கான்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட இயக்குனர் பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது!!
சென்னை 19 மே 2022 கான்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட இயக்குனர் பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது!!
கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் பா.இரஞ்சித் எழுதி இயக்கும் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது.
இயக்குனர் பா.இரஞ்சித் படங்கள் இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் படங்கள் தயாரித்து வருகிறார்.
தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பரியேறும் பெருமாள் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் வெளி வந்தன.
இதனை தொடர்ந்து சேத்துமான், பொம்மை நாயகி, ஜெ.பேபி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.
இன்னிலையில் பா.இரஞ்சித் ”நீலம் ஸ்டுடியோ” எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியிருக்கிறார்.
இந்த நிறுவனத்தோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து முதல் தயாரிப்பாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ”வேட்டுவம் ” எனும் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.
வேட்டுவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கான்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித், தயாரிப்பாளர்கள் அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி ஆனந்த் அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
கேங்ஸ்டர்கள் பற்றிய கதையாக உருவாகவிருக்கும் வேட்டுவம் படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்