கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் பெருந்தொற்றுக் காலத்தில், முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 125 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன!!

சென்னை 11 மே 2022 கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் பெருந்தொற்றுக் காலத்தில், முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 125 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன!!

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களில் மிகவும் இளையவர்  6 மாதக் குழந்தை மற்றும் அதிக வயதுடையவர்  66 வயது நோயாளி.

மே 10, 2022, சென்னை: முன்னணி மல்டி-ஸ்பெஷாலிட்டி மையமான, சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC), கடந்த 2 ஆண்டுகளில் பெருந்தொற்றுக் காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (TNCMCHIS) 125 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுகாதார, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன், மற்றும் அவருடன் தமிழ்நாடு அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ – திரு. எஸ். அரவிந்த ரமேஷ்,  ஆகியோர் மருத்துவர்களை கௌரவித்தனர். .

பெறப்பட்ட தரவுகளின்படி, அங்கு நடத்தப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மொத்தத்திலும் – 70% நோயாளிகள் ஆண்கள் மற்றும் மீதமுள்ளவர்கள் பெண்கள்.

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுகாதார, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், திரு. மா சுப்பிரமணியன், மருத்துவர்கள் குழுவிற்கு தன் வாழ்த்துகளைத் தெரிவிக்கும்போது, “TNCMCHIS மூலம் பல நோயாளிகள், குறிப்பாக குழந்தைகள் பயன்பெறுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருவர் சரியான நேரத்தில் மருத்துவ தலையீட்டை நாடினால் உண்மையிலேயே அவரது வாழ்க்கை பெருமளவுக்கு மாறும். பெருந்தொற்றுக் காலத்திலும் கூட தமிழகம் முழுவதிலும் உள்ள நோயாளிகளுக்கு 125 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்ததற்காக கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் உள்ள மருத்துவர்கள் குழுவை வாழ்த்த விரும்புகிறேன்.” என்று கூறினார். 

Read Also  தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் கல்லீரலியல் மற்றும் கல்லீரலியல் உறுப்பு மாற்றுத்துறை இயக்குனர், டாக்டர் ஜாய் வர்கீஸ், கருத்து தெரிவிக்கையில், “தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெரியோர் மற்றும் சிறார்கள் ஆகிய இரு நோயாளிகளும் TNCMCHIS மூலம் பலன் பெற்றுள்ளனர். TNCMCHIS இன் கீழ் சிகிச்சை மேற்கொண்ட 125 நோயாளிகளில் , 21 நோயாளிகள் கடுமையான கல்லீரல் செயலிழப்பு மற்றும் நாள்பட்ட கடுமையான கல்லீரல் செயலிழப்பு நோயாளிகள் ஆவர், அவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான அவசர அனுமதிகளை வழங்க TNCMCHIS குழு இடைவிடாமல் உழைத்தது. TNCMCHIS இன் கீழ், எங்கள் மையத்தின் சிறப்பம்சமாக இரத்தக் குழு பொருந்தாத ஆறு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளையும் (ABOi) வெற்றிகரமாகச் செய்துள்ளோம்” என்று கூறினார்.

சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் HPB அறுவை சிகிச்சைத்துறை இயக்குனர் டாக்டர் மேட்டு ஸ்ரீனிவாஸ் ரெட்டி,  இந்நிகழ்வில் பேசுகையில்,இந்த நோயாளிகள் மிகவும் நோய்வாய்ப்பட்டவர்கள், இவர்களில் பலர் கடைசி முயற்சியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டவர்கள். குறிப்பாக, இந்த நோயால் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்ச்சிக் குறைபாடு ஏற்பட்ட சிறு குழந்தைகள் விஷயத்தில் இது முற்றிலும் உண்மை. அவர்கள் மிகக் குறைந்த உடலியகக்க சக்தி கொண்டிருந்தனர் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர்களால் எந்தவொரு தொற்று அல்லது சிக்கல்களையும் தாங்கிக் கொள்ள முடியாது.” என்று கூறினார். இத்தகைய பிரச்சனைகள் இருந்த போதிலும், நமது நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையால் பெற்ற பலன்கள் சர்வதேச தரத்தை விட மிகச் சிறந்தவை. குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் 100% பல்துறை சிகிச்சையை சாதிப்பது ஒரு விதிவிலக்கான சாதனையாகும், மேலும் இது குழு மற்றும் மருத்துவமனையின் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்என்று கூறினார்.

Read Also  கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC) - ஒரு பிரத்யேக ஆம்புலன்ஸ் கண்காணிப்பு செயலியான MSIRENPILOT ஐ அறிமுகப்படுத்துகிறது!!

கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில் கல்லீரல் உறுப்பு மாற்று நோயாளிகளை நிர்வகிப்பது பற்றி சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் கல்லீரல் மயக்க மருந்து மற்றும் தீவிர பராமரிப்புத் துறைத்தலைவர் டாக்டர் செல்வகுமார் மல்லீஸ்வரன்  பேசுகையில், “கோவிட் பெருந்தொற்றின் பல்வேறு அலைகளின் போதும் கூட, அவசர மற்றும் உயிர் காக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை பிரத்தியேகமாக தீவிர சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பிரத்யேக குழு நடத்தியது. கடுமையான கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு அவசரகால கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை சிறப்புத் திறன் கொண்ட குழு வெற்றிகரமாக நிர்வகித்தது. எங்கள் பாதுகாப்பு நெறிமுறையானது மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு கோவிட் நோய்த்தொற்று அறவே ஏற்படாமல் பார்த்துக் கொண்டது மற்றும் இந்த செய்தி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சர்வதேச இதழின் முதல் அட்டைப் பக்கத்தில் வெளியிடப்பட்டது” என்று கூறினார்.

சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி, டாக்டர் அலோக் குல்லர் இந்த மைல்கல்லை எட்டியது குறித்து கூறுகையில், “மாநிலம் முழுவதும் உள்ள பல நோயாளிகளுக்கு TNCMCHIS நம்பிக்கையை அளித்தது அதற்காக நாங்கள் தமிழ்நாடு அரசுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளோம். பெருந்தொற்றான கோவிட்-19 இன் போது TNCMCHIS இன் கீழ் மிகவும் சவாலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்வது எங்களது சாதனைப் பட்டியலில் மற்றொரு சாதனையை சேர்க்கிறது. இந்தியாவில் உள்ள முன்னணி கல்லீரல் உறுப்பு மாற்று மையங்களில் ஒன்று என்பதால்,கோவிட்-19 பரவும் அபாயம் ஏதுமின்றி மாற்று அறுவை சிகிச்சையை செயல்படுத்துவதற்கு, தொற்றுக் கட்டுப்பாட்டின் மிக உயர்ந்த தரநிலைகளைச் செயல்படுத்துவதை எங்கள் குழு ஒரு சவாலாக எடுத்துக் கொண்டது. தொற்று நோய் தடுப்புக் குழுவுடன் இணைந்து கல்லீரலியல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக் குழு செயல்படுத்திய பல்துறை சிகிச்சை அணுகுமுறையானது இறுதி நிலை கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ பலனை வழங்க எங்களுக்கு உதவியது.” என்று கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *