பிராக்டிகலி இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் விரைந்த வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு தயாராகவும் EdTech துறையில் நிலவும் சந்தைப் போக்குகளை முறியடிப்பதாகவும் உள்ளது

சென்னை 06 ஜூலை 2022 பிராக்டிகலி இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் விரைந்த வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு தயாராகவும் EdTech துறையில் நிலவும் சந்தைப் போக்குகளை முறியடிப்பதாகவும் உள்ளது

ஃபெடனாவை இணைப்பது நேர்மறையான பிராக்டிகலியின் வருவாய் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறதுஇந்த ஆண்டு பணியாளர்களின் எண்ணிக்கையை 66% அதிகரிக்க இலக்கு கொண்டுள்ளது

~சர்வதேச அளவிலான வளர்ச்சியுடன் இணைந்து மொத்த பள்ளி எண்ணிக்கையில் 50% வளர்ச்சி கண்டுள்ளது

ஜனவரி முதல் மே 2022 வரை ARR 3X வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது; FY23-இல் $10 மில்லியன் மொத்த வருவாயை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

Chennai,ஜூலை-6, 2022: 6-12 வகுப்பு மாணவர்கள் விருப்பத்தோடு எளிதாகக் கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் அனுபவ முறையான கற்றல் பயன்பாடு கொண்ட திறன் கொண்ட , புதுமையான இ-லேர்னிங் தயாரிப்பைக் கொண்டுள்ள பிராக்டிகலியானது எட்டெக் துறையின் தற்போதைய சந்தைப் போக்குகளுக்கு மாறாக, ஜனவரி முதல் மே 2022 வரையான காலகட்டத்தில் 3Xக்கு மேல் நம்பிக்கைக்குரிய ARR (சராசரி வருவாய் விகிதம்) வளர்ச்சியை எட்டியுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளான SEA மற்றும் MENA போன்றவற்றில் அதிக பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் வலுவான வளர்ச்சி வேகத்தை உறுதி செய்வதை இந்நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. பிராக்டிகலி தனது K-5 பிரிவுகளுக்கான தயாரிப்பை இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்த உள்ளது, மேலும் STEM தவிர சமூக அறிவியல் மற்றும் ஆங்கிலமும் தற்போது வழங்கப்படுகிறது. அத்துடன், உலகம் முழுவதும் K-12 பிரிவில் முழுமையான கற்றல் தீர்வுக வழங்கும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

Read Also  இந்தியா தான்சானியா வர்த்தக ஆணையம் துவக்க விழா நடைபெற்றது.

சமீபத்தில் மும்பை மற்றும் மொஹாலியில் தனது பணியை விரிவாக்கியுள்ள இந்நிறுவனம் அடுத்த ஒரு வருடத்தில் அதன் பணியாளர்களின் எண்ணிக்கையை 66% அதிகரிக்கவுள்ளது. தற்போது 300 பணியாளர்கள் கொண்ட குழுவை பிராக்டிகலி கொண்டுள்ளது.

ஃபெடனாவின் (பள்ளிகளுக்கான ERP) இணைப்புடன் பிராக்டிகலியின் முழுமையான தயாரிப்பு தொகுப்பானபிராக்டிகலி ஸ்கூல் சொல்யுஷன்பள்ளிகளால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது முக்கிய சர்வதேச பள்ளிகளை உள்ளடக்கிய பிராண்டின் 50% ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளது. இப்போது 21.5 மில்லியன் பயனர்கள், 40,000+ பள்ளிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள 180 நாடுகளில் கூட்டாக உள்ள நிறுவனங்களை பிராக்டிகலி கொண்டுள்ளது.

அக்டோபர் 2021 இல் Google PlayStore-இல் முன்னணியில் உள்ள முதல் பத்து கல்விப் பயன்பாடுகளில் பிராக்டிகலி இடம்பெற்றுள்ளது மற்றும் Tracxn-ஆல் மினிகார்ன்‘ ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அனுபவம் சார்ந்த கற்றல் பிரிவில் இந்த பிராண்ட் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்பதற்கான சான்றாகும்.

திருமதி. சாரு நோஹேரியாஇணை நிறுவனர் மற்றும் COO, பிராக்டிகலி, நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி இயக்கிகள் குறித்து கருத்து தெரிவிக்கையில் “ஒரு குறுகிய காலத்தில்வலுவான வளச்சி பெற்றுள்ள பிராக்டிகலி FY23-இல் $10 மில்லியன் மொத்த வருவாயை அடைவதை நோக்கி நகர்கிறது. இந்திய சந்தைகளில் இருந்து 40% வருவாயையும்சர்வதேச அளவில் மீதியையும் நாங்கள் எட்ட முயற்சிக்கிறோம். கற்றலில் AI மற்றும் AR-இன் ஆற்றலை வெளிப்படுத்தும், இத் தொழில்துறையில் முதல் முறையாக வழங்கப்படும் பல புரட்சிகரமான அம்சங்களை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். தற்போது பெற்றுவரும் வளர்ச்சி விகிதம் அடுத்த ஆறு மாதங்களில் எங்கள் சீரீஸ் நிதியுதவிக்கு வழிவகுப்பதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *