நவீன உலகில் தாமிரத்தின் பங்கு குறித்த காபி டேபிள் புத்தகம்: ஸ்டெர்லைட் காப்பர் அறிமுகம்!!
சென்னை 21 மே 2022 நவீன உலகில் தாமிரத்தின் பங்கு குறித்த காபி டேபிள் புத்தகம்: ஸ்டெர்லைட் காப்பர் அறிமுகம்!!
சென்னை, மே 2022: தாமிரத்தின் முக்கியத்துவத்தையும், நவீன உலகிற்கு அதன் பங்களிப்பையும் எடுத்துரைக்கும் வகையில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், சென்னையில் வியாழனன்று (மே 20) SICCI CXO மாநாட்டில், அதன் தோற்றம் மற்றும் நவீன உலகை வடிவமைப்பதில் அதன் உறுதியான பங்கு குறித்த காபி டேபிள் புத்தகத்தை அறிமுகப்படுத்தியது.
இன்டர்நேஷனல் காப்பர் அசோசியேஷனின் இந்திய பிரிவு நிர்வாக இயக்குநர் திரு.மயூர் கர்மாகர், ஸ்டெர்லைட் காப்பர் தலைமை செயல் அதிகாரி திருமதி. ஏ. சுமதி ஆகியோரால் இது வெளியிடப்பட்டது.
70 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் “ஹாய் ஐ‘ம் காப்பர்” என்ற சுவாரஸ்யமான தலைப்புடன் வந்துள்ளது.
கிமு 9000 ஆம் ஆண்டில் எகிப்திய நதிக்கரையில் தாமிரம் கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரையிலான அதன் முழு பயணத்தையும் புத்தகம் விவரிக்கிறது.
இன்று நாம் அறிந்த நவீன உலகத்தை உருவாக்குவதில் அதன் ஒருங்கிணைந்த பங்களிப்பை மையமாகக் கொண்டுள்ளது.
உலோகத்தின் வாழ்க்கைச் சுழற்சியைக் கண்டறிந்து, மின்சாரம், பாதுகாப்பு, ஆட்டோ மொபைல்ஸ், ஹெல்த்கேர், எஃப்எம்சிடி உள்பட பல்வேறு துறைகளில் அதன் துறைசார் பயன்பாடு குறித்த முழு விவரங்களை இந்த புத்தகம் உள்ளடக்கியுள்ளது .
காபி டேபிள் புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திருமதி ஏ.சுமதி, பேசுகையில் “ஹாய், ஐ‘ம் காப்பர்”என்ற காப்பர் காபி டேபிள் புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த புத்தகம் தாமிரம் மற்றும் ஸ்டெர்லைட்டின் உருகும் கதையின் பயணத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. “ கடந்த 25 ஆண்டுகளில், ஸ்டெர்லைட் காப்பர் அதன் செயல் முறைகளை மேம்படுத்த தொழில் நுட்பத்தை நன்கு பயன்படுத்தியுள்ளது.
எரிசக்தி திறன், தாமிரத்தை மீட்டெடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் நாங்கள் உரிய புரிந்துணர்வோடு இஎஸ்ஜி தரநிலைகளை நிறுவன நெறிமுறைகளுக்கு உள்பட்டு பயன்படுத்தியுள்ளோம்’’என்றும் அவர் கூறினார்.
ஆண்டுக்கு 100 கிலோ டன் தாமிரத்தை உருக்கும் திறனுடன் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் 2018 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தாமிர தேவையில் கிட்டத்தட்ட 36 விழுக்காட்டை பூர்த்தி செய்து, இந்தியாவின் மிகப்பெரிய தாமிர உற்பத்தியாளராக மாறியது எப்படி என்பதை இந்த புத்தகம் விவரிக்கிறது. தரம், சுற்றுச்சூழல், தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு, எரிசக்தி ஆகியவற்றில் உலகளாவிய சிறந்தநடை முறை தரத்திற்கும் கூடுதலாக இதன் செயல்பாடுகள் உள்ளன.
இந்த ஆலைதூத்துக்குடியில் பாதுகாப்பான மற்றும் நீடித்த செயல்பாட்டை உறுதி செய்வதற்காக எரிவாயு ஸ்க்ரப்பர்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் ரிவர்ஸ்சவ்வூடு பரவல் ஆலைகள் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புகளில் அதிக முதலீடு செய்துள்ளது. ஆலை அதன் பூஜ்ஜிய திரவ வெளியேற்றம், நீர்நுகர்வு மேலாண்மை, கழிவுகளை குறைத்தல் மற்றும் நிலையான பயன்பாடுகளை நோக்கி கழிவுகளை மறுசூழற்சி செய்தல் ஆகியவற்றிற்காக சான்றிதழ் பெற்றுள்ளது.
தூத்துக்குடி ஆலையால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நன்மைகளையும் இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது.
சமூகத்தை ஆதரிக்கக்கூடிய ஒரு தூணாக இருந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தையும் அளித்தது.
நாள்தோறும் சுமார் 1,000 லாரிகள் ஆலைக்கு வந்து போகும். இதனால் 9,000 ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களுக்கு வாழ்வாதாரத்தை அது வழங்கியது.
650க்கும் மேற்பட்ட சப்ளையர்கள் மற்றும் சேவை வழங்கும் பங்குதாரர்களுடன், ஸ்டெர்லைட் காப்பர் ஒவ்வொரு ஆண்டும் 134 மில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகத்தை உருவாக்க உதவியது, மேலும் ஸ்டெர்லைட் காப்பரில் இருந்து மூலப்பொருளை வழங்குவதற்காக சார்ந்திருக்கும் உள்நாட்டு நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 381 ஆக இருந்தது மற்றும் தேசிய கருவூலத்திற்கு சுமார் 295 மில்லியன் டாலர் பங்களித்தது. கூடுதலாக, தூத்துக்குடி துறைமுகத்தின் மொத்த வருவாயில் 17 விழுக்காடு இந்நிறுவனத்தால் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சல்பூரிக் அமிலம், பாஸ்போரிக் அமிலம், ஜிப்சம் மற்றும் தாமிரகசடு போன்ற தாமிர உருக்கத்தின் துணை தயாரிப்புகள் கூட பல முக்கியமான தொழில்களுக்கு முக்கியமான உள்ளீடாக பயன்படுகின்றன.
கந்தக அமிலம் இரசாயன மற்றும் உரத்திற்கான மிக முக்கியமான மூலப்பொருளாக இருந்தாலும், ஜிப்சம் சிமெண்ட் உற்பத்திக்கான முக்கிய மூலப்பொருளாகும்.
திருமதி ஏ. சுமதி, ஸ்டெர்லைட் காப்பர், தலைமை இயக்க அதிகாரி: “உலகம் முழுவதும் தொழில்துறை மற்றும் கட்டுமான பணிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் உலோகங்களில் தாமிரம் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் தொடர்ந்து அதிகரித்து வரும் அதன் தேவை, உற்பத்தி அதிகரிப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் வேலைவாய்ப்புகள் மற்றும் கீழ்நிலைத் தொழில்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஸ்டெர்லைட்டில் நாங்கள் 4000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கி பல்வேறு சப்ளையர் மற்றும் வாடிக்கையாளர் பிரிவுகளில் ஈடுபட்டுள்ள 20,000க்கும் மேற்பட்டோருக்கு மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம்.
தேசிய அளவில் மட்டுமின்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் ஒட்டு மொத்த பொருளாதாரத்துக்கும் மகத்தான பங்களிப்பை வழங்கிய தாமிரம் மற்றும் ஸ்டெர்லைட்டின் பயணம் மற்றும் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்த புத்தகத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.
காபி டேபிள் புத்தக வெளியீட்டு விழாவில் சர்வதேச காப்பர் அசோசியேஷன் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் திரு. மயூர் கர்மாகர் பேசுகையில், “உலகின் மூன்றாவது மிக அத்தியாவசியமான உலோகமான தாமிரம் உலகில், சுற்றுச்சூழல் மற்றும் சமூக–பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றுகிறது என்றார்.
பல துறைகளுக்கு முக்கிய மூலப்பொருளாக இருக்கும் இந்த முக்கியமான உலோகத்திற்கான தேவை பெருந்தொற்றுக்கு பின்னர் நிலையான வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’என்றார்.