வாட்ஸ்ஆப் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் கூகிள் மெசேஜ்ஸ் ஆப் செயலி – புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ்ஆப் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் கூகிள் மெசேஜ்ஸ் ஆப் செயலி – புதிய வசதி அறிமுகம்!

சென்னை 27 நவம்பர் 2023 மக்கள் பலர் வாட்ஸ்ஆப், சிக்னல் போன்ற தகவல் பரிமாற்றம் செய்யும் செயலிகளை பயன்படுத்திய வரும் நிலையில் அதற்கு போட்டியாக கூகிள் மெசேஜ்ஸ் ஆப் செயலியில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

கூகுள் அறிவிப்பு:
மக்கள் ஆண்ட்ராய்டு போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கும் நிலையில், அதிகமாக வாட்ஸ்ஆப், சிக்னல் போன்ற குறுந்தகவல் செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த செயலிகளுக்கு போட்டியாக கூகிள் மெசேஜஸ் ஆப் செயலியில் (Google Messages) புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன . அதன் படி மெசேஜஸ் செயலியில் ஆர்.சி.எஸ் எனப்படும் ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதி வாட்ஸ்அப், சிக்னல் போன்ற செயலிகளுக்குப் போட்டியை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெசேஜஸ் செயலியில் எமோஜி ரியாக்ஷன்ஸ் அம்சம், யூடியூப் வீடியோக்களை மெசேஜஸ் செயலியில் இருந்தபடி பார்க்கும் வசதி ஆகியவை அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

மெசேஜஸ் செயலியில் வாய்ஸ் நோட்ஸ் அம்சம் மூலம் பயனர்கள் சிறிய வாய்ஸ் நோட்-ஐ ரெக்கார்டு செய்து அதனை மெசேஜஸ் ஆப் மூலம் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.

அ.சா.அலாவுதீன்
முதன்மை மண்டல செய்தியாளர்
நமது தேடல்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *