ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் உருவாக்கிய உடனடி KCC-க்கான முன்னோடித்திட்டத்தை அறிமுகம் செய்யும் பெடரல் வங்கி!
சென்னை 20 செப்டம்பர் 2022 ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் உருவாக்கிய உடனடி KCC-க்கான முன்னோடித்திட்டத்தை அறிமுகம் செய்யும் பெடரல் வங்கி!
சென்னை 19 , செப்டம்பர் 2022: மாத தொடக்கத்தில், தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஊரக (கிராமப்புற) நிதி வழங்கலை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை பெடரல் வங்கியை, கூட்டாளி வங்கியாகவும் மற்றும் மாநில அரசின் தீவிர ஒத்துழைப்போடும் சேர்த்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப்-ஆல் உருவாக்கப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு நடவடிக்கையின் முன்னோடித்திட்டமானது.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி, ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் மற்றும் தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகள் கலந்துகொண்ட ஒரு விழாவில் இன்ஸ்டன்ட் கிஸான் கிரெடிட் கார்டுக்கான (KCC) (விவசாயிகளுக்கான உடனடி கடன் அட்டை) முன்னோடித் திட்டத்தை பெடரல் வங்கி அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கிறது.
வேளாண் துறையில் நிதி வழங்கலில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்படுவதாக இந்த டிஜிட்டல் கடன் செயல்திட்டம் இருக்கிறது.
சௌகரியம் மற்றும் இச்செயல் திட்டத்திற்காக எடுக்கக்கூடிய நேரம் ஆகிய அம்சங்களைப் பொறுத்தவரை கடன் வழங்கலில் தற்போது இருந்துவரும் பாரம்பரியமான வழிமுறையோடு ஒப்பிடுகையில் விவசாயிகளுக்கு இது ஒரு புதிய அணுகுமுறையாக இருக்கும்.
தொடக்கத்திலிருந்து முடிவு வரை விரிவான டிஜிட்டல் மற்றும் தாள் பயன்பாடு இல்லாத பயணத்தை ஏதுவாக்குவதற்கு சிறப்பு திறன்களை கொண்டதாக இச்செயல் தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இச்செயல் திட்டத்தில் இணைகின்ற செயல்நடவடிக்கை E-kyc வழியாக நிகழும்; TN-eGA இணைய வாசலிலிருந்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நில பதிவுருக்கள் / ஆவணங்கள் பெறப்படுகின்றன; வழங்கப்படும் நிதி / கடனின் அளவு தானியக்க முறையில் கணக்கிடப்படுகிறது மற்றும் இதற்கான ஆவண செயலாக்கம், e-sign (மின்னியல் முறையில் கையொப்பம்) வழியாக நிகழ்கிறது.
இவ்வளவு சிறப்பு வசதிகள் கொண்ட இச்செயல்திட்டமானது, சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு குறைந்த மதிப்பிலான, சிறிய தொகையிலான கடன்களை வழங்குவதை இலக்காகக் கொண்டிருக்கிறது.
மேலும், இதுவரை சேவை வழங்கப்படாத மற்றும் குறைவாக சேவை வழங்கப்படுகிற கிராமப்புற பொதுமக்களுக்கு திறன்மிக்க கடன்வசதியினை ஏற்பாடு செய்வதற்காக இந்த செயல்தளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் (RBIH)-ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு. ராஜேஷ் பன்சால், இச்செயல்திட்டத்தின் அறிமுகம் குறித்து கூறியதாவது:
இந்தியாவில் கிராமப்புற / ஊரக நிதி / கடன் என்பது பொருளாதார வளர்ச்சியோடு நெருக்கமான பிணைப்பை கொண்டிருக்கிறது.
இத்தகைய சூழலில், RBI-ன் ஒத்துழைப்போடு கிஸான் கிரெடிட் கார்டு (KCC) கடன் வழங்கல் செயல்பாட்டில் தொடக்கத்திலிருந்து இறுதிவரை டிஜிட்டல்மயமாக்கலுக்கான ஒரு முன்னோடி செயல்திட்டத்தை RBIH-ல் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.
தமிழ்நாடு மாநிலத்தில், மாநில அரசின் தீவிர பங்கேற்போடு பெடரல் வங்கியால் இப்போது, தொடங்கப்படுகிற இச்செயல் திட்டமானது, நமது விவசாயிகளுக்கு சிரமமில்லாமல் எளிதாக கடன் வசதி கிடைக்கப் பெறுவதற்கான சாத்தியங்களை திறந்து வைக்கிறது.
இச்செயல்திட்டம் சிறப்பான வெற்றிபெறும் என்று நாங்கள் எதிர்நோக்குகிறோம் மற்றும் நாடு முழுவதும் இது அமலாக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் மற்றும் அதற்காக காத்திருக்கிறோம்.’’
பெடரல் வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. ஷியாம் சீனிவாசன் அவரது உரையில் கூறியதாவது :
ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் மற்றும் தமிழ்நாடு மாநில அரசின் ஒத்துழைப்போடு, நமது விவசாயிகளின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிற சிறப்பான தீர்வுகளை இப்போது வழங்க இயலும் என்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
தொழில்நுட்பத்தின் உதவியோடு, விவசாயிகளுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை வழங்குவதற்கு இச்செயல் திட்டம் உதவும். முறைப்படுத்தப்பட்ட வங்கி சேவை அமைப்பிலிருந்து கடன் பெறுவதற்கு எளிதான அணுகுவசதி என்ற இலக்கை நோக்கி மாறும் செயல்திட்டத்தை இந்த அறிமுகம் துரிதமாக்கும்.
நமது பொருளாதாரத்தை முறைப்படுத்துதல் என்ற குறிக்கோளை நோக்கி எடுத்துவைக்கப்படும் மிக முக்கியமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளில் ஒன்றாக இது இருக்கிறது. நிலம் மற்றும் பிற சொத்து உரிமைத்துவ பதிவுருக்கள் மற்றும் ஆவணங்கள் அதிக எண்ணிக்கையில் பரவலாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும் போது, நமது சமூகத்தில் அதிக தகுதியுள்ள பிரிவினரின் இல்ல கதவுகளுக்கு கடன் வசதி சென்றடைவதற்கு டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படும் திறன் கொண்ட தீர்வுகள் உதவுமென்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.
தொழில் நுட்பத்தை மானுடத்துக்கு சிறப்பாக உதவும் வகையில் மாற்றுவதற்கான எமது நிலையான மன உறுதியும், அர்ப்பணிப்பும் இத்தகைய முயற்சிகளில் தெளிவாக வெளிப்படுகிறது.
புதிய மற்றும் இதுவரை வங்கிச்சேவையை முழுமையாக பெறாத சந்தைகளில் நிதி / கடன் வசதி கிடைப்பதை முன்னேற்ற வேண்டுமென்ற எமது பொறுப்புறுதியை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகவும், கௌரவமாகவும் இதனை நாங்கள் கருதுகிறோம்.
இதற்கான பயணம் இப்போது சிறப்பான தொடக்கத்துடன் நன்றாக நடைபெற்று வருகிறது என்று நான் நம்புகிறேன்.
இதுபோன்ற இன்னும் பல புத்தாக்கமான செயல் நடவடிக்கைகள் விரைவில் நிகழும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.’’