பிரபல ரவுடி படப்பை குணா மேலும் ஒரு குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை 22 மார்ச் 2022 பிரபல ரவுடி படப்பை குணா மேலும் ஒரு குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சரணடைந்த குணா பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் நில அபகரிப்பு வழக்கிலும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இரும்பு கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த குற்ற வழக்கில் கொலை மிரட்டல் விட்டதாக இவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பெயரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி குண்டர் சட்டம் பதியப்பட்டது.

படப்பை குணா கைது செய்வதற்கு முன்பு இவர் ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் ஒரு ஆண்டு நன்னடத்தை விதியின் கீழ் குற்ற செயலில் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவை மீறி குற்றச்செயலில் ஈடுபட்டார்.

இதனால் விதிமீறல் காரணம் காட்டி கடந்த மாதம் 16ஆம் தேதி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டதில் விதியை மீறியதாக 340 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது படப்பை குணா மேலும் ஒரு குண்டர் சட்டம் பாய்ந்து  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *