உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் கிடைத்த வாய்ப்புகளை வீணாக்கி விடக்கூடாது தமிழக முதல்வர் ஸ்டாலின்!

சென்னை 14 ஏப்ரல் 2022 உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் கிடைத்த வாய்ப்புகளை வீணாக்கி விடக்கூடாது தமிழக முதல்வர் ஸ்டாலின்!

கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மாநகராட்சி மேயர் நிர்வாகப் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியாக நினைக்காமல் பொறுப்பாக கருதி செயல்பட வேண்டும்.

மக்களாட்சி தத்துவத்தின் மகத்தான வளர்ச்சியை எட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும்.

மக்களாட்சி தத்துவத்திற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள்தான் நம்பிக்கை.

மக்களுக்காக மக்களுடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.

மக்களோடு இருங்கள், மக்களுக்காக இருங்கள், இதையே பேரறிஞர் அண்ணா அறிவுறுத்தியுள்ளார்.

முதல் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் நான்தான்.

உனக்கு மக்கள் கொடுத்தது மேயர் பதவி இல்லை, மேயர் பொறுப்பு என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் என்னிடம் தெரிவித்தார்.

அவர் கூறியதுபோல் நீங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.

அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

கிடைத்த வாய்ப்புகளை வீணாக்கி விடக்கூடாது என இவ்வாறு தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *