“பிலிப் கேப்பிடல்” 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022!

சென்னை 28 ஏப்ரல் 2022 “பிலிப் கேப்பிடல்” 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022!

ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் மற்றும் உலக மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனத்துடன் இணைந்து, இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு, 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022 ஐ ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய மாஸ்டர்ஸ் தடகள போட்டிகளில் வெல்பவர்கள் ஆசிய மற்றும் உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.

இந்திய முதுநிலை தடகள சம்மேளனம் (MAFI) தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் ஆதரவுடன்,  42வது தேசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப்பை, தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் ஆதரவுடன் நடத்துவது, மிகவும் பெருமையான தருணமாகும் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கங்களை கடந்து, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல், நோய் தொற்றிலிருந்து மீள்தன்மை பெற்று, விளையாட்டு உலகமும் முதுநிலை தடகள இயக்கமும் தொடர்ந்து செயல்படுவதையும் உறுதிசெய்து, மீண்டும் போட்டிகள் திறப்பதற்கும், நம்மை மீட்டெடுப்பதற்கும், பின்னடைவிலிருந்து முன்னோக்கி செல்ல,  நம் அனைவருக்குமான எதிர்காலத்தை உறுதி செய்வது இதன் சிறப்பான அம்சமாகும்.

42வது தேசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் 2022 என்பது இந்தியாவின் 26 மாநிலங்களில் இருந்து 3500க்கும் மேற்பட்ட தடகள வீரர்களுடன் போட்டியிடும் மிகப்பெரிய தடகளப் போட்டியாகும், 13 வயது முதலான பிரிவுகளில் மொத்தம் 22 தடகளப் பிரிவுகள் கொண்ட போட்டிகள் ஏப்ரல் 27 முதல் மே 1 வரை நடத்தப்படும்.

Read Also  “PhillipCapital” 42nd National Masters Athletics Championship 2022!

42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழாவினை திரு உதயநிதி ஸ்டாலின் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி அவர்கள் துவக்கி வைத்தார்.

திரு மா. சுப்பிரமணியன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்

சிவ. வீ. மெய்யநாதன், தமிழக சுற்றுசூழல் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்

திரு மூர்த்தி. R (ஐட்ரீம்ஸ்) தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் – ராயபுரம் தொகுதி

Dr. R.ஆனந்த் குமார், ஐஏஎஸ், உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.

திருமதி. மார்கிட் ஜங்மேன், தலைவர் உலக மாஸ்டர்ஸ் தடகளம் (ஜெர்மனி)

திரு. ஸ்டான்லி பெர்கின், வாழ்நாள் தலைவர் உலக மாஸ்டர்ஸ் தடகளம் (ஆஸ்திரேலியா) மற்றும் பல சிறந்த தலைவர்கள்

நடிகை அதுல்யா ரவி ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்

திரு. D.டேவிட் பிரேம்நாத், இந்திய முதுநிலை தடகள சம்மேளனத்தின் பொதுச்செயலாளர், 42வது தேசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் தலைவராக இருப்பார், இந்த விளையாட்டு போட்டிகளின் மூலம் வீரர்களை தொழில்முறை மயமாக்குதல் மற்றும் வீரர்களை ஊக்குவித்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதும் மற்றும் நாட்டிற்கும் மாஸ்டர்ஸ் விளையாட்டு இயக்கத்திற்கும் மரியாதை பெற்று தருவதையும் குறிக்கோளாக கொண்டு செய்லபடவுள்ளனர்.

 தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் WI தேவாரம் IPS (Retd). செயலாளர் P.பழனிசாமி,  மூத்த இணை செயலாளர் கலைச்செல்வன், சென்னை மாவட்ட சங்கத்தலைவர் திரு.செண்பகமூர்த்தி மற்றும் சிறந்த செயல் வீரர்களின் அதிதீவிர உழைப்புடன் 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022 முதல் நாள் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.