திருட சென்ற வீட்டில் தூங்கிய இளம்பெண்ணின் அழகை ரசித்து மாட்டிக்கொண்ட திருடன்…!!!
சென்னை 12 மே 2022 திருட சென்ற வீட்டில் தூங்கிய இளம்பெண்ணின் அழகை ரசித்து மாட்டிக்கொண்ட திருடன்…!!!
திருடச் சென்ற வீட்டில் பெண் தூங்கி இருப்பதை கண்டு ரசித்தவாறே நின்ற திருடனை, வீட்டில் உள்ளவர்கள் அவரை அடித்து நொறுக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் இரவில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், காற்றோட்டத்துக்காக சிலர் வீட்டின் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அப்படி திறந்து கிடந்த வீடு ஒன்றுக்குள் திருடன் ஒருவன் நள்ளிரவில் நுழைந்துள்ளான்.
உள்ளே பெண் ஒருவர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.
இரவு நேர மின்விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்த திருடன், அப்படியே நின்று அவரை ரசித்துக் கொண்டிருந்துள்ளான்.
தூக்கம் சரியாக வராமல் அரைத்தூக்கத்தில் இருந்த அந்தப் பெண், தன் அருகில் ஏதோ ஒரு உருவம் நிற்பது போல் உணர்ந்து திடுக்கென விழித்துள்ளார்.
கண்முன்னே ஒருவன் நின்றிருப்பதைப் பார்த்து அப்பெண் கத்திக் கூச்சலிடவே, பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் என அனைவரும் விழித்துள்ளனர்.
உடனே அத்திருடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளான்.
அவரை அந்த பகுதி பொதுமக்கள் விரட்டி துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
அப்போது, திடீரென அந்த திருடனுக்கு வலிப்பு ஏற்பட்டது.
இது குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஏற்றி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
போலீசில் சிக்கிய நபர் வாழப்பாடி நீர்முள்ளிகுட்டையை சேர்ந்த பிரபல திருடன் சின்னராசா (வயது 34) என்பதும், அவர் மீது 17 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
ஒரு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த சின்னராசா, தற்போது வீடு புகுந்தபோது மாட்டிக்கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து சூரமங்கலத்தை சேர்ந்த சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது, அவர் போலீசாரிடம் கூறும்போது, வீட்டிற்குள் நான் தூங்கி கொண்டிருந்தபோது, எனது கன்னத்தில் கை வைத்தபடி யாரோ பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
அந்த சமயத்தில் தூக்க கலக்கத்தில் எழுந்து பார்த்தபோது, வீட்டிற்குள் புகுந்த நபர், என்னையே பார்த்து ரசித்தபடி அமர்ந்திருந்தான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நான் திருடன்.. திருடன்.. என்று கத்தியபோது அவன் வெளியே தப்பி ஓட முயன்றான்.
பின்னர் அவனை பொதுமக்கள் பிடித்துவிட்டனர், என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வீட்டிற்குள் சின்னராசா புகுந்து திருட முயன்றாரா? என்பது குறித்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் வீடு புகுந்த திருடன் தூங்கி கொண்டிருந்த பெண்ணின் அழகை பார்த்து ரசித்து கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது