மத்திய அரசின் அமர்க்களமான குளு குளு ஏசி ரயிலில் குஷியான ஆன்மீக சுற்றுலாத் திட்டம்!

சென்னை 30 ஏப்ரல் 2022 மத்திய அரசின் அமர்க்களமான குளு குளு ஏசி ரயிலில் குஷியான ஆன்மீக சுற்றுலாத் திட்டம்!

மக்களே கொண்டாட்டமான ட்ரிப்புக்கு ரெடியா…

இந்திய ரயில்வேவும், M & C,கோயமுத்தூர் நிறுவனமும் சேர்ந்து ஏற்பாடு செய்திருக்கும் சூப்பரான, சொகுசான குடும்ப ஆன்மீக சுற்றுலாப்பயணம்.

கோவையில் இருந்து ஷீரடிக்கு செல்லும் இந்த 5 நாள் பயணத்தில் ஒரே கட்டணத்தில் அனைத்து வசதிகளும் வழங்கப்படும்

அறிவிப்பே சும்மா அதிருதுல…

அறிவிப்பு மட்டும் இல்லங்க, மொத்த ட்ரிப்பே படு அமர்க்களமாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்.

ரெகுலரான ஆன்மீக சுற்றுலா பயணமாக இல்லாம, இதுவரைக்கும் நீங்க பார்க்காத இடங்களை பார்க்க கூடிய, சுவைக்காத பல பாரம்பரிய உணவுகளை சுவைக்க கூடிய ரொம்ப ஸ்பெஷலான ட்ரிப்பாக இருக்கும்.

கோவையில் இருந்து ஈரோடு, சேலம், பெங்களூர் வழியாக மந்த்ரலாயத்திற்கு செல்லும் இந்த 5 நாட்கள் ரயில் பயணத்தின் அனைத்து நாட்களுக்குமான உணவு மற்றும் தினசரி பயன் படுத்தப்படும் பொருட்கள் அனைத்துமே இலவசம்.

ஷீரடியில் தரிசனம் செய்துவிட்டு அங்கேயே தங்கும் இடம், உணவு ஆகியவற்றுடன், ஷீரடிக்கான போக்குவரத்து என அனைத்துமே இதில் அடங்கும்.

ஏசி வசதி கொண்ட ரெண்டு அடுக்கு Train பயணத்தில், படுக்கைக்கு தேவையான தலையணை, போர்வை, படுக்கை விரிப்புகள் மற்றும் கிரிமி நாசினி ஆகியவை வழங்கப்படும்.

சுவையான மற்றும் தரமான சைவ உணவுகள், ஒவ்வொருவரின் விருப்பத்துக்கு ஏற்ப தென் இந்திய மற்றும் வட இந்திய உணவு வகைகள் வழங்கப்படும்.

Read Also  ITC’s Sunfeast Supermilk felicitates young achievers with SUPERKIDS Award 2023.!!

ஷீரடியில் வியாழக்கிழமை பிரத்யேக மற்றும் சிறப்பு தரிசனம்

ஷீரடி தரிசனத்திற்குப் பிறகு, இருவர் பகிர்வு முறையில் ஏசி அறை தங்கும் வசதி

பயணத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் செயலாற்றும், மருத்துவர் தலைமையிலான மருத்துவக்குழு வசதியும் உண்டு. (சுற்றுலா ரயிலில் மருத்துவர் தலைமையிலான மருத்துவ குழு வசதி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்)

ரயில் பெட்டிகள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை கிரிமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படும்.

ஆன்மீக புத்தகங்கள் மற்றும் அவசர அழைப்புகான எண் வழங்கப்படும்.

பயணிகளுக்கான தனிப்பட்ட தேவைகளை செய்துக் கொடுப்பதற்காக, பயணிகள் சேவை அதிகாரி மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்

அடையாளத்துக்காக ரயில் பெட்டிகளுக்கு தனித்துவமான பெயர்கள்

வழக்கமாக வழங்கப்படும் உணவு வகைகளை தவிர்த்து, கூடுதலான உணவு வகைகள் தேவைப்பட்டால், அதற்கான கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

தரமான மற்றும் முன்னணி நிறுவன சிற்றூண்டிகள் பயணிகளை தேடி வரும், தேவைப்படுவோர் தனியாக கட்டணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்.

வயதனாவர்களுக்கு உதவி செய்வதற்காக சிறப்பு உதவியாளர்கள் இருப்பார்கள்

இப்படிப்பட்ட சகல வசதிகளையும் கொண்ட ஒரு குடும்ப ஆன்மீக சுற்றுலா பயணத்தை நான் இதுவரை கேள்வி பட்டது இல்லங்க,’

நீங்களும் கேள்வி பட்டிருக்க மாட்டீங்கனு தெரியும்,

அப்படினா உடனே முன் பதிவு செய்ங்க, குடும்பமாக ட்ரிப்ப கொண்டாட ரெடியாகுங்க.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *