்க விழா நடைபெற்றது.

பியூச்சர் X திட்டம் பன்முகத்தன்மை கொண்டதாகும். அது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை மையமாகக் கொண்ட தனிப்பட்ட அமர்வுகள், குழுப் பணி மற்றும் பியர்டுபியர் கற்றல் மூலம் கற்றல் மேம்பாடு, அத்துடன் டிஜிட்டல் மற்றும் ஆங்கில கலந்துரையாடல் அமர்வுகள் உள்ளிட்ட பல்வேறு கற்றல் முறைகளை வழங்குகிறது. இதன் மூலம் எந்தவித தயக்கமும் இன்றி பணியில் சேருவதற்கான நம்பிக்கை இளைஞர்கள் இடையே ஏற்படுகிறது. அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கான சந்தேகங்களை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் சாட் வசதி மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வீடியோக்கள் ஆகியவற்றின் மூலம் இளைஞர்களுக்கான கற்றல் மற்றும் திறன்கள் மேம்படும் என்று இந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளை

மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளை இந்தியாவில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறையில் உள்ள முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. கடந்த 24 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 72 இடங்களில் தனது மையங்களை இந்த அறக்கட்டளை கொண்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த 12 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களை குழந்தைப் பருவத்தில் இருந்து அவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு வாழ்க்கைத் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புத் திறன்களை அளித்து வருகிறது.

Read Also  தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆதித்யராம் குழுமத்தின் பிரமாண்ட அரண்மனை ஈசிஆரில் திறப்பு!

குழந்தைப் பருவத் திட்டம் இளம் பருவத்தினருக்கு (12-18 வயது) வாழ்க்கைத் திறன் மற்றும் கல்வி மேம்பாட்டுடன் அவர்களை இடைநிலைக் கல்வியை முடிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கென 302 சமூகக் கற்றல் மையங்கள் உள்ளன. இது இதுவரை 2,770 பள்ளிகளை சென்றடைந்து இருப்பதோடு, இதன் மூலம் 51 சதவீத பெண்கள் பலன் அடைந்துள்ளனர். வாழ்வாதாரத் திட்டமானது இளைஞர்களை (18-25 வயது) அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் திறன்களைக் கொண்டிருப்பதோடு, வளர்ந்து வரும் வேலைச் சந்தைக்கு ஏற்ப அவர்களை தயார்படுத்தி வருகிறது. 95 வாழ்வாதார மையங்கள், 825 கல்லூரி ஒத்துழைப்பு மற்றும் 8 தொழில் முனைவோர் காப்பீட்டு மையங்கள் ஆகியவற்றுடன், இத்திட்டத்தில் 56 சதவீத இளம் பெண்கள் சேர்ந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, மேஜிக் பஸ் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை அளித்துள்ளதோடு, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை இந்தியா முழுவதும் நல்ல நிறுவனங்களில் பணி அமர்த்தியுள்ளது. மேலும் சிறப்பான செயல்பாட்டிற்காக இந்த அறக்கட்டளை சமீபத்தில் சிறந்த சமூக தொண்டு நிறுவனத்திற்கான அசோசெம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. மேலும் இந்தியாவின் சிறந்த 10 சமூக தொண்டு நிறுவனங்களில் இது ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *