நியாய விலைக் கடைகளில் விரைவில் அரிசி சர்க்கரை பருப்பு பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி!

சென்னை 27 மே 2022 நியாய விலைக் கடைகளில் விரைவில் அரிசி சர்க்கரை பருப்பு பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி!

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், அரிசி கடத்தலை தடுக்க அண்டை மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பயோமெட்ரிக் முறையால் ரேசன் கடைகளில் தவறுகள் நடப்பது மிகவும் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் நியாய விலைக் கடைகளில் முறைகேடுகள் நடந்தால் அதுகுறித்து 1967 என்ற எண்ணுக்கும், 1800 425 5901 என்ற எண்ணுக்கும் அழைத்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் நியாய விலைக் கடைகளில் விரைவில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *