வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் நவீன தொழில் நுட்பத்தில் திரையிடப்பட்டது!!!

சென்னை 05 செப்டம்பர் 2022 வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் நவீன தொழில் நுட்பத்தில் திரையிடப்பட்டது!!!

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளினை முன்னிட்டு “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் நவீன தொழில் நுட்பத்தில் திரையிடப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளினை முன்னிட்டு அன்னாரின் புகழுக்கு, மேலும் பெருமை சேர்க்கின்ற வகையில் 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.

சென்னையில் அன்னாரின் திருவுருவச் சிலை நிறுவப்படும், ஒட்டப்பிடாரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்திலும், திருநெல்வேலியில் உள்ள அன்னாரின் மணிமண்டபத்திலும் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்படும்.

வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படத்தினை இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் மீட்டுருவாக்கம் செய்து திரையிடப்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் மீட்டுருவாக்கம் செய்து, அன்னாரின் 151-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (05.09.2022) காலை 10.30 மணிக்கு திரையிடப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின், வாழ்க்கை வரலாற்றை அறிந்திடும் வகையிலும், சுதந்திரப் போராட்டத்திற்காக அவர் செயல்பட்ட வீரத்தையும், “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அற்பணித்த தியாகத்தையும் அனைவரும் அனைவரும் அறிந்திடும் வகையில் இத்திரைப்படம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக காட்சியினை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Read Also  நீட் விலக்கு மசோதா விவகாரம்: தேவைப்பட்டால் மீண்டும் அனைத்துக்கட்சி  கூட்டம் சட்டசபையில் தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!

மேலும், நாளை (06.09.2022) காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2.00 மணிக்கும் என இரண்டு காட்சிகளாக நவீன முறையில் (Digital) (Digital) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் திரையிடப்படவுள்ளது.

அனுமதி இலவசம். அனைவரும் கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *