ஆதரவற்ற குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த சேவாலயாவுடன் கைகோர்க்கும் நவீன்’ஸ்.!

சென்னை 27 டிசம்பர் 2022 ஆதரவற்ற குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த சேவாலயாவுடன் கைகோர்க்கும் நவீன்’ஸ்.!

குடியிருப்புவிளக்கத்தை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்றிணைந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு பொம்மைகளை பரிசலித்தனர்*

சென்னை, டிச.27, 2022 ஆதரவற்ற குழந்தைகளின் முகத்தில் புன்னகையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக புதியதோர் முயற்சியை சென்னையின் பிரபல கட்டுமான நிறுவனமான நவீன்’ஸ் முன்னெடுத்துள்ளது.

அதன்படி இந்நிறுவனம் சேவாலயா சமூக தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ‘உங்கள் பொம்மையை தாருங்கள் மகிழ்ச்சியை பரிசளியுங்கள்’ என்னும் திட்டத்தை துவக்கி உள்ளது.

இதன் மூலம் குழந்தைகளிடையே தாராள மனப்பான்மையை ஊக்குவிக்கும் விதமாக நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் அளித்த ஆயிரக்கணக்கான பொம்மைகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கி அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நவீன்’ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் என்னும் நாவின்ஸ் இன் குடியிருப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் இக்குடியிர்ப்பில் இருக்கும் குழந்தைகளுடன் நாவின்ஸ் வைட் பெர்ரி, நவீன் ஈடன் கார்டன் எனும் நாவின்ஸ் இந் மற்றும் பல அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குழந்தைகளும் கலந்துகொண்டு சேவாலயாவுடன் இணைந்து இந்த பொம்மைகள் குழந்தைகளுக்கு பரிசாக வழங்கினர்.

சேவாலயா அமைப்பு ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 16 மையங்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இது குறித்து நவின்ஸ் கட்டுமான நிறுவனத்தின் முதன்மை இயக்கு அலுவலர் – COO, திரு கல்யாணராமன் கூறுகையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி மகிழ்ச்சியை அனைவரிடத்திலும் பரப்பும் விதமாக, நவீன்’ஸ் மற்றும் சேவாலயா ஆகியவை இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன.

Read Also  ஆஸ்திரேலியா, மண்டல சிவில் கடல்சார் பாதுகாப்பில் தனது அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது!

இதன் மூலம் ஆதரவற்ற குழந்தைகளிடையே அன்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்த முடியும். மேலும் அவர்களின் வாழ்க்கை பிரகாசமாக இருக்க அன்பை அவர்களிடையே பரப்புவது அவசியம் ஆகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வீடுகளை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் எப்படி அக்கறையாக செயல்படுகிறோமோ அதேபோல சமூகத்தின் மீதும் நாங்கள் அக்கறை செலுத்துகிறோம்.

இந்த பொம்மை பரிசளிப்பு திட்டம் ஆதரவற்ற குழந்தைகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, இந்த விடுமுறை காலத்தை அவர்கள் உற்சாகமாக கழிக்க முடியும் என்று நம்புகிறோம். மேலும், இந்த திட்டத்தை வெற்றியடையச் செய்த சேவாலயா உள்ளிட்ட எங்களின் கூட்டு நிறுவனங்களுக்கு நான் இத்தருணத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

பாராட்டுக்குரிய இந்த முயற்சி குறித்து சேவாலயாவின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு முரளிதரன் கூறுகையில், “பெரும்பாலும் ஆதரவற்ற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்களின் ஆசைகளுக்கும் மகிழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் தற்போது நவீன்’ஸ் மேற்கொண்டுள்ள முயற்சி குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் நாங்களும் அவர்களுடன் இணைந்து இருப்பது மேலும் எங்களை உற்சாகமடையச் செய்திருக்கிறது. ‘உங்கள் பொம்மையை தாருங்கள் மகிழ்ச்சியை பரிசளியுங்கள்’ என்னும் இந்த திட்டம் உண்மையிலேயே வரவேற்கத்தக்க திட்டமாகும். அதற்காக நான் நவீன்’ஸ் நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதரவற்ற குழந்தைகளின் மனநிலையை அறிந்து, அதேசமயம் பொருளாதாரத்தில் முன்னேற்றிய குழந்தைகளிடம் இருந்து கொடுக்கக்கூடிய மனோபாவத்தையும் ஊக்குவிப்பதை இந்த திட்டம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்”.

Read Also  சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.!

நவீன்’ஸ் மேற்கொண்டு வரும் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் இந்த திட்டமும் ஒன்றாகும்.

இந்நிறுவனம் ஏற்கனவே ‘நடமாடும் விதைகள்’, ‘நவீன்’ஸ் சமையலறை தோட்டம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும் இதுபோன்ற பல்வேறு சமூகத் திட்டங்களை வரும் காலங்களிலும் இந்நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

நவின் ஸ்டார்வுட் நலன்புரி சங்கத்தின் தலைவர் திரு பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்டார்வுட் டவர்ஸின் பொது மேலாளர் திரு பிரபாகரன் ஆகியோரின் ஆதரவுடன் இந்த மாபெரும் நிகழ்வு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *