எந்த ஒரு செயல்பாட்டிலும் இல்லாத 87 கட்சிகள் நீக்கம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.!
சென்னை 03 ஜூன் 2022 எந்த ஒரு செயல்பாட்டிலும் இல்லாத 87 கட்சிகள் நீக்கம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.!
இந்தியா முழுவதும் 2,100-க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதி முறைகளை மீறியிருப்பதாக தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்திருந்தது.
குறிப்பாக நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தன.
எனவே அந்தந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மூலம் இந்த கட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், 87 கட்சிகள் செயல்பாட்டில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த 87 கட்சிகளையும் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
விதிமீறல் உள்ளிட்டவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த கட்சிகளுக்கு தேர்தலில் சின்னம் பெறுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு சிக்கல் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.