போலீஸை இங்க வரச்சொல்லு..! காவல் நிலையம் எதிரே ரத்தம் சொட்டச் சொட்ட படுத்து உருண்ட மதுப்பிரியர்.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு.

சென்னை 17 ஏப்ரல் 2022 போலீஸை இங்க வரச்சொல்லு..! காவல் நிலையம் எதிரே ரத்தம் சொட்டச் சொட்ட படுத்து உருண்ட மதுப்பிரியர்.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

ஒரு சமயத்தில் காவலர்கள் வெளியில் வந்து முதலில் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி செய்து வந்தால் உன்னுடைய புகாரை வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்ன பிறகு மதுப்பிரியர் அந்த இடத்தை விட்டு காலி செய்து மருத்துவமனைக்குச் சென்றார்.

காவல்நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து கொண்டு போலீசார் வெளியில் வந்து எனது புகாரை ஏற்கவேண்டும் என ஒரு மணி நேரமாக போக்குக் காட்டிய மதுப்பிரியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலபட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் நாகராஜ். இவருக்கும் இவருடைய‌ உறவினருக்கும் சொத்து தகராறில் கைகலப்பு ஆகியுள்ளது. இதில் தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த மதுப்பிரியர் புகார் அளிக்காமல் காவல் நிலையம் எதிரே உள்ள சாலையில் கால் மேல் கால் போட்டு படுத்துக் கொண்டு, நான் காவல் நிலையம் உள்ளே வர மாட்டேன் காவலர்கள் என்னிடம் வந்து புகாரைப் பெற்றுச்செல்ல வேண்டும். இல்லை என்றால் இந்த இடத்தை விட்டு போகவே மாட்டேன் என ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் படுத்தும், உருண்டும் அங்கேயும் இங்கேயும் நடந்து சென்றார்.

ஒரு சமயத்தில் காவலர்கள் வெளியில் வந்து முதலில் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி செய்து வந்தால் உன்னுடைய புகாரை வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்ன பிறகு மதுப்பிரியர் அந்த இடத்தை விட்டு காலி செய்து மருத்துவமனைக்குச் சென்றார்.

Read Also  2000 ரூபாய் நோட்டுகளில் 97.62% வங்கிக்கு திரும்பி வந்துள்ளது !!

இதனால் சங்கராபுரம் காவல் நிலையம் முன்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *