நடிகர் கார்த்தி நடிப்பில் வெளி வந்த வெற்றித் திரைப்படமான விருமன் தமிழ் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை பிரைம் வீடியோ அறிவித்துள்ளது.!!

சென்னை 07 செப்டம்பர் 2022  நடிகர் கார்த்தி நடிப்பில் வெளி வந்த வெற்றித் திரைப்படமான விருமன் தமிழ் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை பிரைம் வீடியோ அறிவித்துள்ளது.!!

எம் முத்தையா எழுதி இயக்கி, பிரகாஷ் ராஜ், கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி மற்றும் ராஜ் கிரண் நடித்துள்ள விருமன் படம் செப்டம்பர் 11 அன்று பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது.

பிரகாஷ் ராஜ் மற்றும் கார்த்தி ஆகியோர் தந்தை-மகன் வேடத்தில் நடித்துள்ள இத் திரைப்படத்தை இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள்

செப்டம்பர் 11 முதல் காணமுடியும்.

சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத்தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்கு முன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 1499 என்ற கட்டணத்தில் Prime மெம்பர் சந்தாவில் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்குச் சந்தா செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் விருமன் திரைப்படத்தைக் கண்டு ரசிக்க முடியும். Prime Video மொபைல் பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும்.

இந்தியா, 07 செப்டம்பர் 2022 –பொழுதுபோக்குச் சித்திரமான அம்சமான விருமன் திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் பிரீமியரை பிரைம் வீடியோ அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், செப்டம்பர் 11, 2022 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் பஇத்திரப்படத்தைக் கண்டு ரசிக்கலாம். எம்.முத்தையா எழுதி இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் கார்த்தி ஆகியோர் முக்கிய கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர், மற்றும் அதிதி ஷங்கர், சூரி மற்றும் ராஜ் கிரண் ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் பல முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர்.

Read Also  கலர்ஸ் தமிழின் பிரபல “போட்டிக்குப் போட்டி” கேம் ஷோவின் இறுதிச் சுற்றில் வெற்றிவாகை சூடிய “வள்ளி திருமணம்” குழு!!

நிஜ வாழ்க்கையில் என்னை விட முற்றிலும் மாறுபட்ட மற்றும் நேரேதில் குணம் கொண்ட தந்தை முனியாண்டி கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது” என்று பிரகாஷ் ராஜ் கூறினார்.  “இதுவரை இம்மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்ததில்லை, கார்த்தி மற்றும் அதிதி போன்ற கடின உழைப்பும் திறமையும் கொண்ட கலைஞர்களுடன் இணைந்து நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இத்திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் காட்சி மூலம், பார்வையாளர்கள் இப்படத்தை உலெகெங்கும் உள்ள பலரும் கண்டு மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

விருமன் ஒரு சிறந்த அனுபவம், அது என் மனதில் நீண்ட காலம் தாக்கம் ஏற்படுத்தும். பிரகாஷ் சாருக்கும் எனக்கும் மிகவும் சிறந்த மற்றும் மகிழ்ச்சியான உறவு இருக்கும் நிலையில் திரையில் இதற்கு எதிர்மறையான உறவு கொண்டிருப்பது போல நடிப்பது சிறந்த அனுபவமாக இருந்ததுஎன்றார் கார்த்தி. “எங்களை எதிரிகள் போல் காட்டும் இத்திரைப்படம் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கைக் கொடுக்கும். விருமனின் உலகளாவிய டிஜிட்டல் பிரீமியர் மூலம் உங்களை மகிழ்விக்க நாங்கள் வருகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

அறிமுகமாகும் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் சார் மற்றும் கார்த்தி போன்ற சிறந்த நடிகர்களுடன் திரையைப் பகிர்ந்து கொள்வதை விட சிறந்த வாய்ப்பு வேறேதும் கிடையாது” என்று நடிகை அதிதி ஷங்கர் கூறினார். “முத்தையா சாரின் வழிகாட்டுதல், இச்சிறப்புமிக்க கலைஞர்களின் கீழ் இவ்வளவு அழகான ஸ்கிரிப்டில் பணிபுரிந்த பெருமை, ஒவ்வொரு நாளும் ஒரு கற்றல் அனுபவமாக மாறியது. இவ்வளவு பெரிய வாய்ப்புக்கு நியாயம் வழங்க நான் முயற்சித்துள்ளேன். படத்தின் உலகளாவிய பிரீமியர் பிரைம் வீடியோவில் இப்போது எங்கள் கடின உழைப்பை பார்வையாளர்களுக்கு இடையே எடுத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன். என்று அவர் மேலும் கூறினார்.

Read Also  நான் சின்ன வயதில் நடித்த படம்  'காட்டேரி' படம் குறித்து வரலட்சுமி 'கலகல' பேச்சு!

மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், துணிச்சல் மற்றும் அன்புள்ளம் கொண்ட விருமன் என்ற கிராமத்து இளைஞன் தன் தாயின் தற்கொலைக்கு தன் தந்தை முனியாண்டி தான் காரணம் என்பதை அறிந்ததும் வீட்டை விட்டு வெளியேறி தனது ஆணவமிக்க தந்தையை தனது பாவங்களுக்கு விலை கொடுக்க வைக்கவும், தனது சகோதரர்களை அவரிடமிருந்து காப்பாற்றவும் போராடுகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியான போது பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து அற்புதமான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *