whatsapp செயலியில் புதிய அம்சங்கள் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது பயன்படுத்துபவர்களுக்கு சூப்பர் நியூஸ் பயன்படுத்த எளிய வழி இதோ.!!!!

சென்னை 22 அக்டோபர் 2022 whatsapp செயலியில் புதிய அம்சங்கள் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது பயன்படுத்துபவர்களுக்கு சூப்பர் நியூஸ் பயன்படுத்த எளிய வழி இதோ.!!!!

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் தங்களின் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு whatsapp நிறுவனம் அவ்வபோது பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.

அதன்படி ஜூம் மற்றும் கூகுள் மீட் செயலிகளில் உள்ளது போல வாட்ஸ் அப்பில் ஆடியோ அல்லது வீடியோ கால்களை உருவாக்க லிங்குகளை உருவாக்கும் அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு கிடைத்துள்ளது.

இந்த புதிய அம்சம் உங்களின் மொபைலில் செயல்படவில்லை என்றால் உடனடியாக வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யுங்கள்.

அப்படி அப்டேட் செய்து விட்டு இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம் வாங்க…

முதலில் வாட்ஸ் அப்பில் சென்று கால்ஸ் பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் create call link – share a link for your WhatsApp call என்று மேலே இருக்கும்.

அதில் அழைப்பு இணைப்பை உருவாக்கு என்பதை தேர்வு செய்து உங்களுக்கு நார்மல் மற்றும் வீடியோ அழைப்பிற்கான இணைப்பும் காட்டப்படும்.

இணைப்புக்கு கீழே call type, send via whatsapp copy link and share link என்ற நான்கு தேர்வுகள் இருக்கும்.

இப்போது நீங்கள் வீடியோ அழைப்பு இணைப்பை ஆடியோ அலைபாக மாற்ற விரும்பினால் அழைப்பு வகை என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Read Also  ஒரே ஒரு முறை மட்டும் சார்ஜ் செய்தால் போதும் 30 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்

வீடியோ மற்றும் குரல் என்று அழைப்பு வகையின் கீழ் இரண்டு விருப்பங்கள் இருக்கும்.

தற்போது நீங்கள் வாட்ஸ் அப்பில் இணைப்பை பகிர விரும்பினால் வாட்ஸ் அப் மூலமாக இணைப்பை அனுப்பு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.பின்னர் இணைப்பை நகலெடுக்க விரும்பினால் இணைப்பை நகலெடு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *