பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கான திருமண உதவித்தொகை உயர்வு!

சென்னை 05 ஆகஸ்ட் 2022 பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கான திருமண உதவித்தொகை உயர்வு!

பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கான திருமண உதவித்தொகையினை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2021-22-ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் போது அறிவித்த அறிவிப்பிற்கிணங்க உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் “பத்திரிகையாளர் நல வாரியம்” ஒன்றை உருவாக்கி மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டது.

அரசாணையில் நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஏனைய பிற நலத் திட்ட உதவிகளுடன், திருமண உதவித் தொகையாக ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) வழங்கப்படும் எனவும் ஆணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளில் திருமண உதவித் தொகையினை ரூபாய் இரண்டாயிரத்திலிருந்து மூன்றாயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *