31 மார்ச் 2023 அன்று நிறைவுற்ற காலாண்டு/ மற்றும் நிறைவுற்ற ஆண்டிற்கான வங்கியின் நிதி நிலை குறித்த முடிவுகள்.!!
31 மார்ச் 2023 அன்று நிறைவுற்ற காலாண்டு/ மற்றும் நிறைவுற்ற ஆண்டிற்கான வங்கியின் நிதி நிலை குறித்த முடிவுகள்.!!
சென்னை 08 மே 2023 வங்கியின் உலகளாவிய வர்த்தகம் ₹ 10.95 லட்சம் கோடி எனும் நிலையை எட்டியது
இயக்க லாபம் ஆண்டிற்கு ஆண்டு (ஆ–ஆ) எனும் அடிப்படையில் உயர்வு 47% Q4FY23 … இது 20% (ஆ–ஆ) FY23
நிகர லாபம் ஆ–ஆ எனும் அடிப்படையில் உயர்ந்துள்ளது 47% Q4FY23
34% FY23
மார்ச2
- நிகர லாபம் மார்ச் 23ல் 47% உயர்வு (₹ 1447கோடி) இது மார்ச் 22ல் ₹984 கோடி (ஆ–ஆ) எனும் அடிப்படையில்
- இயக்க லாபம் மார்ச் 23ல் 47% உயர்வு (₹ 4016கோடி) இது மார்ச் 22ல் ₹2738 கோடி (ஆ–ஆ) எனும் அடிப்படையில்
- நிகர வட்டி வருவாய் மார்ச் 23ல் 29% உயர்வு (₹ 5508கோடி) இது மார்ச் 22ல் ₹4255 கோடி
- கட்டணம் மீது ஆதாரப்பட்டிருக்கும் வருவாய் 12% வளர்ச்சி (ஆ–ஆ) எனும் அடிப்படையில் இது மார்ச் 23ல் ₹914கோடி
- செலவுகளுக்கும் வருவாய்க்குமான விகிதம் மார்ச் 23ல் 46.57%. இது மார்ச் 22ல் 53.03% ஆக இருந்தது
- உள்நாட்டு நிகர வட்டி மார்ஜின் வளர்ச்சி மார்ச் 23ல் 3.59% இது 2.87%, மார்ச் 22 ஆக இருந்தது.
- சொத்துக்களின் மீதான ஈட்டம் மார்ச் 23ல் 0.82%, மார்ச் 22ல் இது 0.62%
- பங்கு பத்தி்ரங்களின் மீதான ஈட்டம் மார்ச் 23ல் 15.48% உயர்ந்துள்ளது, மார்ச் 22ல் இது 11.70% இருந்தது.
- கடன் வழங்குதல் 14% உயர்ந்துள்ளது (ஆ–ஆ) எனும் அடிப்படையில் மார்ச் 23ல் இது ₹473586 கோடி. மார்ச் 22ல் இது ₹415625 கோடியாக இருந்தது
- ராம் (சில்லறைக் கடன், விவசாயம் மற்றும் எம்எஸ்எம்இ)கடன் வழங்குதல் 12% உயர்ந்துள்ளது மார்ச் 23ல் இது ₹272679 கோடி. மார்ச் 22ல் இது ₹242700 கோடியாக இருந்தது
- ராம் பிரிவின் பங்களிப்பு மொத்த கடன் தொகைகளில் 61% ஆகும். சில்லறை, விவசாயம் மற்றும் எம்எஸ்எம்இ இவை முறையே 13%, 16% மற்றும் 7%. வளர்ச்சியானது (ஆ–ஆ) எனும் அடிப்படையில். வீட்டுக் கடன் 11% வளர்ச்சி, வாகனக் கடன் 28% மற்றும் தனிநபர் கடன் 46%. இவையனைத்தும் (ஆ–ஆ) எனும் அடிப்படையில்.
- வைப்பு நிதிகள் வளர்ச்சி, 5% ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் மார்ச் 23ல் வளர்ச்சி கண்டு ₹621166 கோடியாக நிலவியது
- காசா விகிதம் 42% ஆகும்
- ஜிஎன்பிஏ அடிப்படைப் புள்ளிகள் (ஆ–ஆ எனும் அடிப்படையில்) குறைந்து, மார்ச் 23ல் இது 5.95%, 252 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பு. இது மார்ச் 22ல் 8.47% என்என்பிஏ 137 அடிப்படைப் புள்ளிகள் (ஆ–ஆ எனும் அடிப்படையில்) குறைந்துள்ளது. இது மார்ச் 23ல் 0.90%. மார்ச் 22ல் இது 2.27% ஆகும்
- ஒதுக்கீடுகளின் விகிதம் (PCR including TWO) மார்ச் 23ல் 93.82% ஆகும், 644 அடிப்படைப் புள்ளிகள் முன்னேற்றம், இது மார்ச் 22 ல் 87.38%
- மூலதனப் போதுமை விகிதம் 16.49%. சி இ டி -1, 36 அடிப்படைப் புள்ளிகள் முன்னேற்றம், இது 12.89% . டயர் 1 மூலதனம் 31 அடிப்படைப் புள்ளிகள் முன்னேற்றம் (ஆ–ஆ எனும் அடிப்படையில்) இது 13.48 %
- நிகர லாபம் (ஆ–ஆ எனும் அடிப்படையில் வளர்ச்சி) இது FY 23 ₹ 5282 கோடி, 34% வளர்ச்சி. FY 22ல் இது ₹3945 கோடி
- இயக்க லாபம் 20% உயர்வு (ஆ–ஆ எனும் அடிப்படையில்) FY 23ல் இது ₹15271 கோடி FY 22ல் இது ₹ 12717 கோடி
- நிகர வட்டி வருவாய் 21% உயர்வு FY 23ல் இது ₹ 20225 கோடி இது FY 22ல் இது ₹16728 கோடி
- சொத்துக்களின் மீதான வருவாய் அடிப்படைப் புள்ளிகள் முன்னேற்றம். இது FY 23ல் 0.77%, FY 22ல் 0.63% ஆக இருந்தது
- பங்குகளின் மீதான ஈட்ட வருவாய் FY 23ல் இது 14.73% ஆகும். இது சென்ற FY 22ல் 12.13% ஆகும்
- வருவாய்க்கும் செலவுகளுக்குமான விகிதம் FY 23ல் இது 44.20% ஆகும். FY 22ல் இது 46.21 % ஆகும்.
- நிகர வட்டி மார்ஜின் 50 அடிப்படைப் புள்ளிகள் அதிகரிப்பு. FY 23ல் இது 3.41% ஆகும். FY 22ல் 2.91%
இயக்குநர் குழுமம் ஒவ்வொரு பங்கு பத்திரத்திற்கும் ₹8.60 (86%) (FY 23) எனும் முறையாக ஈட்டுத் தொகை அளிக்க வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்குட்பட்டு வழங்க வேண்டும் என்று பரிந்துரையளித்திருக்கிறது
31ங்கள்
வர்த்தகம்:
-
- மொத்த வர்த்தகம் ஆண்டிற்கு ஆண்டு (ஆ–ஆ) எனும் அடிப்படையில் ( 8% வளர்ச்சி ) ₹ 1094752 கோடி என்பதை மார்ச்23ல் அடைந்துள்ளது. இது மார்ச்22ல் ₹1009243 கோடி
- கடன் தொகைகள் 14 % வளர்ச்சி. மார்ச் 23ல் இது ₹ 473586 கோடி இது சென்ற வருடம் ₹415625 கோடி. ராம் (RAM) பிரிவு 12% வளர்ச்சி, சில்லறை, விவசாயம் மற்றும் எம்எஸ்எம்இ இவை முறையே 13%, 16% மற்றும் 7%. வளர்ச்சியானது (ஆ–ஆ) எனும் அடிப்படையில்.
- வைப்பு நிதி தொகை 5% வளர்ச்சி ஆ–ஆ எனும் அடிப்படையில். இது மார்ச் 23ல் ₹621166 கோடி. சென்ற வருடம் இது ₹593618 கோடி
- காசா வைப்பு நிதிகள் வளர்ச்சி 5% ஆ–ஆ எனும் அடிப்படையில். மார்ச் 23ல் இது ₹260809 கோடி. மொத்த டெபாசிட்டுகளில் காசா வைப்பு நிதிகள் பங்கு 42%
- முன்னுரிமைக் கடன்கள் ₹152992 கோடி, மார்ச் 23ல். இது ஏ என் பி சி 44% என்ற பங்கை வகிக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட வரையறை 40%
வலைப்பின்னலமைப்பு:
- வங்கிக்கு 5787 உள்ளூர் கிளைகள். இவற்றுள் 1964 ஊரகக் கிளைகள், 1517 புறநகர் கிளைகள், 1165 நகர்ப்புறம் மற்றும் 1141 மெட்ரோ வகைகளாகும். வெளிநாடுகளில் 3 கிளைகளும் 1 டிஜிட்டல் இயங்குமுறைக் கிளைகளும் (IBU) உள்ளன
- ஏடி எம் கள் & பி என் ஏக்கள் 4929, வர்த்தக முகவர்கள் 10750
எண்சார் வங்கிப் பரிமாற்ற முறைகள்:
- வங்கியானது 3 டிஜிட்டல் வங்கிக் கிளைகளை(DBU)தெற்கு தில்லி, லக்னவ் மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் நிறுவியுள்ளது.
- ஏடிஎம் & பி என் ஏ மற்றும் டிஜிட்டல் பரிமாற்ற அலைவரிசைகள் மூலம் நடத்தப்படும் பரிமாற்றங்கள் Q4FY23ல் ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் 8% அதிகரித்துள்ளன.
- மொபைல் போன் மூலம் நடத்தப்படும் பரிமாற்றங்கள் ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் 72% என்பதாக அதிகரித்து உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை 68%.
- யு பி ஐ பரிமாற்றங்களும் உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை 109%, உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை 27%
- நடப்பு ஆண்டில் வங்கியானது எண்ணற்ற எண்சார் முனைப்புகளை செயலாற்றியுள்ளது.
விருதுகளும் பாராட்டுப் பத்திரங்களும்:
-
- வங்கியானது கோல்டன் பீகாக் என்ற தேசிய அளவிலான விருதை, பயிற்சிகள் அளித்ததற்கான மார்ச் 2023ல் பெற்றுள்ளது.
- வங்கியானது, தேசிய அளவில் 14வது எஸ் எஃப் பி சி கே விருது-ல் 2வது சிறந்த வங்கி விருதை முன்னாள் ஜனாதிபதி திரு ராம்னாத் கோவிண்ட் இடமிருந்து பெற்றுள்ளது இது 2021-22 வருடத்திற்காக, ஜனவரி 2023ல் வழங்கப்பட்டது.
- வங்கியானது சிறந்த நிறுவனமாக மிந்ட் W3, விருதை பிப்ரவரி 2023ல் பெற்றது
- வங்கியானது “CGTMSE Achievement Award FY23” விருதை எப்ரல் 23ல் வென்றது. சிறந்த முறையில் தகவல் பரிமாற்றத்திற்காக அளிக்கப்பட்ட ஒன்றாகும் இது.
- வங்கியானது BFSI Award 2023 எனும் விருதை ஏப்ரல் 23ல் வென்றது. இது உலகெங்கிலும் மந்தவளர்ச்சி நிலை இருப்பினும் வளர்ச்சி நிலை நோக்கி பயணமேற்கொண்டதற்காக வழங்கப்பட்டது.
எங்களது முழு கவனம்:
இந்தியன் வங்கியின் தொலைநோக்குப் பார்வையானது, வங்கிப் பரிமாற்றங்களில் புதியனவற்றைக் கொண்டு வருதலிலும் மற்றும் சேவைகளை வழங்குதலிலும், தொழில்நுட்ப நுணுக்கங்களை வழங்கலிலும், எளிய முறையில் வர்த்தகத்தை நடத்திக் கொடுப்பதிலும், இவற்றை எல்லாம் வங்கி ஊழியர்களது ஈடுபாட்டிலும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதல் கொண்டு நடைமுறைப்படுத்துவதிலும், ஓரு நிரந்தரத் தன்மையுடன் மாறுபட்ட வழங்குமுறைகளில் கொடுப்பதிலேயே இருந்து வந்திருக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் வசதியான வங்கி அனுபவத்தைப் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் தயாரிப்புகளின் வரிசையை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே கிளிக்கில், ஒருவர் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம் எ.கா. அக்ரி ஜூவல், ஷிஷு முத்ரா, தனிநபர் கடன், MSME & KCC கடன்கள் புதுப்பித்தல், வைப்பு மற்றும் சேமிப்பு கணக்கு போன்றவை. குறைந்த செலவில் டெபாசிட்களைப் பெற, இந்தியாவின் முக்கிய நகரங்களில் மதிப்புமிக்க கார்ப்பரேட்டுகள் மற்றும் அரசாங்கத்திற்கு தனிப்பயனாக்கப்பட்ட சேவையை உறுதி செய்வதற்காக வங்கிக் கிளைகளை நிறுவியுள்ளது.
தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நிதித் திட்டங்களின் முழு வரம்பையும் ஒ்ரே தளத்தின் கீழ் வழங்குவதன் மூலமும், எங்களின் வாடிக்கையாளர்களை எப்போதும் வளர்ந்து வரும் நிதித் துறையில் செழிக்கச் செய்வதன் மூலமும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் நம்பகமான கூட்டாளராக நாங்கள் இருக்கிறோம்.