இனி மேல் சார்ஜர் கிடையாது- பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனம் அறிவிப்பு.

சென்னை 09 ஏப்ரல் 2022  இனி மேல் சார்ஜர் கிடையாது- பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனம் அறிவிப்பு.

இனி ஸ்மார்ட்போன்களுக்கு
சார்ஜர் பயன்பாடு குறைந்தால் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுவது குறையும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி சார்ஜர் நிறுத்தப்படுவதாக ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியல்மி ஸ்மார்ட்போன்
நிறுவனம் தனது நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போனுக்கு சார்ஜர் வழங்கப்படாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஆப்பிள், சாம்சங் ( சில மாடல்களுக்கு மட்டும்) நிறுவனங்கள் சார்ஜர் வழங்குவதை நிறுத்திய நிலையில் தற்போது ரியல்மி நிறுவனமும் அறிவித்துள்ளது.

சார்ஜர் வழங்காதது மூலம் ஸ்மார்ட்போன்களொன் விலை மேலும் குறைக்கப்பட்டு, கூடுதல் சலுகையுடன் வழங்கப்படும்.

என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் எல்லா ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கும் சார்ஜர் நிறுத்தப்படவில்லை.

நார்சோ 50A ப்ரைம் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது என ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியல்மி நிறுவனம் இந்த மாடலின் விற்பனை மற்றும் பயனர்களின் தரும் ஆதரவை பொறுத்து பிற போன்களுக்கும் சார்ஜர் வழங்குவதை நிறுத்தும் என கருதப்படுகிறது.

ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி ஏ73, கேலக்ஸி ஏ53, கேலக்ஸி ஏ33 ஆகிய போன்களுக்கும் சில ஃபிளாக்‌ஷிப் போன்களுக்கும் சார்ஜரை நிறுத்தியுள்ளது.

ஜியோமி நிறுவனம் எம்11 ஸ்மார்ட்போன்கள்க்கு சார்ஜர் வழங்குவதை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் முதல் அறிவித்தது.

இருப்பினும் சர்வேதச சந்தைகளில் மட்டுமே எம்.ஐ 11 போனுக்கு சார்ஜர் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *