பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டலுடன் கூட்டாண்மையை மேற்கொள்ளும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்!

சென்னை 20 ஜூன் 2022 பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டலுடன் கூட்டாண்மையை மேற் கொள்ளும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்!

375 படுக்கை வசதியுள்ள இம்மருத்துவ மனையின் இயக்க செயல்பாடுகள்  மற்றும் மேலாண்மைக்கான இவ்வொப்பந்தம் 166 மில்லியன் நபர்களுக்கு பயனளிக்கும்

இந்தியா, சென்னை, ஜுன் 20, 2022: ஒருங்கிணைக்கப்பட்ட உடல்நல சேவைகள் வழங்கலில் ஆசியாவின் முதன்மையான மற்றும் அதிக நம்பிக்கைக்குரிய அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், உலகத் தரத்திலான சிகிச்சைகள் கிடைக்குமாறு செய்வதற்கு பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டல் லிமிடெட் (IHL) உடன் கைகோர்த்திருக்கிறது. 

பங்களாதேஷில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுமத்தின் செயலிருப்பை இப்புதிய கூட்டாண்மை இன்னும் வலுப்படுத்தும். 

பங்களாதேஷின் ஒரு முக்கிய நகரமான சிட்டகாங் – ல் இயங்கி வரும் 375 படுக்கை வசதி கொண்ட பன்முக சிறப்புப்பிரிவுகள் கொண்ட IHL மருத்துவமனையை அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் இனி நிர்வகிக்கும்.  

சர்வதேச தரத்தில் உடல்நல பராமரிப்பு சேவைகளை அனைத்து நபர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டு மென்ற தனது செயல் திட்டத்தின் அடிப்படையில், பிராண்டு உரிமம், இயக்கக்செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை (BOMA) ஒப்பந்தத்தில் இம்பீரியல் ஹாஸ்பிட்டல் மற்றும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் – ம் கையெழுத்திட்டிருக்கின்றன.   

சிட்டகாங் நகரில் அமைந்துள்ள இந்த நவீன மருத்துவமனை, நோயாளிகளுக்கு மிகச் சிறப்பான சேவையளிக்கும் நோக்கத்தோடு அனுபவம் மிக்க மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள், தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணியாளர்களைக் கொண்டிருக்கும்.  பல தசாப்தங்களாக நேர்த்தியாக்கப்பட்டிருக்கும் இவர்களது மருத்துவ மற்றும் நிர்வாகத் திறன்களைப் பயன்படுத்தி இம்மருத்துவமனையின் தினசரி செயல்பாடுகள் மற்றும் மருத்துவ சிகிச்சை சேவைகள் சேவைகள் செயல்பாட்டை அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் நிர்வகிக்கும். 

உலகின் மிகச்சிறந்த சிகிச்சைப் பலன்களுக்கு நிகராக உயர் சிகிச்சை வாய்ப்புகள், பங்களாதேஷில் உள்ள சிட்டகாங் மற்றும் பிற நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எடுக்கும்.  அப்போலோ இம்பீரியல் ஹாஸ்பிட்டல் என அழைக்கப்படும் இம்மருத்துவமனைக்கு வருகை தரும் அனைத்து நோயாளிகளுக்கும் மிகச்சிறந்த சிகிச்சை விளைவுகள் கிடைக்கவும் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுவினர் உரிய காலஅளவுகளில் மருத்துவ மற்றும் தரநிலைக்கான ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.  

Read Also  வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனை தொடங்கும் பிரத்யேக  ‘ஈரல் – கணையம் – பித்தநீர் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம்’.

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் இந்தியா – ன் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர். பிரதாப் சி. ரெட்டி, இக்கூட்டாண்மை செயல்பாட்டை அறிவித்து பேசியதாவது:

“உலகெங்கிலும் உடல்நலத் துறையில் நேர்மறை மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும் மற்றும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு எமது மருத்துவ சேவை சென்றடைய வேண்டுமென்று எமது தொலைநோக்கு குறிக்கோளின் அடிப்படையில் பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டல் லிமிடெட் உடன் இந்த ஒத்துழைப்பை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். 

சிட்டகாங்கில் அமைந்துள்ள அவர்களது மருத்துவ மனையின் மேலாண்மையில் எமது மிக நேர்த்தியான நிபுணத்துவத்தையும், அனுபவத்தையும் வழங்குவதே இதன் நோக்கம்.  பங்களாதேஷ் நாட்டில் இம்மருத்துவ மனையின் செயல்பாட்டை இன்னும் வலுப்படுத்தவும் மற்றும் உறுதியான நம்பிக்கையை கட்டமைப்பதன் மூலம் நோயாளிகளுக்கு ஒரு வலுவான மருத்துவக் குழுவை உருவாக்கவும் நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். 

நோயாளிகளின் நலனை உறுதி செய்வதும் மற்றும் அவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான சூழலமைப்பை உருவாக்குவதும் பங்களாதேஷின் அப்போலோ – இம்பீரியல் ஹாஸ்பிட்டலின் முதல் பொறுப்பாக இருக்கும்.” 

இம்பீரியல் ஹாஸ்பிட்டல் – ன் தலைவர் புரொஃபசர் டாக்டர். ரபியுல் ஹுசேன் இந்நிகழ்ச்சியின்போது பேசுகையில், “சுகாதார பராமரிப்பில் உலகளவில் முதன்மை வகிக்கின்ற மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சைக்கான ஒரு தனித்துவமான பெருநிறுவனமாகவும் திகழும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் உடன் கூட்டாக இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். 

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் உடனான எமது கூட்டாண்மை, பங்களாதேஷில் சுகாதார சூழல் கட்டமைப்பை மேம்படுத்தும் மற்றும் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.  இப்பிராந்தியத்தில் மிக உயர்ந்த மூன்றாம்நிலை பராமரிப்பு சேவைகளை இணைந்து வழங்குவதில் ஒருங்கிணைந்த ஒரு அணுகு முறையை கொண்டிருப்பதை நாங்கள் ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறோம்,” என்று கூறினார். 

அப்போலோ குழும புற்றுநோயியல் மற்றும் சர்வதேச செயல்பாடுகள் பிரிவின் தலைவர் திரு. தினேஷ் மாதவன் கையெழுத்திடப்பட்டுள்ள இவ்வொப்பந்தம் குறித்துப் பேசுகையில்,

Read Also  அப்போலோ மருத்துவ மனையில் மார்பில் மீண்டும் வளரக்கூடிய மிகவும் அரிதான பெரிய கட்டியை சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி சாதனை!

“பங்களாதேஷில் உடல்நல பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவது, உடனடி அவசரத் தேவையாக இருந்த நிலையில் இதை குறிக்கோளாக கொண்டு உலக வங்கியின் ஆதரவோடு 375 படுக்கை வசதிகள் கொண்ட ஒரு மூன்றாம்நிலை உயர் மருத்துவமனையாக இம்பீரியல் ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவப்பட்டது. 

இந்த உயர் சிகிச்சை மையத்திற்கு அனுபவமும், திறனும் மிக்க மருத்துவமனை மேலாண்மை கூட்டாளி தேவைப்பட்ட நிலையில், இம்மருத்துவமனை அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் லிமிடெட் – ஐ இதற்காக தேர்வு செய்திருக்கிறது. 

அப்போலோ இம்பீரியர் ஹாஸ்பிட்டல்ஸ் வழியாக உயர்தர சிகிச்சை பங்களாதேஷ் மக்களுக்கு கிடைக்கும் என்பதால், இந்திய மற்றும் பங்களாதேஷ் ஆகிய இருநாடுகளின் சுகாதார பராமரிப்பு கூட்டாண்மை செயல்பாடுகளில் இந்நாள் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாக இருக்கிறது.” என்று கூறினார். 

உலகளவிலான தரவரிசையில் மிகச் சிறந்த மருத்துவ மனைகளுள் ஒன்றாக இடம்பெற்றிருக்கும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் மிகநவீன மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. 

இதுவரை 150 நாடுகளைச் சேர்ந்த, 150 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளுக்கு இது சிறப்பான சிகிச்சைகள் வழங்கியிருக்கிறது. 

இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சேவைகளுள், மூன்றாம்நிலை உயர் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை, டெலிமெடிசின் வழியாக தொலைதூர அமைவிடங்களிலுள்ள நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் கலந்தாலோசனை, உயர்தர மருத்துவர்களாக ஆவதற்கு இளம் தலைமுறையினருக்கு உத்வேகமளிப்பது, தரமான சுகாதார சேவை சூழலமைப்புகளை கட்டமைக்க நாடுகளுக்கும், தொழில் பெரு நிறுவனங்களுக்கும் ஆதரவளிப்பது ஆகியவையும் உள்ளடங்கும்.

மிகச்சிறந்த நிபுணத்துவத்தையும், நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி கனிவுடன் கூடிய சிகிச்சையை வழங்கும் உலகின் நேர்த்தியான, திறனும், அனுபவமும் கொண்ட மருத்துவர்களின் மிகப்பெரிய வலையமைப்பைக் கொண்டு அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் இயங்கி வருகிறது.  சிகிச்சையில் மிகச்சிறந்த விளைவுகளைத் தொடர்ந்த நிலையாக வழங்குகின்ற சாதனைப் பதிவினை அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் கொண்டிருக்கிறது.  

தனியார் துறையில் ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார சேவைகள் வழங்கலில் ஆசியாவில் முதன்மை வகிக்கும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் – ல், 50 நாடுகளில் செயல்படுகின்ற மருத்துவமனைகள், மருந்தகங்கள், தொடக்கநிலை சிகிச்சை மற்றும் நோயறிதல் கிளினிக்குகள் மற்றும் டெலிமெடிசின் பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. 

Read Also  அப்போலோ மருத்துவமனை, நம் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு குடல் நோய் அழற்சி அதிகரிப்பது குறித்து எச்சரிக்கிறது!

உடல்நலக் காப்பீடு சேவைகள், உலகளவில் செயல்திட்ட அமலாக்க ஆலோசனை, செவிலியர் பணி மற்றும் மருத்துவ மேலாண்மைக்கான கல்லூரிகள், உலகளாவிய மருத்துவ ஆய்வுகள் மீது சிறப்பு கவனம் செலுத்தும் ஒரு ஆராய்ச்சி ஃபவுண்டேஷன், தொற்றுநோயியல் ஆய்வுகள், ஸ்டெம் செல் மற்றும் மரபணு ஆராய்ச்சி ஆகிய பல்வேறு செயல்பாடுகள் வழியாக அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், அதன் செயல்பாடுகளையும், சேவைகளையும் தொடர்ந்து விரிவாக்கி வந்திருக்கிறது.  

அப்போலோ இன்டர்நேஷனல் என்பது, அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் – ன் ஒரு துணை நிறுவனமாகும்; உலகத்தரத்தில் மருத்துவமனைகளை நிறுவவும் மற்றும் ஏற்கனவே இருந்து வரும் உடல்நல பராமரிப்பு சேவைகளை மேம்படுத்தவும் அரசுகளுடனும் மற்றும் பிற நிறுவனங்களுடனும் இது இணைந்து செயல்படுகிறது.  ஏற்கனவே சிறப்பாக இயங்கிவரும் அமைப்பு முறைகளை புதிய அமைவிடங்களில் செயல்படுத்துவது மற்றும் சிறந்த மருத்துவ மேம்பாடுகளை சாத்தியமாக்குவது என்பதில் இதன் நிரூபிக்கப்பட்ட சாதனைப்பதிவு இப்பிரிவின் நிபுணத்துவம் மற்றும் வளர்ச்சிக்கான மிகப்பெரிய சாத்தியத்திற்கு சான்றாக இருக்கிறது.  இப்பிரிவு உலகளவில் 50,000-க்கும் அதிகமான மருத்துவப் பணியாளர்களை பணிக்கு தேர்வு செய்திருப்பதோடு,

70-க்கும் கூடுதலான செயல்திட்டங்களைப் பூர்த்தி செய்திருக்கிறது. 

யுகே, மொரீஸியஸ், எகிப்து, பார்படாஸ், வியட்நாம், ஃபிஜி தீவு, பஹ்ரைன் மற்றும் நைஜீரியா போன்ற 25 நாடுகளில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் செயல்பட்டு வருகிறது; ஸ்ரீலங்கா, எத்தியோப்பியா, கென்யா, கானா, ஜாம்பியா, கேமரூன், யுஏஇ, சவுதி அரேபியா மற்றும் சமோவா ஆகியவற்றில் இதன் செயல்திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

உலகெங்கிலும் அப்போலோ இன்டர் நேஷனலின் ஆலோசனை (கன்சல்ட்டிங்) செயல்திட்டங்கள், அந்தந்த நாட்டு மக்களோடு திறம்பட பணியாற்றுகின்ற இப்பிரிவின் திறனுக்கு சாட்சியமாக திகழ்கின்றன. 

உள்ளூர் மக்களது சமூக, கலாச்சார மற்றும் பாரம்பரிய வழிமுறைகளை மதிக்கும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் கலாச்சார ரீதியில் முற்றிலும் மாறுபட்ட புவியியல் அமைவிடங்களில் மருத்துவ மனைகளை நிறுவுவதிலும் மற்றும் நிர்வகிப்பதிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வந்திருக்கிறது.  

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *