அமைச்சர் கார் செல்லும் வரை காத்திருந்த ஆம்புலன்ஸ்: சமூக ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.!

சென்னை 07 ஆகஸ்ட் 2022 அமைச்சர் கார் செல்லும் வரை காத்திருந்த ஆம்புலன்ஸ்: சமூக ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.!

தஞ்சாவூர்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வுக்கு வந்த போது, ஆம்புலன்ஸ்சை காவல் துறையினர் காக்க வைத்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்,, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள், கொள்ளிடம் கரைகளை பார்வையிட்டனர்.

திருவிடைமருதுார் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் ஆய்வு செய்ய, அமைச்சர் மற்றும் கட்சி பிரமுகர்களின் 25 கார்கள் அணிவகுத்தன.

அப்போது, பாலத்தின் மறு பக்கத்தில், அமைச்சர் கார் செல்லும் வரை, காவல் துறையினரால் ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டது.

அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் சென்ற பிறகே, நீண்ட நேரம் காத்திருந்த ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

அமைச்சர் வாகனத்திற்காக, பல மணி நேரமாக ஆம்புலன்ஸ் வாகனத்தை போலீசார் நிறுத்தியது கண்டனத்திற்குரியது.

ஆம்புலன்ஸ்சில் நோயாளி இருந்தாலும், இல்லா விட்டாலும் அவரசமாக சைரன் ஒலித்தால், உடனே போக்குவரத்தை சரி செய்து, ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட வேண்டும் என்பது தான் விதி.

இது கூட தெரியாமல் காவல் துறையினர் இருந்துள்ளனர்.

ஒரு வேளை ஆம்புலன்ஸ்சில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நோயாளி இறந்திருந்தால் யார் பொறுப்பேற்பது.

அமைச்சர் மற்றும் கலெக்டர் கட்சியின் பிரமுகர்கள் பொறுப்பேற்றுக்கொள்வார்கள்

Read Also  ஆளும் கட்சி எம்.பி. உட்பட 3 பேர் உயிரிழப்பு 150-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்தார்!!

இவ்வாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *