பெட்ரோல், டீசல் அருகில் உள்ள மற்ற மாநிலங்களில் என்ன விலை ?

சென்னை 27 மே 2022 பெட்ரோல், டீசல் அருகில் உள்ள மற்ற மாநிலங்களில் என்ன விலை ?

சென்னையில் பெட்ரோல், டீசலில் விலை இன்று ( மே 27) பெட்ரோல் ரூ.102.74 ரூபாய்க்கும், டீசல் 94.33 ரூபாய்க்கும் விற்பனையாயின.

மே -21-ம் தேதி அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.

அதனை தொடர்ந்து சென்னையில் (22 ம் தேதி ) பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல்ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இன்று (27 -ம் தேதி) பெட்ரோல் ரூ.102.74க்கும் டீசல் ரூ.94.33க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையானது.

இது போல் அருகில் உள்ள ஏனைய மாநிலங்களில் உள்ள விலை நிலவரம் வருமாறு :

தெலுங்கானாவில் (ஐதராபாத் ) பெட்ரோல் ரூ.109.66 க்கும் டீசல் ரூ.97.82 க்கும், கேரளாவில் (திருவனந்தபுரம்) பெட்ரோல் ரூ.107.87 க்கும் டீசல் ரூ.96.67 க்கும், ஆந்திராவில் பெட்ரோல் ரூ.111.16 க்கும் டீசல் ரூ.98.95 க்கும், புதுச்சேரியில் பெட்ரோல் ரூ.96.16 க்கும் டீசல் ரூ.86.33 க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *