தமிழகத்தில் விதிகளை மீறி செயல்படும் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

சென்னை 23 மார்ச் 2022 தமிழகத்தில் விதிகளை மீறி செயல்படும் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன், தமிழ்நாட்டில் பல சுங்கச் சாவடிகள் விதிகளை மீறி செயல்படுகிறது என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008 சட்டப்படி, 60 கி.மீ. குறைவான இடைவெளியில் செயல்படும்.

தமிழகத்தில் 6
சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

தொல்.திருமாவளவனின் கோரிக்கையை ஏற்று சுங்கச் சாவடிகள் அகற்றுவதற்கான அறிவிப்பை நிதின் கட்கரி வெளியிட்டார்.

அதன்படி, 60 கிலோ மீட்டர் தொலைவுக்கும் குறைவாக உள்ள சுங்கச் சாவடிகள் 3 மாதத்திற்குள் அகற்றப்படும் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்தார்.

இதை அடுத்து, தமிழ்நாட்டில் சூரப்பட்டு- வானகரம் இடையிலான 19.5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ள 2 சுங்கச் சாவடிகள், ஆத்தூர் – விக்கிரவாண்டி இடையிலான 43 கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ள 2 சுங்கச்சாவடிகள், விக்கிரவாண்டி – செங்குறிச்சி இடையிலான 26 கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ள 2 சுங்கச்சாவடிகள், செங்குறிச்சி – திருமந்துரை இடையிலான 52.5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் 2 சுங்கச்சாவடிகள், சமயபுரம் – பூதக்குடி இடையிலான 43.4 கிலோ மீட்டர் தொலைவிற்குள் 2 சுங்கச் சாவடிகள், பள்ளிகொண்டா – வாணியம்பாடி இடையிலான 50 கிலோ மீட்டர் தொலைவிற்குள் 2 சுங்கச்சாவடிக்குள் ஆகியவை விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது.

Read Also  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன், அமெரிக்கா செல்கிறார்.

தமிழகத்தில் மொத்தம் சுமார் 50 சுங்கச் சாவடிகளில் 6 விதிகளை மீறி செயல்படுவது தெரிய வந்துள்ளது.

இதை அடுத்து விதிகளை மீறிய சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பால் தமிழ்நாட்டில் 6 சுங்கச்சாவடிகள் மூடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த தமிழக அமைச்சர் எ.வ.வேலு சென்னை புறநகரில் வானகரம் உள்பட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சுங்கச்சாவடி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published.