சென்னை உள்ள திறமையான என்ஜினியர்களை பணியில் அமர்த்த வேர்ல்டு லைன் நிறுவனம் திட்டம்.!!

சென்னை 31 ஜனவரி 2023 சென்னை உள்ள திறமையான என்ஜினியர்களை பணியில் அமர்த்த வேர்ல்டு லைன் நிறுவனம் திட்டம்.!!

பேடெக் முன்னோடி திட்ட பயிற்சியை மாணவர்களுக்கு வழங்க  பிரபல என்ஜினியரிங் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, செயின்ட் ஜோசப் என்ஜினியரிங் கல்லூரி, பிஎஸ்ஏ கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, ஸ்ரீவெங்கடேஸ்வரா என்ஜனியரிங் கல்லூரி மற்றும் ராஜலட்சுமி என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு வேர்ல்டுலைன் பேடெக் முன்னோடி திட்ட பயிற்சி 

சென்னை, ஜன. 31–2023: உலக அளவில் மின்னணு பணம் செலுத்தும் சேவைகள் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் வேர்ல்டுலைன் நிறுவனம் பேடெக் முன்னோடி திட்ட பயிற்சியை அளிப்பதற்காக சென்னையில் உள்ள 8 பிரபல என்ஜினியரிங் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

வேர்ல்டுலைன் இந்தியா அதன் வளர்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக பேடெக் முன்னோடித் திட்டத்தை இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தி அதன் மூலம் சிறந்த என்ஜினியரிங் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதாகும். இந்த பேடெக் முன்னோடித் திட்டமானது மாணவர்களுக்கு பயனளிக்கும் அதே வகையில் அதன் கட்டமைக்கப்பட்ட தொழில் சார்ந்த பயிற்சியானது நிறுவனங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க உதவும். இது மாணவர்களின் செயல்பாடுகளில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதோடு, அவர்களின் வேலை வாய்ப்புக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கும்.

Read Also  தனது ரசிகர்களுக்கு பிஸ்சா ட்ரீட் வைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்!

பின்வரும் கல்லூரிகளுடன் இணைந்து பேடெக் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அது குறித்த விவரம் வருமாறு:–

  • வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 
  • சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 
  • ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 
  • எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி 
  • செயின்ட் ஜோசப் என்ஜினியரிங் கல்லூரி 
  • பிஎஸ்ஏ கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி
  • ஸ்ரீவெங்கடேஸ்வரா என்ஜனியரிங் கல்லூரி 
  • ராஜலட்சுமி என்ஜினியரிங் கல்லூரி

இந்த திட்டம் செயல்பாடு குறித்து வருமாறு:–

3–ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் பேடெக் முன்னோடி திட்டத்தில் பயிற்சி பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். அவர்கள் ஹேக்கத்தானில் சேருவதற்கு அவர்களின் பாடங்களில் குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். ஹேக்கத்தானில் தேர்வு செய்யப்படும் முதல் நான்கு வெற்றியாளர்கள் பேடெக் முன்னோடியாக வேர்ல்டுலைன் இந்தியாவில் இணைவார்கள்.

இது குறித்து தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான வேர்ல்டுலைன் செயல் தலைவர் தீபக் சந்தனானி கூறுகையில், இளம் திறமையாளர்களை நாங்கள் மதிக்கிறோம். ஏனெனில், அவர்களால் ஒரு நிறுவனத்தை புதிய கண்ணோட்டத்துடன் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும். எங்களின் பேடெக் முன்னோடி திட்டத்தை தொடங்குவதற்கு சென்னையில் உள்ள பிரபல என்ஜினியரிங் கல்லூரிகள் சிலவற்றுடன் இணைந்து இருப்பது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தத் திட்டம் மேற்கண்ட என்ஜினியரிங் கல்லூரிகளில் அவர்களின் பாடத்திட்டத்தில் கட்டமைக்கப்பட்ட தொழில் சார்ந்த பயிற்சியை வழங்குவதற்கும், வேலைவாய்ப்பிற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குவதன் மூலம் கார்ப்பரேட் உலகில் புதிய மாற்றத்தை உறுதி செய்வதற்கும் உதவும். பணம் செலுத்துதல், வாழ்க்கை முறை மற்றும் வர்த்தகம் போன்றவற்றிற்கான புதிய தொழில்நுட்பங்களை நாங்கள் தொடர்ந்து வடிவமைக்கும்போது, அதை செயல்படுத்துவதற்கு திறமைமிக்க இளைஞர்களை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

Read Also  லுமினஸ் பவர் டெக்னாலஜிஸ் ஐகான் மற்றும் உயர் திறன் இன்வெர்ட்டர் வரம்பை அறிமுகப்படுத்துகிறது.!

வேர்ல்டுலைன் இந்தியா தனது மும்பை, புனே, பெங்களூர் மற்றும் சென்னை அலுவலகங்களில் ஒவ்வொரு ஆண்டும் 100 பயிற்சி பொறியாளர்களை பணி அமர்த்த திட்டமிட்டுள்ளது.

இதன் பாடத்திட்டத்தில் புதிதாக சேருபவர்கள் Java, Dot Net, C++, Testing, PHP, Python, MYSQL, Postgres மற்றும் பிற சாப்ட்வேர்களை கற்றுக்கொள்வதன் மூலம் இளம் பட்டதாரிகள் முதல் முழு-ஸ்டாக் டெவலப்பர்கள் வரை தங்கள் மாற்றுப் பயணத்தைத் தொடங்க முடியும். இந்த பயிற்சி பெறும் பேடெக் முன்னோடிகள் முழு மென்பொருள் மேம்பாட்டு வாழ்க்கைச் சுழற்சியை செயல்படுத்துதல், தேவைகளைச் சேகரித்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் தீர்வுகளை முன்மொழிதல், குறியீட்டின் தரம், நம்பகத்தன்மை, சரிசெய்தல், பிழைத்திருத்தம் மற்றும் ஏற்கனவே உள்ள அமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளில் செயல்பட முடியும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *