உலக நாயகன் விக்ரம் கமல் ஹாசனின் பத்தல பத்தல ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது.

சென்னை 11 மே 2022 உலக நாயகன் விக்ரம் கமல் ஹாசனின் பத்தல பத்தல ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த விக்ரம் திரைப்படத்தை ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கின்றன.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல் ஹாசனின் ரசிகர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் ஆடியோவும் டிரெய்லரும் மே மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பத்தல பத்தல என்ற பாடல் இன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அந்தப் சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் எழுதி, அனிருத் இசையில் பாடியிருக்கும் இந்தப் பாடலை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *