தமிழ்க அரசு பேருந்து டயர் வெடிப்பு – ஒட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு.!

சென்னை 12 டிசம்பர் 2022 தமிழ்க அரசு பேருந்து டயர் வெடிப்பு – ஒட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் எனும் இடத்தில் போடியிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தின் முன் பக்க டயர் வெடித்து நெடுஞ்சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளனது.

இதில் ஒட்டுநர் சசிக்குமார் என்பவர் பேருந்து சாமர்தியத்துடன் சாலையின் நடுவே உள்ள தடுப்பி இயக்கி பேருந்து கவிழ்ந்து விடாமல் பத்திரமாக நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தார்.

ஒட்டுநர் நடத்துனருடன் 35க்கும் மேற்பட்ட பயணிகள் இப் பேருந்தில் பயணித்த நிலையில் யாருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை.

பேருந்தை சாதுர்யமாக இயக்கி பெரும் விபத்தை தவிர்த்த பேருந்து ஒட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.,

இச்சம்பவம் தொடர்பாக வாலாந்தூர் காவல் நிலைய போலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *