சென்னை நுங்கம்பாக்கத்தில் தனது புதிய மருத்துவ மனையைத் தொடங்கும் AINU!!

சென்னை 29 மே 2022 சென்னை நுங்கம்பாக்கத்தில் தனது புதிய மருத்துவ மனையைத் தொடங்கும் AINU!!

சென்னை, மே 29, 2022: இந்தியாவில் சிறுநீரக சிகிச்சைத் துறையில் மிகப்பெரிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் குழுமத்தில் ஒன்றான AINU (சிறுநீரகவியல் மற்றும் சிறுநீர்பாதையியலுக்கான ஏஷியன் இன்ஸ்டிடியூட்), சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஒரு புதிய மருத்துவமனையை தொடங்குவதன் மூலம் தனது தேசிய அளவிலான செயலிருப்பை விரிவாக்கம் செய்திருக்கிறது. 

சென்னை மாநகரில் AINU -ன் முதல் மருத்துவமனையாகவும் மற்றும் இந்நாட்டில் அதன் ஏழாவது மருத்துவ மனையாகவும் இது இருக்கிறது.  100 படுக்கை வசதிகள் கொண்ட சிறுநீரக மற்றும் சிறுநீர் பாதை அறிவியல் துறையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையான இதனை AIG ஹாஸ்பிட்டலின் தலைவரும், இந்திய அரசின் “பத்மபூஷன் விருது” பெற்றவருமான டாக்டர். D. நாகேஷ்வர் ரெட்டி திறந்து வைத்தார். 

உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளுக்கு மிக நவீன HDF டயாலிசிஸ் சிகிச்சை வசதியுடன் 25 படுக்கைகள் கொண்ட ஒரு சிறப்பு டயாலிசிஸ் யூனிட் இம்மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. 

நோயாளிகளுக்கு உயர்தரமான சிகிச்சைப் பராமரிப்பை வழங்க 24X7 அடிப்படையில் உயர் தகுதியும், அனுபவமும் மிக்க சிறுநீர் பாதையில் மற்றும் சிறுநீரகவியல் மருத்துவர்களின் ஒரு பிரத்யேகக் குழுவினர் இம்மருத்துவமனையில் முழுநேரப் பணியாளர்களாக பணியாற்றுகின்றனர். எக்ஸ்-ரே, அல்ட்ராசவுண்டு, மல்ட்டி-ஸ்லைஸ் சிடி ஸ்கேன் மற்றும் யூரோடைனமிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய நோயறிதல் சாதனங்களும் மிக நவீன ஆய்வகமும்   இந்த மருத்துவமனைக்குள்ளேயே இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையியல் தொடர்பான சிகிச்சை.

Read Also  அப்போலோ மருத்துவமனை ஆசியாவிலேயே  முதன் முறையாக மிட்ராக்ளிப் மற்றும் டிஏவிஆர் மருத்துவ சிகிச்சையை  ஒரே நோயாளிக்கு மேற்கொண்டு சாதனை!

செயல் முறைகளுக்கென அனைத்து சாதனங்களையும் கொண்ட நான்கு அறுவை சிகிச்சை அரங்குகள் இம்மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளன. 

உயர் தொழில்நுட்ப உத்திகளுடன் எண்டோஸ்கோப்பிக் மற்றும் லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள லேசர்கள் போன்ற மிக நவீன அறுவைசிகிச்சை சாதனங்கள் அனைத்தும் இந்த அறுவை சிகிச்சை அரங்குகளில் இடம்பெற்றுள்ளன. 

AINU – சென்னையின் மேலாண் இயக்குனரும், தலைமை சிறுநீர் பாதையியல் மருத்துவருமான டாக்டர். B. அருண்குமார், அவர்கள் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய மருத்துவமனை குறித்து பேசுகையில், “ஏஷியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி & யூராலஜி, அதன் உலகத்தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள், நவீன மருத்துவ நிபுணத்துவம் ஆகியவற்றிற்காக நாடு முழுவதும் புகழ் பெற்றிருக்கிறது. 

சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய மருத்துவமனை, சென்னை மற்றும் இதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலுள்ள நோயாளிகளுக்கு சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையியல் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மிகச்சிறப்பான சேவைகளை வழங்கும்,” என்று கூறினார். 

சிறுநீரகம் சார்ந்த அனைத்து அவசர நிலைகளையும் கையாள்வதற்கு மிக நவீன HDF டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் தீவிர சிறுநீரக சிகிச்சைப் பராமரிப்பு பிரிவு ஆகிய முழு வசதிகளை AINU கொண்டிருக்கிறது. 

சிறுநீரக மாற்று சிகிச்சை செயல் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதில் AINU – ன் கடந்தகால சாதனை வரலாறு சிறப்புமிக்கது. 

நோயாளிகளுக்கு மிகச்சிறந்த பராமரிப்பை உறுதிசெய்வது மீது AINU தனது முழு கவனத்தையும், அக்கறையையும் எப்போதும் செலுத்தி வந்திருக்கிறது.  சிறுநீரக நோய்கள் மற்றும் பிற பாதிப்புகள் உள்ள நோயாளிகளின் தேவைகளுக் கேற்ப எமது சேவைகளை பிரத்யேகமாக வடிவமைத்து, செயல்படுத்துவதன் மூலம் இதை நாங்கள் சாதித்து வருகிறோம். 

Read Also  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ரத்த வகையால் ஏற்படக்கூடிய தடைக்கு எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவர்கள் வெற்றிகரமாகத் தீர்வு கண்டுள்ளனர்!

சிறுநீரக சிகிச்சைப் பராமரிப்பு மீதான அறிவையும், புதிய உத்திகளையும் இத்துறையைச் சார்ந்த சக மருத்துவர்களோடு பகிர்ந்துகொண்டு இதனை செழுமையடையச் செய்வது AINU – வின் மற்றொரு முக்கிய இலக்கு செயல்பாடாக எப்போதும் இருந்து வருகிறது. 

இந்த இன்ஸ்டிடியூட்டில் இது குறித்து கல்வி மற்றும் ஆராய்ச்சி மீது வலுவான கூர்நோக்கத்துடன் இப்பணியை நாங்கள் தொடர்ந்து செய்வோம்.”

என்று AINU சென்னையின் நிர்வாக இயக்குனர் திரு. B. அருண் குமார் M.D. மேலும் கூறினார். 

AINU – ன் மேலாண் இயக்குனர் டாக்டர். C. மல்லிகார்ஜுனா இம்மருத்துவமனை தொடங்கப்படுவது குறித்து கூறியதாவது:

“சென்னையில் எமது புதிய மருத்துவ அமைவிடம் தொடங்கப் படுவதை அறிவிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.  இந்நாட்டில் எமது செயல்பாட்டிற்கு இது மேலும் வலுசேர்க்கும்.  தற்போது 7 கிளைகளுடன், 5 நகரங்களில் நாங்கள் செயல்படுகிறோம். 500 படுக்கை வசதிகள் மற்றும் 100-க்கும் அதிகமான டயாலிசிஸ் இயந்திரங்களைக் கொண்டு சேவை வழங்கி வரும் நாங்கள், இந்நாட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை சங்கிலித்தொடரின் மிகப்பெரிய குழுமங்களுள் ஒன்றாக திகழ்கிறோம்.  இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் டயாலிசிஸ் யூனிட்டுகளைக் கொண்டிருக்கும் மருத்துவக் குழுமம் என்ற அங்கீகாரமும் எங்களுக்கு இருக்கிறது.  நோயாளிகளின் நலனை மையமாகக் கொண்ட எமது அணுகுமுறை, சிறுநீரகவியல் மற்றும் சிறுநீர் பாதையியலில் செழுமையான அனுபவம் மற்றும் சிறப்பான நிபுணத்துவம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களின் குழு மிக நவீன உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து, சென்னைக்கும் மற்றும் தமிழ்நாடு மாநிலத்திற்கும் இத்துறையில் மிக உயர்ந்த தரத்தில் சிகிச்சைப் பராமரிப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும்.”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *