கார்னியர் நிறுவனத்தின் முதல் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மையம் சென்னையில் திறப்பு.!

சென்னை 22 நவம்பர் 2022 கார்னியர் நிறுவனத்தின் முதல் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மையம் சென்னையில் திறப்பு.!

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அழகான பேக்கிங்காக மாற்ற ஒருங்கிணைப்பு.

  • அழகாகப் பேக்கிங்க் செய்யும் முனைவில் தன்னை அர்ப்பணித்துள்ள முதல் மையம் என்பதுடன் முதலாண்டே 2000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை ‘பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச்’ என்னும் அமைப்புடன் இணைந்து சேகரிக்கும். உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த 2000க்கும் மக்களுக்கு ஆதரவு.
  • அமேசான், மிந்த்ரா உள்ளிட்ட மின்வணிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் கார்னியர் நிறுவனம், இத்தளத்தின் வழியே, ‘பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச்’ அமைப்பு மூலம் வாங்கும் ஒவ்வொரு கார்னியர் பொருளுக்கும், இரு பிளாஸ்டிக்  பாட்டில்களை மறுசுழற்சி செய்யும்
  • சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், கார்னியரின் ஐகானிக் ஹேர்கேர் அல்ட்ரா டூ ரகத்தின் 100% மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பேக்கேஜிங்களுக்காக ஒருங்கிணைக்கப்படும்.

சென்னை: 2022 நவம்பர் 22 : உலகின் மிகப் பெரிய அழகு சாதனங்களின் பிராண்டான கார்னியர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தனது உறுதிமொழியை வலுப்படுத்தும் வகையில், சென்னையில், பிரத்யேகப் பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் மையத்தைத் தொடங்க உள்ளது.  பிளாஸ்டிஸ் ஃபார் சேஞ்ச் என்னும் சமூக அமைப்புடன் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்துச் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முனைந்துள்ளது. முதல் வருடத்தில், கடலில் கலக்கவுள்ள 2000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை தடுத்து மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் உள்ளூர் சமூகங்களைச் சேர்ந்த 2000 மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ இருக்கிறது. சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கார்னியர் நிறுவனத்தின் ஐகானிக் ஹேர்கேர் அல்ட்ரா டூ ரகப் பொருள்களுக்கான பேக்கேஜிங் பயன்பாட்டுக்காக ஒருங்கிணைக்கப்படும்.

Read Also  அரக்கோணத்தில் 400 ஏக்கர் பரப்பில் தொழிற்பூங்கா திட்டத்தை தொடங்கும் ஜி ஸ்கொயர்!

முதல் முறையாக அல்ட்ரா டூ பாட்டில்கள் 100% மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக்களால் தயாரிக்கப்படும்.  இவற்றுள் 30% கடலில் கலக்க இருந்த பிளாஸ்டிக் கழிவுகளாகும். 

சேகரிப்புச் சேவைகள் அணுக்கம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், கார்னியர் பிளாஸ்டிக் சேகரிப்பு கியாஸ்குகளைச் சென்னை, மும்பை, தில்லி உள்ளிட்ட 20 முக்கிய இடங்களில் நிறுவ உள்ளது.  இதன் மூலம் நுகர்வோர் #ஓன்க்ரீன்ஸ்டெப் (OneGreenStep) கொள்கையில் தாங்களாகவே ஈடுபடுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுவர். மின் வணிகக் கூட்டாளிகளான அமேசான் மற்றும் மிந்த்ரா ஆகியோருடனும் இணைந்து, இத்தளங்களில் வாங்கப்படும் ஒவ்வொரு காரினியர் பொருளுக்கும், பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் மூலம், இரு பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்படும். 

இது குறித்து கார்னியர், லே’ஓரியல் – குளோபல் பிராண்ட் தலைவர், ஏட்ரியன் கோஸ்காஸ் கூறுகையில் ‘அழகு சாதனங்கள் தயாரிக்கும் உலகின் முன்னணி பிராண்ட்களுள் ஒன்றான கார்னியர் நிறுவனம் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்காத நிலையான அழகுக்கான அணுக்கம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், இந்தப் பூமியின் மீது ஆக்கப்பூர்வ விளைவை ஏற்படுத்த உதவும் தனித்துவமான வாய்ப்பைப் பெற்றுள்ளது. உங்களுக்கும், பூமிக்கும் நலமளிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், கார்னியர் க்ரீன் ப்யூட்டியுடன் அழகுத் துறையின் இயக்கத்தை மாற்ற விரும்புகிறோம்.  பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் உள்ளிட்ட சமூக அமைப்புகளுடன் கைகோர்த்து பூமியின் மீது ஆக்கப்பூர்வ விளைவை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளோம்.  அந்த வகையில் பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் அமைப்புடனான கூட்டாண்மை மூலம் எங்களது மைல்கல் சாதனையாகச் சென்னையில் பிரத்யேகப் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு மையத்தைத் திறந்துள்ளோம்.  இந்தப் புதிய மையம் மூலம் சுற்றுச்சூழலில் மட்டுமின்றி உள்ளூர் சமூகத்திலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவோம் என நம்புகிறோம்’ என்றார்.

Read Also  இந்தியா தான்சானியா வர்த்தக ஆணையம் துவக்க விழா நடைபெற்றது.

பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் சிஇஓ / நிறுவனர் ஆண்ட்ரூ ஆல்மேக் பேசுகையில் ‘பிளாஸ்டிக் கழிவுகளை மூலப் பொருளாகப் பயன்படுத்தி அந்த பகுதி வாசிகளுக்கு கண்ணியமான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண  வேண்டும் என்னும் நோக்கத்துடன் ‘பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச்’ தொடங்கப்பட்டது. மறுசுழற்சி விநியோகச் சங்கிலியின் அடிப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக்ஸ் கழிவு சேகரிப்பாளர்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை உருவாக்குகிறோம். 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் கழிவு சேகரிப்பாளர்களை நியாயமான வர்த்தக விநியோகச் சங்கிலிகள் மூலம் இணைப்பதே எங்கள் குறிக்கோள். இந்த சேகரிப்பு மையம், இயற்கையை பாதிக்காத அழகு பயணத்தில், பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் மற்றும் கார்னியருக்கான ஒரு முக்கிய மைல்கல் ஆகும்

2020 தொடங்கி கார்னியர் நிறுவனம் பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் அமைப்புடன் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து, மறுசுழற்சி செய்து வருகிறது. இதன் மூலம் அமைப்பு சாரா பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள் சேகரிப்பாளர்கள், கழிவுப் பொருள்கள் தொழில் முனைவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நிலையான வருமானம் பெறவும், வாழ்வாதாரம் மேம்படவும் உதவியுள்ளது. 2020 முதல் கார்னியர் 539+ டன் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்ததன் மூலம் 3200க்கும் அதிகமானோர்  பயனடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *