சாம்கோ மியூச்சுவல் ஃபண்டு அறிமுகம் செய்யும் “டைமர்எஸ்டிபி”!
சென்னை 20 செப்டம்பர் 2022 சாம்கோ மியூச்சுவல் ஃபண்டு அறிமுகம் செய்யும் “டைமர்எஸ்டிபி”!
சந்தைகளை அறிவியல் ரீதியாக கணக்கிடவும் மற்றும் இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு பெஞ்ச்மார்க் அளவைவிட அதிக லாபத்தை உருவாக்குவதற்குமான ஒரு முயற்சி!
சாம்கோ அசெட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் (சாம்கோ ஏஎம்சி) டைமர்எஸ்டிபி – ஐ முதன்முறையாக அறிமுகம் செய்கிறது
அதிகமாக முதலீடு செய்வதற்கான சரியான நேரத்தையும் மற்றும் பங்குகளில் குறைவாக முதலீடு செய்வதற்கான நேரத்தையும் தீர்மானிப்பதற்கு ஈக்விட்டி மார்ஜின் ஆஃப் சேஃப்டி இன்டெக்ஸ் (EMOSI) என்பதை பயன்படுத்துவதன் மூலம் அறிவியல் ரீதியாக முதலீட்டாளர்களுக்கு தவறான நேரத்தைப் பெறாமல் இருப்பதற்கான திட்டம் இது.
டைமர்எஸ்டிபி உடன் பாதுகாப்பு விளிம்பு கோட்பாட்டை அறிவியல் ரீதியாகப் பயன்படுத்த முனைகின்றவாறு தினசரி வெளிப்படைத்தன்மையுடன் EMOSI -ஐ வெளிப்படுத்துகின்ற முதல் ஏஎம்சி ஆக இந்தியாவில் இது இருக்கும்.
சென்னை, செப்டம்பர் 20, 2022: சாம்கோ மியூச்சுவல் ஃபண்டு அறிமுகம் செய்யும் “டைமர்எஸ்டிபி”.
பாதுகாப்பு விளிம்பு முதலீட்டு கோட்பாட்டின் மீது சார்ந்திருக்கின்ற சாம்கோ – ன் சொந்த உரிமைத்துவ ஈக்விட்டி மார்ஜின் ஆஃப் சேஃப்டி இன்டெக்ஸ் (EMOSI) என்பதன் உதவியோடு சமப்பங்குகளில் அதிகமாக முதலீடு செய்வதற்கான சரியான நேரத்தையும் மற்றும் குறைவாக முதலீடு செய்வதற்கான நேரத்தையும் தீர்மானிக்கின்ற ஒரு கருவியே டைமர்எஸ்டிபி. ஆகவே, சந்தைகள் உயர்ந்திருக்கும்போது, எச்சரிக்கையுடன் முதலீடு செய்யுமாறு EMOSI சமிக்கைகளை வழங்குகிறது.
சந்தைகள் குறைந்து காணப்படுகையில், முதலீட்டாளர்களுக்கு அதிகபட்ச ஈக்விட்டி வெளிப்படுதலை உறுதி செய்கிறவாறு அதிகமாகவும், தீவிரமாகவும் முதலீடு செய்ய இது அனுமதிக்கிறது.
உணர்வுரீதியான பாரபட்சம் ஏதுமின்றி, சந்தைகளில் முதலீடு செய்ய இது ஏதுவாக்குகிறது.
தொடர்ந்து நிலையாக சந்தைகளை கண்காணிப்பதில் வரக்கூடிய மனஅழுத்தத்தை அகற்றுகிறது.
மற்றும் உயர்வான லாப, வெகுமதி / இடர் விகிதாச்சாரத்தை வழங்க இது முனைகிறது.
ஒரு சராசரி முதலீட்டாளர் செய்கின்ற 2 பொதுவான பிழைகளில்தான் டைமர்எஸ்டிபி ன் முதற்கோள் சார்ந்திருக்கிறது.
முதலாவதாக, கும்பலாக / கூட்டமாக செயல்படும் மனநிலையைப் பின்பற்றி, சுழற்சியின் உச்சத்தில் இருக்கும்போது அல்லது FOMO ரேலியை பின்பற்றி பங்குகளை கவனக்குறைவாக ஒரு சராசரி முதலீட்டாளர் வாங்குகிறார்.
இரண்டாவதாக, அதிக நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மற்றும் சக நபர்களது அழுத்தத்தின் காரணமாக, கணிசமான அளவு சரிவை சந்தித்திருக்கின்ற ஒரு குறிப்பிட்ட நிறுவன பங்குகளை ஒரு சராசரி முதலீட்டாளர் விற்றுவிட்டு அதிலிருந்து வெளியேறுகிறார்.
ஆனால், அத்தகைய பிழைகள் / பவர்களைத் தவிர்ப்பதற்கான ரகசியம் என்பது, சந்தைகளில் தவறான நேரத்தை பெறாமல் இருப்பதில் தான் அடங்கியிருக்கிறது.
மிகச்சரியாக உச்சத்தை அல்லது அடிமட்ட அளவை சரியாக கணிப்பது முக்கியமல்ல.
சந்தைகள் ஏற்கனவே உயரத்தை நோக்கி சென்றிருக்கும்போது தாமதமாக அதில் நுழைவதை தவிர்ப்பதும் மற்றும் உச்சத்திலிருந்து சந்தைகள் ஏற்கனவே ஒரு பெரிய அளவிலான இறக்கத்தை கண்டிருக்கும்போது இன்னும் தாமதமாக அவற்றிலிருந்து வெளியேறுவதை தவிர்ப்பதும் தான் அதிக முக்கியமானது.
முதலீடு செய்கின்ற நேரத்தின் சரியான மேலாண்மை என்பது, பெஞ்ச் மார்க் அளவை விட அதிக லாபத்தை / வருவாயை உருவாக்குவதும் மற்றும் அதே வேளையில் சரிவுகளை திறனுடன் சமாளிப்பதும் ஒரு இன்றியமையாத அம்சமாகும்;
அதிக பயமும், கலக்கமும் உள்ள நேரங்களில் ஆதார / மூல திட்டத்திலிருந்து தீவிரமான முதலீடுகளை இலக்கு திட்டத்திற்கு செய்வதற்கு கூடுதல் ஆதாயப்பலன்களை இடம்பெறுமாறு உள்ளீடு செய்யும் வகையில் சாம்கோ – ன் ஓவர்நைட் ஃபண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், சந்தை சுழற்சிகளை தவறாக கணிப்பதை தவிர்ப்பதற்கு மிகையுணர்ச்சி காலத்தின்போது அவசரப்படாமல் காத்திருப்பதும் இதில் உள்ளடங்கும்.
இந்தியாவில் முதன் முறையாக, பெஞ்ச்மார்க் இன்டெக்ஸ் – ன் தினசரி EMOSI – ஐ சாம்கோ ஏஎம்சி வெளியிடும்
பெஞ்ச்மார்க் இன்டெக்ஸ் (குறியீட்டு) அளவை விட ஒரு சராசரி முதலீட்டாளர் குறைவான திறனில் செயல்படுவதற்கான முதன்மை காரணங்களுள், உணர்வுகளில் அவர் மூழ்கிவிடுவதும் மற்றும் நடைமுறை சார்ந்த பாரபட்சங்களை எதிர்கொள்வதும் ஒன்றாக இருக்கிறது.
இத்தகைய உணர்வுகளிலிருந்து விலகி, தனித்திருப்பதற்கு எப்போது முதலீடு செய்வது மற்றும் சமப்பங்குகளில் முதலீடு செய்வதை எப்போது தவிர்ப்பது என்பதை சுட்டிக்காட்டுவதற்கு ஒரு அறிவியல் ரீதியான அணுகுமுறை தேவைப்படுகிறது.
சந்தைகள் கவர்ச்சிகரமாக இருக்கும்போதெல்லாம் EMOSI உயர்வதாலும் மற்றும் சந்தைகள் கவர்ச்சியற்றதாகவும், செலவு மிக்கதாகவும் இருக்கும்போது EMOSI குறைவதாலும் பலநோக்கு சந்தை குறியீடுகளுக்கு எதிர்விகிதச் சமஅளவில் செயல்படும் வகையில் EMOSI வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
எதிர்பாராத நஷ்டங்களை எதிர்கொள்ளாமல், சாத்தியமுள்ள, இடர்நீக்கிய ஈட்டு வீதத்தை (ஆல்ஃபா) உருவாக்க சமப்பங்குகளில் ஒரு சராசரி முதலீட்டாளர் முதலீடு செய்வதை இது ஏதுவாக்குகிறது.
சாம்கோ மியூச்சுவல் ஃபண்டு அதன் வலைதளத்தில் தினசரி அடிப்படையில் பெஞ்ச்மார்க் இன்டெக்ஸ் ன் EMOSI இன்டிகேட்டரை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தும்.
EMOSI என்பது 1-200 என்பதற்கு இடைப்பட்ட மதிப்பீடுகளின் வீச்செல்லையால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.
இதில் 1 என்பது பாதுகாப்பின் மிகக்குறைவான விளிம்பையும் மற்றும் 200 என்பது, மிக அதிக விளிம்பையும் குறிக்கிறது.
சந்தை அளவுகள் மற்றும் பாதுகாப்பின் விளிம்பின் அடிப்படையில், ஆதார (சோர்ஸ்) திட்டத்திலிருந்து, இலக்கு திட்டத்திற்கு 0.01X லிருந்து 6X வரை அடிப்படை தவணையின் 6 மடங்கு வரை இருக்கின்ற வேறுபடுகின்ற தொகைகளை சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (STP) மாற்றுவதற்கு டைமர்எஸ்டிபி ஐ EMOSI அனுமதிக்கும்.
ஈக்விட்டிக்கு விலை, GDP-க்கு மார்கெட் கேப், வட்டி விகித பரவல்கள், கடன் பத்திரங்களின் ஈட்டங்கள், நகர்கின்ற சராசரிகள், சந்தை அகல சுட்டிக்காட்டல்கள், நிலையான திட்ட விலக்கங்கள், புட் கால் விகிதங்கள் மற்றும் அளவுகள் போன்ற தொழில்நுட்ப மற்றும் அடிப்படையான பகுப்பாய்வு ஆகிய இரண்டின் பல்வேறு கோட்பாடுகள் மற்றும் கருத்தாக்கங்களை ஒருங்கிணைப்பதன் கூலம் இது உருவாக்கப்படுகிறது.
முதலீட்டு உலகில் அவசியமான அனைத்து நகரும் / மாற்றம் காணும் அம்சங்களின் ஒரு கலவையே சாம்கோ – ன் பிரத்யேகமான EMOSI இன்டிகேட்டர் உருவாவதற்கு வழிவகுத்திருக்கிறது. –
-சாம்கோ மியூச்சுவல் ஃபண்டு மேலாளர் திரு. நிரலி பன்சாலி இது குறித்து கூறியதாவது: “சில்லரை (ரீடெய்ல்) முதலீட்டாளர்கள் திறனதிகாரம் பெறச்செய்வதும் மற்றும் அவர்களது முதலீட்டுப் பயணத்தில் விவேகமான முடிவுகளை செய்ய அவர்களை அனுமதிக்கின்ற தீர்வுகளை வழங்குவதுமே சாம்கோ மியூச்சுவல் ஃபண்டின் குறிக்கோளாகவும், செயல்திட்டமாகவும் இருக்கிறது.
டைமர்எஸ்டிபி – ன் மூலம் தவறான நேரத்தில் சந்தையில் ஒரு சராசரி முதலீட்டாளர் நுழைவதை தவிர்க்கவும் மற்றும் சந்தையின் சுழற்சிகளில் திறம்பட பயணிக்கவும் நாங்கள் ஏதுவாக்குகிறோம்.
பெரிய அல்லது சிறிய முதலீட்டாளர்கள் உட்பட, அனைவரும் நீண்டகால அடிப்படையில் இடர் சரிகட்டப்பட்ட அதிக லாபத்தை ஈட்டுவதன் மூலம் பலனடைவதற்கு மைய முதலீட்டு கோட்பாடுகளை உள்ளடக்குவதன் வழியாகவும் மற்றும் தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்துவதன் வழியாகவும் நாங்கள் செயல்உத்திகளை கட்டமைக்கிறோம்.”
சாம்கோ குழுமத்தின் தென்மண்டல தலைமை அலுவலரான திரு. எஸ். அனந்தராமன் பேசியதாவது:
“சென்னையில் எமது செயல்பாட்டை விரிவாக்குவதிலும் மற்றும் எமது பிரத்யேக டைமர்எஸ்டிபி மூலம் ஓவர்நைட் ஃபண்டை அறிமுகம் செய்வதிலும் நாங்கள் அதிக உற்சாகம் கொண்டிருக்கிறோம்.
பின்புல செயல்பாடுகளில் நன்கு பரிசோதிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் எமது EMOSI, மிகச்சரியான மொத்தத்தொகை இன்டிகேட்டராக செயல்பட்டிருக்கிறது.
ஏனெனில் EMOSI உயரும்போது சராசரி 3/5 ஆண்டு ரிட்டன்ஸ் உயர்கிறது மற்றும் EMOSI குறையும்போது ரிட்டன்ஸ் – ம் குறைகிறது.”
சாம்கோ அசெட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் https://www.samcomf.com/ என்பது, செபி பதிவு எண். MF077/21/03 என்பதுடன் 1003-A, 10-வது தளம், நமான், மிட்டவுன், சேனாபதி பபட் மார்க், பிரபாதேவி (வெஸ்ட்), மும்பை 4000013 என்ற முகவரியில் தனது பதிவு அலுவலகத்தைக் கொண்டிருக்கிற சாம்கோ மியூச்சுவல் ஃபண்டின் அசெட் மேனேஜராகும். இதன் ஸ்பான்சரான
சாம்கோ செக்யூரிட்டிஸ் லிமிடெட் (ஸ்பான்சர்) குறித்து:
சாம்கோ செக்யூரிட்டிஸ் லிமிடெட் https://www.samco.in/ என்பது மும்பையில் தலைமையகத்தைக் கொண்டு டிஸ்கவுன்ட் புரோக்கிங் தொழில்துறையில் 250000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களோடு இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வரும் வெல்த் – டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்திய முதலீட்டு சந்தைகளில் தீவிரமாக வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற அல்லது முதலீடு செய்கின்ற தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கட்டுபடியாகக்கூடிய செலவில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
இதற்கு அல்கோரிதங்கள், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவை இது பயன்படுத்துகிறது.
சாம்கோ டிரஸ்டி பிரைவேட் லிமிடெட் (டிரஸ்டி நிறுவனம்) குறித்து: சாம்கோ டிரஸ்டி பிரைவேட் லிமிடெட் என்பது சாம்கோ மியூச்சுவல் ஃபண்டின் டிரஸ்டியாகும். 1003-A, 10-வது தளம், நமான், மிட்டவுன், சேனாபதி பபட் மார்க், பிரபாதேவி (வெஸ்ட்), மும்பை 4000013 என்ற முகவரியில் இதன் பதிவு அலுவலகம் இயங்குகிறது.
பொறுப்புத்துறப்பு: மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தை இடர்பாடுகளுக்கு உட்பட்டவை; ஸ்கீம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும். கடந்தகால செயல்பாடு, எதிர்கால செயல்பாடுகளுக்கான ஒரு சுட்டிக்காட்டல் அம்சமாக இருக்காது.