ஒரே ஒரு முறை மட்டும் சார்ஜ் செய்தால் போதும் 30 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்

சென்னை 10 ஏப்ரல் 2022 ஒரே ஒரு முறை மட்டும் சார்ஜ் செய்தால் போதும் 30 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.

இந்த இயர்போனை 10 நிமிட சார்ஜ் செய்தாலே 100 நிமிடம் பிளேபேக் டைம்மை பெற முடியும் என ரியல்மி நிறுவனம் கூறியுள்ளது.

ரியல்மி நிறுவனத்தின் பட்ஸ் ஏர் 3 TWS இயர்போன்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் 10 mm டைனமிக் பேஸ் பூஸ்ட் டிரைவர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த இயர்போனில் TUV-Rhienland சான்றிதழ் வழங்கிய நாய்ஸ் கேன்சலேஷன் வசதி தரப்பட்டுள்ளது.

இது 2 மைக்ரோஃபோன்கள் மற்றும் டிரான்ஸ்பரன்ஸி மோடுடன் 42dB வரை இரைச்சலை குறைக்கக்கூடியது.

மேலும் ரியல்மி பட்ஸ் ஏர் 3 88ms குறைந்த லேட்டன்ஸியை கேம் மோடுடன் வழங்குகிறது.

இது முந்தைய ஜெனரேஷனை விட 35 சதவீதம் குறைந்த லேட்டன்ஸி ஆகும்.

இந்த இயர்போனில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி v5.2 வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 2 சாதனங்களை இந்த இயர்போனில் இணைக்கமுடியும். இதில் கூகுள் ஃபாஸ்ட் பேர் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது.

இந்த இயர்போன் IPX5 ரேட்டர்ட் வியர்வை மற்றும் தண்ணீர் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட்டுள்ளது.

இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் டோட்டல் பிளேபேக் வழங்கப்படும். 10 நிமிட சார்ஜில் 100 நிமிடம் பிளேபேக் டைம்மை பெற முடியும்.

இந்த இயர்போனின் விலை ரூபாய் 3999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அறிமுக விலையாக ரூபாய் 3499-க்கு இந்த இயர்போன் கிடைக்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *