ஆசிட் சர்வைவர்ஸ் ஃபவுண்டேஷன் &வுமன் வெல்ஃபேர் பவுண்டேஷன் ஆகியவை அதன் பிரசாரத்தின் தொடக்கத்தை அறிவிக்கிறது.!
சென்னை 20 மே 2022 ஆசிட் சர்வைவர்ஸ் ஃபவுண்டேஷன் &வுமன் வெல்ஃபேர் பவுண்டேஷன் ஆகியவை அதன் பிரசாரத்தின் தொடக்கத்தை அறிவிக்கிறது.!
மௌனம் பெண்களை பாதுகாக்காது ”
சென்னை , 20 மே 2022 :: ஆசிட் சர்வைவர்ஸ் & வுமன் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆகியவை ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவர்களுக்கு இந்தியாவில் உள்ள அமைப்புகள் மூலம் ஆதரவளித்து வருகிறது.
மேலும் அவர்கள் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதை உறுதிசெய்யும் வகையில் அவர்களின் வாழ்க்கையை நேர்மறையாக உருவாக்கி வருகிறது.
மாண்புமிகு நீதிபதி ஜெயந்தி திரு.அனில் மேஷ்ராம் ஐ.ஏ.எஸ் . , விஜயநகர இளவரசி வித்யா சிங் , கார்ப்பரேட் நிறுவன மூத்த ஆலோசகர் திரு . எஸ் . சந்திரசேகர் , திரு . வி.மாணிக்கம் ஐ.பி.எஸ் . , ஆகியோர் ” மௌனம் பெண்களை பாதுகாக்காது ” என்ற பிரசாரத்தை தொடங்கினர்.
ஆசிட் சர்வைவர்ஸ் & வுமன் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆகியவை இந்தியா முழுவதிலும் இருந்து உயிர் பிழைத்தவர்களுக்கு அவர்களின் சிகிச்சைக்கு உதவவும் அவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து இழப்பீடு பெற்றுத்தரவும் உதவுகிறது.
ஆசிட் வீசுதல் மற்றும் ஆசிட் விற்பனையை தடுப்பதன் மூலம் கொடூர குற்றத்தை தடுத்து நிறுத்த இந்த பவுண்டேஷன் பிரசாரம் , ஆர்ப்பாட்டம் , தெரு நாடகம் ஆகியவற்றை நடத்தி வருகிறது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகழ்பெற்ற சமூக ஆர்வலர்கள் , கொடை வள்ளல்கள் , தொழிலதிபர்கள் , மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த உன்னதப் பணியை ஆதரிக்கின்றனர்.
ASWWF ஏற்கனவே தங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்ட காவல் நிலையங்களை உள்ளடக்கிய காவல் துறையுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களால் ” சிறப்பு காங்கிரசின் அங்கீகாரச் சான்றிதழ் ” வழங்கப்பட்டதால் , ஃபவுண்டேஷனின் செயல்பாடுகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதற்காக இந்த ஃபவுண்டேஷன் நான்கு வகை அணுகுமுறையை பயன்படுத்துகிறது.
முதல் கட்டமாக , பாதிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டவர்களுக்கு அவர்கள் கவனிப்பையும் , ஆதரவையும் வழங்குகிறார்கள் .
அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்காக தன்னார்வ தொண்டு சேவைக்கான அரசாங்க அமைப்புகளுடன் இத்தகைய தாக்குதல்களைத் தடுப்பதற்கான திட்டங்களையும் வழங்குகிறார்கள் .
நிறுவனங்களின் ஆதரவு ஒத்துழைப்பதன் மூலம் சமூக அடிப்படையிலான ASWWF ஆனது நாட்டில் 400 க்கும் மேற்பட்ட ஆசிட் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்களை அடையாளம் கண்டுள்ளது .
இதில் தென்னிந்தியாவில் இருந்து தப்பிய 64 பேர் உள்ளனர்.
என்சிஆர்பியின் கூற்றுப்படி , கிழக்கு பிராந்தியங்களில் ஆசிட் வன்முறை சம்பவங்கள் அதிகமாக உள்ளது .
இங்கு கிட்டத்தட்ட 37 % தாக்குதல்கள் நடந்துள்ளன.
வடக்கு பிராந்தியத்தில் 35 % , தெற்கு பிராந்தியத்தில் 15 % மற்றும் மேற்கு பிராந்தியத்தில் 13 % ஆகும் .
தென்னிந்தியாவில் 2016 முதல் 2021 வரை ( 6 ஆண்டுகள் ) ஆசிட் வன்முறை சம்பவங்கள் கேரளாவில் அதிகமாக நடந்துள்ளன .
இங்கு 60 வழக்குகள் பதிவாகியுள்ளன .
ஆந்திராவில் 42 , கர்நாடகாவில் 35 , தமிழ்நாட்டில் 27 , தெலுங்கானாவில் 22 மற்றும் கோவாவில் 3 வழக்குகள் பதிவாகியுள்ளன .
இந்த பிராந்தியத்தில் 2022 ல் மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன .
கோயம்புத்தூர் ( தமிழ்நாடு ) , ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தலா ஒரு வழக்குகள் பதிவாகியுள்ளன .
மேற்கு வங்காளத்தின் முன்னாள் மேதகு கவர்னர் திரு . எம்.கே.நாராயணன் ” பயணத்தில் இருப்பதால் பயிலரங்குக்கு தலைமை தாங்க முடியவில்லை .
ஃபவுண்டேஷன் மற்றும் அதன் செயல்பாடுகள் வெற்றிபெற அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் .
ASWWF தென்னிந்திய பிரிவின் தலைவர் திருமதி . மனிஷா லோஹியா கூறுகையில் , ” மௌனம் பெண்களை பாதுகாக்காது ” என்ற பிரசாரத்தை தொடங்குவது பொருத்தமானது .
சந்தர்ப்பங்களில் பெண்களுக்கு எதிரான கண்டிக்கப்படுவதில்லை .
மிகவும் ஏனெனில் பெரும்பாலான வன்முறைகள் ஒன்றுபட்டு பெண்கள் மேலும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் .
நான் மௌனமாக இருந்தால் அது மேலும் மௌனத்திற்கே வழிவகுக்கும் .
டாக்டர் எச்.பி. கனோரியா , தலைவர் , ASWWF கூறுகையில் , ” மௌனம் பெண்களை பாதுகாக்காது ‘ பிரசாரத்தின் மூலம் , சமூகம் , கல்வி மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகள் மூலம் இந்தியாவில் இருந்து ஆசிட் வன்முறையை துடைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கமாகும் .
ஆசிட் வன்முறை என்ற மனிதாபிமானமற்ற குற்றம் இந்தியாவில் அதிகரித்து வருவதால் , மேலும் மேலும் ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவர்களுக்கு எங்கள் சேவைகளை வழங்குவது அவசியமாகிறது .
மனித உரிமைகள் , பாலின சமத்துவம் , பெண்களின் விழிப்புணர்வு மற்றும் பல்வேறு வழிகளில் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் அறிவொளியான அணுகுமுறையை ஊக்குவிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம் “.
டாக்டர் ராகுல் வர்மா , துணைத் தலைவர் , ASWWF கூறுகையில் , ” மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கொடூரமான குற்றங்களில் ஆசிட் வன்முறை ஒன்றாகும் .
உயிர் பிழைத்தவர்களை ஆதரிப்பதற்காக எங்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் தவிர , உயிர் பிழைத்தவர்களுக்கு முழுமையான கவனிப்பை வழங்கும் மனநல சமூக தீக்காய மறுவாழ்வு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம் .
ASWWF ஆனது ஆசிட் தொடர்பான காரணங்களுக்காக போதுமான இழப்பீடு , இலவச அல்லது மானிய மருத்துவ சிகிச்சை , மறுவாழ்வு மற்றும் குற்றவாளிகளுக்கு முன் மாதிரியான தண்டனை உள்பட இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / அமைப்புகளுடன் ஒருங்கிணைத்து ஒத்துழைக்கும் . ”